வருடத்தின் எல்லா மாதங்களும் செல்லும் வகையில் மிக சிறந்த ஹனிமூன் இடங்கள்!

வருடத்தின் எல்லா மாதங்களும் செல்லும் வகையில் மிக சிறந்த ஹனிமூன் இடங்கள்!

திருமணம் என்பது மனித வாழ்வில் மிக முக்கியம் என்றாலும் அதற்கு நாம் தயார் ஆவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. திருமண ஷாப்பிங், திருமண மேக்கப், திருமண போட்டோ ஷூட்ஸ், திருமண அலைச்சல்கள், திருமண டயர்ட்னஸ் என பல விஷயங்களால் நீங்கள் திருமண கொண்டாட்டத்திற்குப் பிறகு சோர்ந்து போயிருப்பீர்கள்.


அதற்காகத்தான் இந்த தேனிலவைக் ( honeymoon) கண்டுபிடித்திருப்பார்கள் போல. மிக பெரிய திருமண கொண்டாட்டத்திற்கு பிறகு இப்படி ஒரு ஹனிமூன் பிரேக் அவசியம்தான்.


ஆனாலும் அதிலும் நீங்கள் திட்டமிட வேண்டியது முக்கியம் இல்லையா. உங்கள் ஹனிமூன் எங்கே இருக்க வேண்டும் எப்படி உங்கள் பயணம் அமைய வேண்டும் மலைகள் சூழ்ந்த பகுதியை கடற்கரை பகுதியா வெளிநாட்டு பயணமா எல்லாவற்றையும் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.


உங்கள் பட்ஜெட்டிற்குள் ஹனிமூன் நடக்க ஏதுவாக சில இடங்களை நாங்கள் தேர்வு செய்திருக்கிறோம். உங்கள் திருமணம் கடும் வெயிலில் நடந்தாலும் சரி பனிக் காலத்தில் நடந்தாலும் சரி அதற்கேற்ற இடங்களை நீங்கள் தேர்வு செய்து உங்கள் ஹனிமூனைக் கொண்டாட வசதியாக இந்தக் கட்டுரை இருக்கிறது.


சொல்லப் போகும் விஷயங்கள்


இந்தியாவின் சிறந்த ஹனிமூன் இடங்கள்


பட்ஜெட் இடங்கள்


ஆடம்பர இடங்கள்


வெளிநாடுகளில் சிறந்த ஹனிமூன் இடங்கள்


பட்ஜெட் இடங்கள்


ஆடம்பர இடங்கள்இந்தியாவின் சிறந்த ஹனிமூன் இடங்கள்ஹனிமூனை இந்தியாவில் வைத்துக் கொள்வது ஒன்றும் அத்தனை மோசமான முடிவேயில்லை. கிழக்கும் மேற்குமாக பறந்து விரிந்திருக்கும் நம் பாரதத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் அனுபவிக்க வேண்டிய சுகங்கள் ஆயிரம் உண்டு. வெளிநாட்டுக்கு செல்ல நேரம் இல்லாதவர்கள் இந்தியாவை நேசிப்பவர்கள் இந்த இடங்களை பார்வையிடலாம். கடற்கரை ரிசார்ட்டோ அல்லது மலைகளின் குடில்களோ உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கு செல்லலாம்.


பட்ஜெட் இடங்கள்


சிம்லா


மலைகளின் ராணி. ஹனிமூன் செல்பவர்களின் சொர்க்கம். இதெல்லாம் ஷிம்லாவிற்கானது. பரபரப்பான நகர வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு பேரமைதிக்கு நம்மை இட்டு செல்லும் இடம்தான் சிம்லா. இங்கே கோடையை மட்டுமல்ல குளிர்காலத்தையும் காதல் துணையோடு சுகமாகக் கழிக்கலாம். ஓவியம் வரைந்தது போன்ற இதன் பசுமை உங்கள் இருவரையும் மே மறந்து ஒன்றிணைக்கும்.ராஜஸ்தான்


விழாக்காலங்களில் வண்ணமயமானது இந்த ஊர். ஹோலி மற்றும் யானை திருவிழா கொண்டாடப்படும் நாட்களில் ராஜஸ்தான் தேவலோகமாக இருக்கும். பகலில் சிறிது வெதுவெதுப்பாக இருந்தாலும் இரவுகளில் ராஜஸ்தான் அலாதியான சொர்க்கம்தான்.


