உங்கள் பாதங்களை மிருதுவாக்க இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க!

உங்கள் பாதங்களை மிருதுவாக்க  இதை கொஞ்சம் ட்ரை பண்ணுங்க!

எலுமிச்சை தோல்
ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் சாற்றினை எடுத்துவிட்டு, அதனுடைய தோலை இரவில் தூங்குவதற்கு முன், குதிகால்களில் வைத்து, சாக்ஸை போட்டுக் கொள்ள வேண்டும். இதே போல் தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், குதிகால் வெடிப்புக்கள் மற்றும் ஆணிகள் பாதங்களை மறைந்து விடும்.


விளக்கெண்ணெய் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கப் ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் சரிசம அளவில் கலந்து, கொள்ள வேண்டும். பின் அந்தக் கலவையை 15 நிமிடம் பாதங்களில் தேய்த்து ஊறவைத்து, மெருகேற்ற உதவும் கல்லால் தேய்த்து நீரில் கழுவி விளக்கெண்ணெயைத் தடவ வேண்டும். இதே போல் 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், பாதங்களில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.


வெங்காயம்
ஒரு வெங்காயத்தை துண்டாக நறுக்கி, அதில் வினிகரை ஊற்றி பகல் முழுவதும் ஊற வைத்து, இரவில் உறங்கும் முன், அதை குதிகால் வெடிப்பு உள்ள இடத்தில் வைத்து, சாக்ஸ் அணிந்து உறங்க வேண்டும். இதே போல தினமும் செய்து வந்தால், விரைவில் பாதங்களில் இருக்கும் வெடிப்புகள் மறைந்து பாதங்கள்(feet) மிகவும் அழகாக இருக்கும்.


பிரட்
கெட்டுப் போன பிரட்டை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, பின் அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மற்றும் ஆணிகள் நீங்கி பாதம் அழகாக இருக்கும்.


பேக்கிங் சோடா
மூன்று டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் போட்டு, அந்த நீரில் கால்களை ஊற வைத்து, பின் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்புகள் நீங்கி, பாதங்கள்(feet) மென்மையாகும்.


அன்னாசி
தினமும் இரவில் தூங்கும் முன்பு, அன்னாசி பழத்தை குதிகால் வெடிப்பு பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் விரைவில் மறைந்து விடும்.


வழுவழுப்பான பாதங்களை பெற
பாதங்களிலுள்ள சொரசொரப்பு நீங்க : ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது.
கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும். மென்மையான பாதங்களாக திகழும். தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெயை பாதங்களை தேயுங்கள். சொரசொரப்பான பாதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.


மிருதுவான பாதங்கள்(feet) கிடைக்க : தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில் தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும்.
வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், மென்மையான பாதங்கள்(feet) கிடைக்கும்.


வெடிப்பு மறைய : மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள். 10 நிமிடன்ம் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்.


கற்றாழையில் இருக்கும் சதைபகுதியை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்பு சரியாகிவிடும்.


உருளைக் கிழங்கி சாறினை எடுத்து பாதங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து குதிகால்கள் அழகு பெறும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.


பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo