எதிர்மறை எண்ணம் கொண்டவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!

எதிர்மறை எண்ணம் கொண்டவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்!

ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி ஒரு மனிதர் எவ்வாறு உணர்கிறார், சிந்திக்கிறார், அதுதொடர்பாக அவரது நடத்தைகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே, ஒரு தனிமனிதனின் குணநலன் தீர்மானிக்கப்படுகிறது.


இந்த உலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கையில், அவர்களில் ஏன் வெகு சிலர் மட்டுமே வெற்றியடைகிறார்கள்? என்ற கேள்விக்கு மிக எளிதான விடையை அளிக்கலாம். வெற்றியடைபவர் நேர்மறை சிந்தனையையும், தோல்வியடைபவர் எதிர்மறை சிந்தனையையும் கொண்டுள்ளனர்.


உதாரணமாக, தாகம் கொண்ட ஒரு மனிதர், ஒரு வீட்டில் நுழைகையில் அவருக்கு பாதியளவு தண்ணீர் நிரம்பிய ஒரு தம்ளர் தரப்படுகிறது. அதைப் பார்த்ததும் அவர் திருப்தியடைந்தால், அவர் நேர்மறை எண்ணம்(negative) கொண்டவர் என்று அர்த்தம். மாறாக, அதிருப்தியடைந்தால், எதிர்மறை எண்ணம்(negative) கொண்டவர் என்று அர்த்தம். ஏனெனில், திருப்தியடைபவர், பாதியளவு தண்ணீர் நிரம்பியுள்ளதைப் பார்க்கிறார். எதிர்மறை எண்ணம்(negative) உள்ளவரோ, அந்த தம்ளர் பாதியளவு காலியாக இருப்பதைப் பார்க்கிறார். எனவே எதிர்மறை எண்ணம் உள்ளவரைவிட, நேர்மறை எண்ணம்(negative) உள்ளவர் சிறிய விஷயங்களில் அதிக திருப்தியடைகிறார்.


எதிர்மறை எண்ணம்(negative) நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை ஓழிக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம். அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது.


எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.


எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.


1. தியானத்தில் அமருங்கள்
ஒரு அமைதியான இடத்தில் உங்களது கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் அமருங்கள். இடையுறுகள் இல்லாத இடங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.


2. புன்னகை
கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.


3. நண்பர்கள்
முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.


4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்
சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.


5. குறைகூறாதீர்கள்
உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.


6. உதவுங்கள்
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.


7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.


8. பாடுங்கள்
உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.


9. நன்றி கூறுங்கள்
ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.


10. இரசனை
உங்களது சிந்தனைகள் உங்களுக்கு எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை சிந்தியுங்கள். நீங்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது மற்றும் சுவைப்பது அனைத்தையும் இரசித்து செய்யுங்கள்.


எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..


உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.


உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.


உங்கள் செயல்களை கவனியுங்கள்,அது பழக்கமாக மாறக்கூடும்.


உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.


உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo