மனிதனைப் பற்றும் நோய்களில்(cancer) மிக முக்கியமான இடத்தைக் கைப்பற்றி இருப்பது புற்று நோய்தான். மருத்துவத் துறைக்கு சவால் விடுவது போல இன்றளவில் ஆண்டொன்றுக்கு 25 லட்சம் பேர்களை இந்நோய் பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் அதனை முற்றிலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியவில்லை.
நாகரீகத்தில் மோகம் கொண்டு செயற்கை வாழ்விலும், இயற்கைக்குப் புறம்பான உணவிலும் ஊறிக் கிடக்கும் சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு பெரும் புயல் என்றுதான் கூற முடியும்.
விஞ்ஞானம் என்னும் தந்தைக்கும் நகர வளர்ச்சி என்னும் தாய்க்கும் பிறந்த குழந்தைதான் புற்று நோய் ஆகும். இன்று இது ஒரு தவிர்க்க முடியாத பிரச்சனையாகத் திகழ்கிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் புற்று நோயைப் பற்றி எவருக்கும் அதிகம் தெரியாத நிலையில் இருந்தது. ஆனால் இன்று யாரை எந்த நேரத்தில் வந்து தாக்குமோ என்ற பீதியில் அன்றட வாழ்க்கையில் மன அமைதியை இழந்து வரும் அவல நிலைக்கு மக்களை மாற்றியிருக்கிறது.
தோல்வியுறும் சோதனைகள்:
கதிர் பாய்ச்சும் முறை, ரேடியம், ஈமோதெராபி, இம்யூனோ தெராபி போன்ற எந்த சிகிச்சை முறைகளாலும் இந்நோயை முழுவதும் அழிக்க இயலவில்லை. பயாப்சி மற்றும் பலவித சோதனைகளுக்குப் பின் கேன்சர்தான் என்று தீர்மானிக்கப்படும்முன் பரவி விடுகின்றது.
விலங்குகளை வகை செய்து நடத்திய சோதனைகளாலும், உயிருள்ள மனிதர்களைக் கொண்டு நடத்திய அறுவை சிகிச்சை முறைகளாலும் இந்நோய்க்கு மாற்றுக் காணமுடியவில்லை. மிக ஆரம்ப நிலையில் உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே தடுத்துவிட முடிகிறது. அதுவும் 5 சதவீதந்தான். அவை சிகிச்சையின் போது புற்றுநோய் கழிவானது ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும் வாய்ப்பு இருப்பதால், பின் நாளில் உடலில் அது தோன்றும் எந்த பகுதியை வெட்டியெறிந்தாலும் மற்ற பாகங்களிலும் தொடர்ந்து வளர ஆரம்பித்து விடுகின்றன. புற்றுநோய் வல்லுநர்களில் ஒருவரான டாக்டர் கார்ல்பேக்கர் சந்திரனில் சென்று குடியிருப்பது சுலபம், ஆனால் புற்றுநோய்ப் போராட்டத்தில் வெற்றி பெறுவது கடினம்’ என்று கூறுகிறார். ஆம் பல புதுமையான சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் புற்று நோயை அறவே ஒழிப்பதற்கான ஒரு மருந்தோ சிகிச்சை முறையோ இன்னும் கண்டறியப்படவில்லை என்ற உண்மையை எல்லாரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
புற்றுநோயின்(cancer) இந்த விஸ்வரூபத்திற்கு காரணம் புற்றுநோய் செல்கள் தான். மற்ற நோய்கள் ஒரு சில உறுப்புகளை மட்டுமே பாதிக்கும். ஆனால், புற்றநோய் தான் உடலில் பெரும்பாலான உறுப்புகளில் குடியேறி உடலை உருகுலைக்கும். அதனால் தான் இதன் வீரியம் மற்ற நோய்களை விட அதிக அளவில் உள்ளது.
