சோனாக்ஷி சின்ஹாவை போல ஸ்மோக்கி கண்கள் - பார்ட்டி லுக் பெற  ஒரு எளிமையான டுடோரியல்

சோனாக்ஷி சின்ஹாவை போல ஸ்மோக்கி கண்கள் - பார்ட்டி லுக் பெற  ஒரு எளிமையான டுடோரியல்

சோனாக்ஷியின் இந்த பார்ட்டி லுக் ஸ்மோக்கி கண்கள் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த லிங்க பட கதாநாயகியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் கண்களின் மீது இவருக்கு இருக்கும் பிரியத்தை (எங்களுக்கும் தான்!) நீங்கள் நன்கு அறியலாம்!இவரின் அணைத்து கண் ஒப்பனைகளும் தன்னுடைய ஆளுமையை முன்வைக்கும் விதத்தில் தனித்துவத்துடன் இருக்கும்.


aslisona BoPP YpnB6m


நீங்கள் பார்ட்டி செல்லும் பெண் ஆக இருந்தால் இந்த ஸ்மோகி ஐ லுக் நிச்சயம் உங்களுக்கானது. பார்ட்டிகளில் நீங்கள் எப்பொழுதும் போல ஒரு ஐ ஷடோ அணிந்து செல்லுபவர் என்றால் அதை இனி மாற்றுவோம். உங்கள் கண்களின் அழகை இன்னும் அழகு படுத்த, ஸ்மோக்கி கண்களை உருவாக்குவோம். அதற்கான எளிய வழிமுறைகளை  இங்கே நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்.


முதலில், உங்கள் முகத்தை நன்றாக கிலேன்ஸ் செய்துக்கொள்ளுங்கள்.


 1. உங்கள் கண் ஒப்பனையில் மிக முக்கியமான ஒன்று ப்ரைமர் . இதை பெரும்பாலும் பெண்கள் அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள். ப்ரைமர் உங்கள் கண் ஒப்பனையை அதிக நேரம் நீடிக்க உதவும். எனவே, முதலில் ப்ரைமர்ரை  தடவுங்கள்.

 2. அதற்கு மேல் உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஒரு பவுண்டேஷனை பூசுங்கள். அடுத்து, ஒரு ஐ கன்சீலரை உபயோகித்து உங்கள் கண்களில் இருக்கும் கரும் வளையங்களை கரெக்ட் செய்யுங்கள்.

 3. மேக்கப் ஸ்பான்ஜ் வைத்து இதை ப்ளேன்ட் செய்யுங்கள்.

 4. அடுத்து , ஒரு கருப்பு கண் மை பென்சிலால் உங்கள் கண்களை கறுப்பாக்குங்கள் ( ஐ ஷடோ பூசுவது போல...)

 5. இதற்க்கு மேல் ஒரு பழுப்பு நிற அல்லது ஏதேனும் ஒரு அடர் நிற ஐ ஷாடோ வை பூசுங்கள்.

 6. அடுத்து, ஒரு சாம்பல் அல்லது கருப்பு நிற ஐ ஷாடோவை பிரஷால் பூசுங்கள்.

 7. இதற்கு மேல் மினுமினுக்கும் ஏதேனும்  ஒரு ஐ ஷாடோவை பூசுங்கள். நீங்கள் இது வரை அடித்த அணைத்து நிறங்களும் போதுமான அளவிற்கு ப்ளேன்ட் ஆகி இருக்கா  என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

 8. அடுத்து, உங்கள் கண்களை வரைந்த, திறந்த விழியில் பெரிதாக காட்ட  ஒரு கோஹ்ல் (kohl) பென்சிலால் கண் இமைகளை வரையுங்கள்.

 9. ஒரு அடர்த்தி குடுக்கும் வாட்டர் ப்ரூப் மஸ்காராவை   பயன்படுத்தி உங்கள் கண் இமைகளில் அடியுங்கள்.


இத்துடன், ஒரு திகைப்பூட்டும்  ஸ்மோக்கி கண்களை (smokey-eyes) நீங்கள் பெறலாம். இதற்கு பிறகு, அடர் புருவங்கள் பெற ஒரு கருப்பு ஐ பிரௌ ஜெல் அல்லது பிரௌ கிட்  பயன்படுத்தி, உங்கள் புருவங்களை வரையுங்கள்.


உங்கள் முகத்தின் ஒப்பனையை முடித்து விட்டு, நீங்கள் உதட்டிற்கு ஒரு நுட் லிப்ஸ்டிக்கை (மட்டுமே ) பயன்படுத்துங்கள். ஏனெனில், இது உங்கள் கண்களை மிக அற்புதமாக காட்டும்! இதற்கு காதணிகளை கருப்பு/சில்வர்  மினுமினுக்கும் டங்கர்ஸாக இருந்தால் அற்புதமாக இருக்கும்.


ஸ்மோக்கி கண்களை பெற சில டிப்ஸ் -


 • ஸ்மோக்கி கண்களை முயற்சி செய்யும் போது நீங்கள் உங்கள் முகத்தில் மற்ற நிறங்களை ( உதட்டில், கண்ணில், கணங்களில்) பூசுவதை தவிர்க்கவும். ஒரே நிறத்தில் பூசினால் உங்களை மிக ஸ்டைலாகவும் நவீனமாகவும் காண்பிக்கும்.  

 • இது அதிக நேரம் நீடிக்க ஒரு ப்ரைமர்ரை முதலில் தடவுவது அவசியம்.

 • வெறும் கருப்பு மற்றும் சாம்பல் என்று உங்கள் யோசனையை நிறுத்தாமல் , மற்ற அடர் நிறங்களிலும் முயற்சித்து பாருங்கள். கற்பனைக்கு எல்லை இல்லை! • ஒரு அழகிய தோற்றத்தை பெற சரியான பிரஷை பயன்படுத்துங்கள்.மேலும் இதற்கு போதுமான அளவு ப்ளேன்ட்டிங் அவசியம்.

 • இது பெற்பெக்ட் ஆக வர வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. அதனால், நீங்கள் இதை உங்கள் இஷ்டம் போல் அமைத்துக்கொள்ளலாம்.


கடைசியாக படுக்கும் முன்பு, மிசெல்லார் நீரால் (micellar water) உங்கள் கண் ஒப்பனையை நன்கு துடைத்துவிடுங்கள்.


பட ஆதாரம்  - பிக்ஸாபெ,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.