காதல் நெஞ்சே நெஞ்சே... உங்கள் நெஞ்சம் பேசும் காதல் மொழி என்ன என்பதை நீங்கள் அறிந்ததுண்டா

காதல் நெஞ்சே நெஞ்சே... உங்கள் நெஞ்சம் பேசும் காதல் மொழி என்ன என்பதை நீங்கள் அறிந்ததுண்டா

உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் காதல் இருக்கிறது. காதலிக்க மனம் இருந்தால் போதுமானது. ஏனெனில் காதல் என்பது இயற்கை நமக்காக கொடுத்த உயர்ந்த சக்தி. இதனை சரியாக உபயோகித்து அடுத்த நிலைக்கு உயர்வதும் அல்லது தவறாக உபயோகித்து மேலும் கடைநிலைக்கு செல்வதும் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.


காதலை வெளிப்படுத்துவதில் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு வகை உண்டு. மனிதனுக்கு 5 வகையான மொழிகள் (language) இதற்கென இயற்கை வடிவமைத்திருக்கிறது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதமும் தங்கள் காதலை வெளிப்படுத்துவதில் இவற்றில் ஏதோ ஒன்றைத்தான் கடைபிடிக்கின்றன. இதில் உங்கள் மொழி என்ன உங்கள் காதலர் மொழி என்ன என்பதை நீங்கள் அனுமானிக்க முடியும்.                     


இதில் உங்கள் சந்தேகத்தை போக்க பல எளிமையான வழிகளில் உங்கள் மொழியைக் கண்டுகொள்ள உதவுகிறோம்.     


உறுதிமொழி காதலர்          


    


தங்கள் துணை எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதைக் கூறுவதன் மூலம் ஒருவர் தன் காதலை நம்பிக்கையுடன் நகர்த்துகிறார்.


அவர்கள் தங்கள் வாழ்வில் வந்ததற்கான நன்றியை அவர்கள் எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார்கள்.                 


தன்னை நேசிக்க தகுதியுடையவர்தான் என்பதை உங்களுக்குத் புரிய வைப்பார்கள்


இந்த உறவு எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்திருப்பார்கள்


உங்களுக்காக எப்போதும் காத்திருப்பார்கள்.


தரமான நேரம் செலவிடுதல்   


                 


இந்தக் காதல் மொழியைக் கொண்டிருக்கும் துணை தங்கள் துணையோடு அதிக நேரம் செலவிடுவதில் சந்தோஷம் கொள்வார்கள். மற்ற எல்லாரையும் விட நீங்கள் முக்கியமானவர் என்பதை அவர்கள் உணர்த்துவார்கள்.


விடுமுறைகளை ஒன்றாக கழிப்பது , அல்லது ஒரு குழுவோடு இணைவது அவர்களோடு பல விளையாட்டுகளில் உங்களைக் கலந்து கொள்ள வைப்பது என இதன் தன்மை ஆளுக்காள் மாறுபடலாம்.


சேவை மனப்பான்மைஉங்கள் துணையின் தேவை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருபவரா நீங்கள் அப்போது நீங்கள்தான் இந்த சேவகி காதலி மொழி கொண்டவர்.


சமைத்து பரிமாறலாம் , காய்கறிகள் வாங்கி வரலாம், அவர்கள் பொருட்களை அடுக்க உதவலாம், உங்கள் திறமைகளை உபயோகித்து அவர்களுக்கு எல்லா வழியிலும் உறுதுணையா நிற்கலாம் இதெல்லாம் இவர்களின் குணங்கள்.


உடல் ஸ்பரிசம்காதலை நாடும் அனைவருமே காமத்தை தேடுபவர்கள்தான் என்றொரு நம்பிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. ஆனால் அப்படி செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.


இந்த மொழி உடையவர்கள் ஒரு வெதுவெதுப்பான அணைப்பு, கதகதப்பான சாய்தல், அல்லது அதையும் விட கொஞ்சம் அதீதமான ஸ்பரிசங்கள் இதனை நிரூபிக்கலாம். அல்லது வெறுமனே அருகருகே அமர்ந்தும் இருக்கலாம். இது ஒரு அன்யோன்யத்தையும் சார்புத்தன்மையயும் பிரதிபலிப்பவர் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்கிறது.


பரிசு பெறுதல்உங்களை போன்ற ஒரு துணையிடம் இருந்து அதிக பரிசு பொருட்கள் பெறுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? இது போன்ற மொழி கொண்டவர்கள் தங்கள் செயல்களை அங்கீகரிக்க விரும்புவராக இருப்பார்கள். இப்படி பரிசுகளை வாங்கினால் மட்டுமே தன் மேல் தன் துணை அக்கறையோடு இருப்பதாக நம்புபவர்கள் இந்த காதல் மொழிக்காரர்களாக இருப்பார்கள்.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.