புற்றுநோயின் அபாயத்தில் இருந்து தப்பிக்க சில இரகசிய வழிமுறைகளை புற்றுநோய் மருத்துவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அவை என்னென்ன இரகசிய வழிகள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சம நிலை
எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படாமல் இருந்தாலே மிக எளிதில் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பித்து கொள்ளலாம். இதற்கு உடல் நிலை மற்றும் மன நிலை இரண்டுமே சீராக இருக்க வேண்டும். மன நிலையை சீராக வைக்கவில்லை என்றால் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டு நோய்களின் தாக்கம் எளிதில் நம்மை வந்து சேரும்.
சூரிய ஒளி
புற்றுநோய் அபாயம் மனித உடலுக்கு எளிதில் வருவதற்கு சூரிய ஒளியும் முக்கிய காரணம். உடலில் அதிக அளவு சூரிய ஒளி பட்டால் புற்றுநோயின் தாக்கமும் கூடுதலாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். எனவே, சூரியனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
மெடிட்டேரியன் உணவுகள்
புற்றுநோய் மருத்துவர்கள் பெரும்பாலும் ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவுகளை உண்பார்களாம். இது புற்றநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதே போன்று சாப்பிடும் உணவில் மஞ்சள், ப்ரோக்கோலி, பூண்டு போன்ற உணவுகளை அதிகம் சேர்த்து கொள்வார்களாம்.
மூளை திறன்
எப்போதுமே மூளைக்கு வேலை கொடுத்து கொண்டே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மூளையின் நியூரான்ஸ்களை மிக சுறுசுப்பாக வைக்கும். இதனால் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்து கொள்ள இயலும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உணவுகள்
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை மருத்துவர்கள் அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்வார்களாம். மேலும், அதிக உப்பு மற்றும் அதிக சர்க்கரையை இவர்கள் முழுவதுமாக குறைத்து விடுவார்களாம். கூடவே செயற்கை இனிப்பூட்டிகள், நிறமூட்டிகள் போன்றவற்றை தொடுவது கூட கிடையாதாம்.
பாதுகாப்பற்ற உடலுறவு
புற்றுநோய்(cancer) மருத்துவர்கள் எப்போதுமே பாதுகாப்பான உறவில் மட்டுமே ஈடுபடுவார்களாம். பலருடன் உறைகள் இன்றி உறவு கொண்டால் அவை ஹச்.ஐ. வி பாதிப்பை உண்டாக்கி விடும். ஹச். ஐ. வி வைரஸ் புற்றுநோய் அபாயத்தை மிக எளிதில் நமக்கு உண்டாக்கி விடும். ஆதலால், பாதுகாப்பற்ற உடலுறவை தவிர்த்து விடுங்கள்.
மீன்
இன்றைய கால சூழலில் நல்லதை நாம் வெறுத்து ஒதுக்கி தீயவற்றை அதிக அளவில் எடுத்து கொள்கிறோம். அந்த வகையில் அதிக அளவில் இறைச்சி உணவை நாம் சாப்பிடுகின்றோம். பெரும்பாலும் இந்த வகை உணவுகளை மருத்துவர்கள் தவிர்த்தே வருகின்றனர். மாறாக மீனை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்கின்றனர். இது உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தந்து பலவித பாதிப்பில் இருந்து காக்குமாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
புற்றுநோய் மருத்துவர்கள் தங்களின் உணவில் பதப்படுத்தப்பட்ட உணவுங்களை சேர்த்து கொள்ள மாட்டார்கள். காரணம் இவற்றில் உள்ள கார்ச்சினோஜெனிக் தன்மை தான். இந்த பண்புகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் எளிதில் உருவாக கூடும்.
புகைக்கு பகை..!
புகை பழக்கம் எப்போவாவது இருந்தால் புற்றுநோய் வராது என சிலர் நினைத்து கொள்கின்றனர். ஆனால், இது அப்படி கிடையாது. புகை பழக்கத்தை சோசியலாக வைத்திருந்தால் கூட ஆபத்து தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை மிக உறுதியாக இவர்கள் கடைபிடிக்கின்றனர்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo