ஆர்யா சாயிஷா திருமணம் வதந்தியா ?

ஆர்யா சாயிஷா திருமணம் வதந்தியா ?

நடிகர் ஆர்யாவைத் (arya) தெரியாத நபர் இருக்க முடியுமா? கிசுகிசுக்களால் மட்டுமே பிரபலம் ஆனவர் என்றால் அது இவர்தான். இவருக்கு செல்லமாக பிக்கப் டிராப் என்கிற பெயரும் உண்டு. இதன் அர்த்தம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.                                           


பிரபல டிவி ஒன்று நடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்த்த கதையை இந்த உலகமே சாட்டிலைட் உதவியால் பார்த்தது. ஆர்யா யாரையும் திருமணம் செய்ய மாட்டார் என்பது தெரிந்தும் கண்துடைப்பாக ஒரு நிகழ்ச்சி நடந்ததும் அதனை பொதுமக்கள் போட்டி போட்டு பார்த்ததும் டிவி ஒரு இடியட் பாக்ஸ் தான் என்பதை நிரூபித்தது.


 


16 பெண்களோடும் காமிரா முன்னிலையில் பழகி மறுக்கவும் மிகப் பெரிய தைரியம் வேண்டும். அது ஆர்யாவிடம் இருந்தது. அதன்பின் ஆர்யா பரவலாக விமர்சிக்கப்பட்டார்.                          


நடிகர் விஷாலின் திருமண பேச்சு முடிந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ஆருயிர் நண்பனான ஆர்யாவுக்கும் மார்ச் மாதம் 10ம் தேதி திருமணம் நடை பெற இருக்கிறது.        


நடிகர் ஆர்யா இளம் நடிகை சாயிஷாவை தன்னுடன் இனைந்து நடித்த கஜினிகாந்த் முதலே காதலித்து வருவதாக வதந்திகள் பரவியது. ஆனாலும் இருவரும் வாயே திறக்கவில்லை.   


 


பிரபல இந்தி நடிகர் திலீப்குமாரின் உறவினர்தான் சாயிஷா என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.


ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் 17 வருடங்கள் வித்யாசம் இருப்பதாக கூறப்படுகின்றது,நாற்பதை நெருங்கியும் இவரும் விஷாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை இப்போது இருவரும் ஒரே நேரத்தில் உடைத்து விட்டார்கள்.         


                                


ஆர்யாவிற்கு மார்ச் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆர்யா காதலிக்கிறார் என்றாலே வெள்ளை காக்கா பறக்குது என்பது போலத்தான் மக்கள் நினைப்பார்கள். இந்நிலையில் இவரது திருமண செய்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.           


இந்த செய்தி பற்றி ஆர்யாவோ சாயிஷாவோ இன்னமும் எதுவும் பேசாமல் மௌனம் காக்கின்றனர். மறுக்கவும் இல்லை உண்மையாக இருக்கலாம் என்று பத்திரிகைகள் கருதுகின்றன.


இந்த திருமணம் பற்றி எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளரான அபர்ணதி ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளிக்கையில் இன்னமும் ஆர்யாவோ சாயிஷாவோ இதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே அவர்கள் தங்கள் திருமணம் பற்றிய உறுதியான செய்தியைத் தெரிவிக்கும் வரையில் இது நிச்சயம் வதந்தி மட்டுமே என்று ஆணித்தரமாகக் கூறியிருப்பது சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.                  


 


இந்த நேரத்தில் இன்னொரு சுவையான தகவல் என்னவென்றால் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆர்யாவிடம் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆர்யாவின் திருமண செய்தி உண்மையா இல்லையா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்து விடும் என்று நாம் நம்பலாம். 


அதுவரைக்கும் ஆர்யாவைப் போலவே நம் வாழ்த்துக்களையும் சஸ்பென்ஸில் வைப்போம் !


 


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.