கோவளம்


இந்தக் கடற்கரையில் கேரளாவின் உப்பங்கழி அழகை கண்டு மகிழலாம். அற்புதமான அஸ்தமன நேரங்களில் உங்கள் துணையுடன் ஒரு கடற்கரை யில் நடப்பது உங்கள் திருமண பந்தத்தின் ஆயுளைக் கூட்டும். ஒரு ஆடம்பர இடத்தை புக் செய்து காதல்மழையில் நனையுங்கள்.


ஆக்ரா


காதலுக்காக மாளிகை கட்டிய இடத்தில உங்கள் ஹனிமூன் எத்தனை பொருத்தமாக இருக்கும் தெரியுமா
முகலாயர்களின் கட்டிடக் கலை அழகை நீங்கள் மூன்று நாட்களில் கண்டு களிக்கலாம் .அதிக நேரம் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை எனும் எண்ணம் கொண்டவர்கள் ஆக்ராவை தேர்ந்தெடுக்கலாம். நிலவின் ஒளியில் தாஜ்மஹாலை உங்கள் துணையின் கைகளை பிடித்தபடி பாருங்கள். உங்கள் காதல் வாழ்க்கை அங்கிருந்து தொடங்கட்டும்.


கோவா


கோவாவில் இருக்கும் சிறப்பம்சமே எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் உங்களுக்கு அங்கே ஒரு இடம் இருக்கும். பட்ஜெட்டா ஆடம்பரமா இரண்டுமே இங்கே செல்லும். கடற்கரையோரம் உங்கள் துணையோடு இருந்து அஸ்தமனத்தை கொண்டாடுங்கள். இங்கு மது அருந்தும் விருப்பம் இருப்பின் செய்யலாம். விலை குறைவு.


பாண்டிச்சேரி


பிரெஞ்சு காலனி அதிகம் உள்ள இந்த ஊர் உங்களை உள்ளூருக்குள்ளேயே வெளிநாட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தரும். கற்கள் கொண்ட கடற்கரையும் வண்ணமயமான வீதிகளும் உங்களை உற்சாகப்படுத்தும். சென்னையில் இருந்து சென்றால் மிக பக்கம். ஆரோவில்லே சென்று ஆன்மிகத்தையும் ருசிக்கலாம். சைக்கிள் அல்லது ஸ்கூட்டி யில் இந்த ஊரை சுற்றி வந்தால் ஊரின் அழகு புரியும்.டல்ஹவுசி


இந்த சிறிய ஸ்விட்சர்லாந்து உங்கள் மந்தை மொத்தமாக கொள்ளையோ கொள்ளும். பைன் மரங்கள் நிறைந்த இந்த இடம் கோடை விடுமுறைக்கு ஏற்றது. பச்சை பசேல் என்கிற மலைகளும் காலனி வடிவத்தில் உள்ள கட்டிடங்களும் உங்கள் அன்பை அழகாக்கும்.


ஆடம்பர இடங்கள்


இந்தியாவில் ஆடம்பரமான இடங்களும் உண்டு என்பதை நீங்கள் இந்த பட்டியல் மூலம் அறிந்து கொள்ள முடியும். ராஜஸ்தானின் கோட்டைகளும், மலைப் பார்வை ஹோட்டல்கள்என பல விதமான ரசனை கொண்ட ஆட்களுக்காகவே இந்தியா பறந்து விரிந்திருக்கிறது.


அந்தமான்


சிறு சிறு தீவுகள் ஒன்றிணைந்த ஒரு பெரும் தீவுதான் அந்தமான். இங்கு போர்ட்ப்ளாய்ர் தொடங்கி எங்கும் அற்புதமான நீலம் எங்கும் கடலென பரவி இருப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஹனிமூன் தம்பதிகள் பார்க்க வேண்டிய தீவு ஹாவ்லக் (havlock ) தீவாகும். இங்கு சூரிய அஸ்தமனம் அற்புதமாக இருக்கும்.


ஸ்ரீ நகர்


காஷ்மீர்.. நினைத்தாலே குளுமை பரவும் இடம். இங்குள்ள கம்பளிகள் குங்குமப்பூ மரங்கள் வெளிர் நிறமான மலைகள் இந்த இடத்தை ஹனிமூன் செல்பவர்களுக்காக அமைக்கப்பட்டது போலவே இருக்கிறது. அங்குள்ள ஐந்து நட்சத்திர ஷெரட்டன் ஹோட்டலில் தங்கலாம் அல்லது தால் ஏரியில் படகு வீட்டில் தங்கலாம் அது உங்கள் ரசனையைப் பொறுத்தது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை இங்கு செல்லலாம்.


