நாள் முழுவதும் அற்புதமான வாசனையோடு இருக்க சிறந்த வாசனைத்திரவிய வித்தைகள் (perfume hacks)!!

நாள் முழுவதும்  அற்புதமான வாசனையோடு  இருக்க சிறந்த வாசனைத்திரவிய வித்தைகள்  (perfume hacks)!!

யாருக்குதான் வாசனை பொருட்கள் பிடிக்காது ? உங்கள் திரவியங்களின் நறுமணத்தை  நீண்ட நேரம் உங்களுடன் தக்கவெக்க ஆசையா? நீங்கள் இதுவரை உங்கள் பரிமளத்தை (perfume) எப்போதும் போல தெளித்து கொண்டு இருந்தீர்கள் என்றால் அது முற்றிலும் தவறு! நீங்கள் ஆசையாய் தேடி கண்டு பிடித்த உங்கள் தனித்துவத்தை காட்டும் பரிமளம் உங்களுக்கு முழுமையாக பயனில்லாமல் போக வாய்ப்புள்ளது! அதை நீண்ட நேரம் தக்கவைக்க நாங்கள் இங்கே சில குறிப்புக்கள் மற்றும் வித்தைகளை(tricks/hacks)  அளிக்கிறோம்.ஏனெனில் ஒரு நல்ல வாசனை உங்களின் ஆளுமையை முன்வைக்கிறது.


இதை பின்பற்றினால் இனி நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சி உடன் இருக்கலாம் . மேலும் உங்களுக்கு பிடித்த நறுமணம் அதிக நேரம் நீடிக்கும் ! 1) துடிப்பு பகுதிகளை குறி கொள்ளவும் -


pexels-photo-1713065


 கடைகளில் மற்றும் டிவி விளம்பரங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் பேர்ஃபியூம் அடிப்பதை பார்த்து நீங்களும் அதைபோல அடிப்பதை நிப்பாட்டுங்கள். உங்கள்  உடம்பில் வெப்பமாக இருக்கும் பகுதிகள் அதாவது கழுத்தின் பின், மணிக்கட்டு, அக்குள், முட்டியின் பின்,காதோரம் தெளிக்க வேண்டும். இங்குள்ள வெப்பம் உங்கள் பரிமலத்தின் சக்தியை வாசனையை அதிகரித்து நீடித்து தங்கும்.2)பேர்ஃபியூம் வைக்கும் இடம் -


நீங்கள் பரிமளத்தை அதிகமாக பாத்ரூமில் அல்லது வேறு அதிக ஈரப்பதத்தை கொண்ட இடங்களில் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை உடனே மாற்றி விடுங்கள். சூடான வெப்பநிலையில் உங்கள் பரிமலத்தின் மூலக்கூறுகள் மற்றும் அம்மைப்புகளை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இதை ஒரு வறண்ட அல்லது குளிர்ந்த இடத்தில் வைப்பது அவசியம்.  3)பல அடுக்குகள் தெளிக்க கற்று கொள்ளுங்கள் -


pexels-photo-965990


உங்கள் படைப்புக்களை நீங்கள் இதில்  காட்டும் அளவிற்கு, பல பேர்ஃபியூம்கலை உபயோகிக்கலாம். ஆம்! முதலில் உங்களுக்கு பிடித்த ஒரு வலுவான வாசனை உள்ள பரிமளத்தை தெளித்து அதற்கு மேல், மற்றோரு இலகுவான பரிமளத்தை தெளிக்கலாம். இதில் எந்த நறுமணம் எந்த மற்றோன்றுடன் நிறைவடையும்  என்று நீங்கள் நன்கு கண்டறிய வேண்டும். இது முழுக்க உங்களின் விந்தையான விருப்பங்களை காண்பிக்கும்! நீங்கள் அணிந்திருக்கும் நறுமணம் என்ன வென்று மற்றவர்கள் கேட்கும் அளவிற்கு தூண்டுங்கள்! தயாரா?


