சினி ஸ்னாக்ஸ் -மினி பைட்ஸ்

சினி ஸ்னாக்ஸ் -மினி பைட்ஸ்

இந்த வாரம் சினி ஸ்னாக்ஸில் ( cinima snacks) உங்களுக்கு விருப்பமான பல நொறுக்கு தீனிகள் காத்திருக்கிறது. நீண்ட நாளாக நாம் ஆவலோடு காத்திருந்த முக்கிய படங்கள் பற்றிய செய்திகளோடு தொடங்கலாம்.


முதல் தகவலாக NGK படத்தின் டீசர் வெளியானது. நீண்ட நெடுங்கால காத்திருப்பிற்கு பின் இப்படத்தின் டீசரை காதலர் தினத்தன்று வெளியிட்டார்கள். இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. ஆழமான அரசியலை பேசப் போகும் படம் என இணையவாசிகள் சந்தோஷமாக தயாராகி வருகிறார்கள். இது செல்வராகவனின் படம். அதை விடவும் இதற்கு வேறொரு விளம்பரம் வேண்டுமா என செல்வாவின் ரசிகர்கள் குதூகலிக்கின்றனர், காத்திருக்கிறோம் செல்வா!

Subscribe to POPxoTV

அண்ணன் செல்வாவின் படத்திற்கு அடுத்து (முன்பே) தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா வெளிவராமல் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் லைகா நிறுவனம் விலைக்கு வாங்கியது. ஆகவே சீக்கிரம் இப்படத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாகி வருகிற நிலையில் தயாரிப்பு நிறுவனம் இப்போது செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அது வெகு விரைவில் நாம் என்னை நோக்கி பாயும் தொட்டவை திரையில் பார்க்கலாம் என்பதுதான். நாங்கள் எல்லோருமே கவுதம் மற்றும் தனுஷின் விசிறி' என்று சந்தோஷ பாடல் பாடுகிறது ஒரு தனிக்கூட்டம்.

Subscribe to POPxoTV

கடந்த மூன்று வாரங்களாக வசூல் சாதனை புரிந்து வருகிறது மணிகர்ணிகா. பல்வேறு பிரச்னைகளுக்கிடையில் சர்ச்சைகளுக்கு நடுவே கங்கனா ரணாவத் இப் படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இந்நிலையில் இவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இவரது சொந்த கதையையே திரைப்படமாக எடுக்க இருப்பதாகவும் இதற்கு கதை வசனம் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி யின் தந்தை கே.விஜயேந்திரா எழுதுகிறாராம். இவர்தான் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி மற்றும் மணிகர்ணிகா ஆகியவற்றின் கதாசிரியர். எந்த பின்னணியும் இல்லாமல் பாலிவுட்டில் இன்று இந்த இடத்தில நின்று கொண்டிருக்கும் தனது கதை பேசப்பட வேண்டிய ஒன்றுதான் என்கிறார் கங்கணா.நயன்தாரா வித்யாசமான மேக்கப்பில் நடித்திருக்கும் படம்தான் ஐரா . இது பட வேலைகள் முடிந்து சென்சாருக்கு சென்று திரும்பியிருக்கிறது. U / A சான்றளித்திருக்கின்றனராம். வரும் மார்ச் மாதம் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது சிறப்பு செய்தி.ஆர்யா சாயிஷா திருமணம் உறுதியானது ஒருபுறம் இருக்கட்டும். தனது எதிர்கால மனைவி அனிஷா பற்றி மேலும் சில செய்திகளை கூறியிருக்கிறார் விஷால். முதல் சந்திப்பிலேயே மனதை பறிகொடுத்த விஷால் அதன்பின் ஒரு தெருநாய்கள் பற்றிய படம் எடுக்க விரும்பியபோது அது பற்றிய விவாதத்தில் நடுவில் தனது காதலை தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.


இதனை விடவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அனிஷா புலியை தூங்க வைக்கும் வீடியோ ஒன்றைப் பார்த்திருக்கிறார். எப்படிப்பட்ட புலியாக இருந்தாலும் பயப்படாமல் அதனைத் தூங்கவைக்கும் அனிஷாவின் தைரியம் பிடித்துப் போய்தான் காதலை சொல்ல முடிவெடுத்தாராம் விஷால். விஷாலுக்கு இனி தூங்குவதில் சிரமமே இருக்காது போல.எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடிப்பது உங்களுக்குத் தெரிந்ததுதான் ஆனால் உங்களுக்கு தெரியாத இன்னொரு விஷயம் உள்ளது. இவர்கள் இருவரும் லிப்லாக் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறாராம். ஆனால் ஆபாசமாக இருக்காது என்று அபர்ணதி சான்றிதழ் தந்திருக்கிறார். பார்ப்போம் !சிம்ரன் மற்றும் திரிஷா இருவரும் மீண்டும் இணைகிறார்கள். மாயன் எனும் திரைப்பம் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய அளவில் தயாரிக்க இருக்கிறார்கள். இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.----


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்