ஷில்லாங்


தெளிவான வானம் பசுமை பள்ளத்தாக்கு வானிலை 18ல் இருந்து 21 செல்சியஸ் ஏப்ரல் மாதங்களில் இந்த இடம் ரொமான்ஸ் பூமி, உங்கள் வாழ்க்கை துணையோடு ஒரு நீண்ட நடை பயணம் செல்லுங்கள்,


லடாக் ஏரி


லடாக்கில் மே மாதம் நன்றாக இருக்கும். அந்த நேரத்தில் சூரியன் கதிர்கள் பனிமலைகளில் படும்போது அந்த அழகை காண கண்கோடி வேண்டும்.கூர்க்


கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது கூர்க். இது இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது. காபியின் வாசனை , அழகிய மலைத்தொடர் அதன் பசுமை இந்த இடம் ஹனிமூன் தம்பதிகளுக்கானது என்பதை உறுதி செய்யும்.


உதய்ப்பூர்


ஏரிகளின் நகரமான இந்த உதய்ப்பூர் அமைதியின் சிகரமாக இருக்கும். ஆடம்பரமான தங்குமிடங்களில் ஒரு ராஜவாழ்க்கையை உங்கள் தேனிலவில் வாழும் வாய்ப்பை நீங்கள் பெற முடியும்.


வெளிநாட்டில் சிறந்த ஹனிமூன் இடங்கள்


பட்ஜெட் இடங்கள்


மொரிஷியஸ்


தீவுகளில் நீல நிற நீருக்கு நடுவே வாழப் பிடித்தமானவர் இந்த இடத்தை தேர்ந்தெடுக்கலாம். 25 டிகிரி தட்பவெப்பம் இருக்கும். இங்கு செல்ல ஜூன் ஜுலை ஆகஸ்ட் இங்கு செல்ல சரியான நேரம்.


க்ரோட்டியா


இங்கு செல்ல சரியான மாதம் செப்டம்பர். அப்போது அதிக கூட்டம் இருக்காது. ஆப் சீசன் விலையில் ஹோட்டல்களில் தங்கலாம். இதன் தட்பவெப்பம் எப்போதும் நன்றாக இருக்கும். கொஞ்சம் குளிருக்குத் தேவையான உடைகளை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள்.


பாலி


இந்தியர்களுக்கு பிரபலமான இடம் பாலி. இங்குள்ள கலாச்சாரம் இயற்கை பாரம்பர்யம் அத்தனையும் உங்களுக்கு பிடிக்கும். இங்குள்ள பிரத்யேக கடற்கரைகள் உங்களை கொள்ளை கொள்ளும்.ஸ்ரீலங்கா


புது வருடத்திற்கு செல்ல வேண்டிய இடம் ஸ்ரீ லங்காத்தான். இங்குள்ள வானிலை அற்புதமாக இருக்கும். எப்போதும் விழாக்காலம் இருக்கும்.


பூடான்


நம் பக்கத்து நாடு. இங்குள்ள மலைகள் இமயமலைக்கு போட்டியானவை. இங்கு எளிமை மற்றும் வாழ்தலின் கொண்டாட்டதை நாம் அறிந்து கொள்ளலாம். சாகசங்களில் விருப்பம் உள்ளவர்கள் இந்த இடத்தை தங்கள் ஹனிமூனுக்கு தேர்ந்தெடுக்கலாம்.


வியட்நாம்


பழையதை பத்திரப்படுத்தி இருக்கும் இந்த நாடு ஹனிமூன் தம்பதிகளுக்கு பொருத்தமானது. கப்பல் பயணங்கள் போட்டிக் ஹோட்டல்கள் இங்கு உள்ளன. மணல் நிறைந்த கடல் அல்லது மலைகள் இங்கு பிரசித்தம். எல்லாவற்றையும் நீங்கள் அனுபவிக்கலாம்.


நேபால்


உலகின் பாரம்பரியமான இடம் என இந்த நாட்டை யுனெஸ்கோ தேர்ந்தேடுத்திருக்கிறது, இங்கே உங்கள் காதல் இதன் அழகில் ஆரம்பிக்கட்டும். ஐரோப்பிய வகை உணவுகள் உணவு விடுதிகள் இங்கு பிரபலம். கண்டிப்பாக உங்களை சந்தோஷப்படுத்தும்.எகிப்து


இங்கு அக்டோபர் மாதம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் வெய்யிலில் நீங்கள் கருகி விடுவீர்கள். இங்குள்ள கலாச்சாரம் அதிசயங்களை ஹனிமூனில் உங்கள் வாழ்க்கை துணையோடு பாருங்கள்.