மேலும் படிக்க - உங்கள் திகைப்பூட்டும் ஒப்பனையில் சீசனிற்கு ஏற்ற சில லிப்ஸ்டிக் வகைகள்


4)டிஸ்ஸு பேப்பரின் வித்தை -


உங்கள் வட்ராப்பில் நீங்கள் அணியும் எல்லா உடைகளிலும் பெரும்பாலும் உங்களுக்கு பிடித்த நறுமணமும் இருந்து கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?! அதற்கு எங்களிடம் இருக்கிறது ஒரு அற்புதமான தீர்வு. ஒரு டிஸ்ஸு பேப்பரில் உங்கள் பரிமளத்தை நன்றாக தெளித்து அதை உங்கள் துணிகளின் அடியில் விரித்து விடுங்கள். அதன் மேல் உங்கள் உடைகளை அடுக்குங்கள் . இது உங்கள் நோக்கத்தை எளிதில் அடைய ஒரு சிறந்த வழி.


5)லோஷனை  தடவி பேர்ஃபியூமை  அடிக்கவும் -


pexels-photo-286951


உங்கள் உடம்பில் மொய்ஸ்சுர்  அதிகம் இருந்தால் அது உங்கள் பரிமளத்தின் நறுமணத்தை சீல் செய்து அதிக நேரம் நீடிக்க உதவுகிறது. எனவே, ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசர் அல்லது வாசிலினை மேற் சொல்லப்பட்ட பல்ஸ் பாயிண்டில் தடவுங்கள் . அதன் மேல் உங்கள் வாசனை பொருளை தெளித்து   விடுங்கள்! இதை நீங்கள் குளித்து முடித்த உடனே உடைகள் அணிவதற்கு முன்னே தெளிப்பதும் சிறந்தது. இதனால் உங்கள் ஆடைகள் மற்றும் அணிகலன்களையும் பாதுகாப்பது மட்டும் இல்லாமல்  உடம்பில் இருக்கும் வெப்பம் பரிமளத்தின் வாசனையை லாக் செய்து  அதிக நேரம் நீடிக்க உதவும்.


6) கூந்தலில் தெளிக்க -


அதிக நேரம் உங்கள் வாசனை பொருளின் நறுமணம் உங்கள் மீது நீடிக்க  , உங்கள் கூந்தலில் அதற்கேற்ற பரிமளத்தை தெளிக்கவும். இங்கே நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் - எல்லா பரிமளமும் சருமம் மற்றும் கூந்தலுக்கு ஏற்றதாக இருக்காது. அதனால் , உங்கள் கூந்தல் வறண்டு போகாதபடி இருக்கும் பொருட்களை தேர்தெடுத்து பூசுங்கள். இது உங்களை மேலும் ஈர்க்கவைக்கும் தோற்றத்தில் காட்ட உதவும்!7)தேய்க்காமல் தொட்டு  எடுங்கள் -


pexels-photo-1711800


சரி.. ஒரு பேர்ஃபியூம் நீண்ட நேரம் நீடிக்க, எங்கே தெளிப்பது , எப்படி தெளிப்பது, எங்கே ஸ்டோர்  செய்வது, என்று பலவிஷயங்களை பார்த்தோம். இப்போது, அடித்த உடன் என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம். எந்த ஒரு பரிமளத்தையும் அடித்த உடன் தடவினால் அதன் மூலக்கூறுகள் பாதிக்க வாப்புகள் உள்ளது. இதனால் அதிக நேரம் நீடிக்கும் வாசனை கூட குறைந்து விடும். அதனால் தெளித்த உடனே அது காய்ந்து போகும் வரை பொறுத்திருங்கள்.. மறதியில் தேய்த்து விடாதீர்கள்.


இனி நீங்கள் அவசரமாக வெளியில் செல்லவேண்டும் என்றால், சிறிது மொய்ஸ்சுரைசர் தடவி முக்கிய இடங்களில் மட்டும் பரிமளத்தை தெளித்து செல்லலாம். இது உங்களை அட்டகாசமாக காட்ட உதவும்! 


giphy


படங்களின் ஆதாரங்கள் - பிக்ஸாபெ,ஜிபி,பேக்செல்ஸ் 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.