ஆடம்பர இடங்கள்


ஆஸ்திரேலியா


உலகின் பாதி நாடுகள் குளிரில் உறைந்திருக்கும் சமயம் ஆஸ்திரேலியா சூரியனும் வெளிச்சமும் கொண்டு அற்புதமாக இருக்கும். இங்குள்ள வானிலை 23 டிகிரி இருக்கும். கடற்கரை மலை சரித்திரம் கலாச்சாரம் எனப் பல விஷயங்கள் இங்கு சுவாரஸ்யமானவை. சிட்னியின் இரவு வாழ்க்கை உங்களை அற்புதமாக உணர வைக்கும்.


சவுத் ஆப்பிரிக்கா


மழைக்கு பின்னால் மார்ச் மாதம் இங்கு செல்வது நல்லது. நாடே பசுமையாக இருக்கும் அதுமட்டுமல்ல வலசை பறவைகளை நீங்கள் தரிசிக்கலாம். இயற்கை நேசிப்பாளர்களுக்கான ஹனிமூன் இடம்.


மாலத்தீவுகள்


உங்களுக்கு கடல் பிடிக்கும் என்றால் உங்கள் துணையுடன் கடற்கரையில் கிடைக்க இதுதான் சரியான இடம். இங்கு 27 டிகிரி வெப்பம் இருக்கும். சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட்வரை தங்குமிடங்கள் உண்டு.


நியூசிலாந்து


ஏப்ரல் மாதம் இலையுதிர்காலம் என்பதால் இங்கு செல்லலாம். இங்கு மாலைகள் சிறப்பாக இருக்கும். தண்ணீர் விளையாட்டுக்கள் இங்கு பிரசித்தமானவை. மலைகளும் பள்ளத்தாக்குகளும் தெளிவான வானமும் இந்த நாட்டின் சிறப்புகள்.பிரான்ஸ்


உலகின் ரொமான்டிக் நகரம் பாரிஸ். ஹனிமூனுக்கு கோடையில் இங்கு செல்வது நல்லது. அதிக கூட்டம் இருக்காது . காதல் நகரத்தில் ஈபிள் டவர் முன்பு உங்கள் காதல் வாழ்க்கையை ஆரம்பியுங்கள்.


ஜப்பான்


டோக்கியோவில் 23 டிகிரி வெப்பம் நிலவும். பூக்கள் போது குலுங்கும் மாதம் மே. மலைகள் பசுமை போர்த்தியிருக்கும். இந்த காலத்தில் நீங்கள் ஹனிமூன் கொண்டாடுங்கள் . வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களாக இவை நிலைக்கும்.


துபாய்


சுட்டெரிக்கும் சூரியன் கொஞ்சம் ஓய்வெடுக்கும் மாதமான அக்டோபர் மாதத்தில் நீங்கள் ஹனிமூனுக்கு செல்லலாம். அங்கு நல்ல ஆடம்பர ஹோட்டலில் தங்கி அங்குள்ள பொழுதுபோக்குகளை கண்டு மகிழுங்கள்.


கிரீஸ்


வெள்ளை சுவர்கள் நீல வீதிகள் பூக்களால் வேய்ந்த உடைகள் என இங்கு நீங்கள் ஹனிமூனில் காண நிறைய அழகியல்கள் உண்டு. இங்கு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் இன்ஸ்ட்டா வொர்த்தி.சிங்கப்பூர்


ஆடம்பர நகர வாழ்க்கைக்கு சிங்கப்பூர் தான் சிறந்த உதாரணம். இந்தியாவில் இருந்து விமானம் வழியாக சில மணி நேரங்களில் சென்று விடலாம். வார இறுதிகளில் செண்டோசா தீவுகள் உங்களை வரவேற்கும்.


ஸ்பெயின்


அரோப்பாவின் அழகிய நகரங்களில் இதுவும் ஒன்று. உலக அதிசயம் மட்டுமல்ல அமைதியான இடமும் இங்குதான் உள்ளது. பைலேரிக் தீவுகளில் பலூன் பயணங்கள் மற்றும் பறவை கோண பார்வை விரும்பிகளுக்கு இவ்விடம் பிடிக்கும் .


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.