logo
ADVERTISEMENT
home / திருமணம்
இந்த ஆண்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்யும் ஆர்யா!

இந்த ஆண்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்யும் ஆர்யா!

நடிகர் ஆர்யாவிற்கு திருமணம்மா?, என்னது திருமணம் முடிந்து விட்டதா?, திருமணம்(marry) முடிந்து இரகசியமாக வாழ்கிறாரா, அடேங்கப்பா கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்யாவின் திருமணம் பற்றிய செய்தி சினிமா வட்டாரம், நண்பர்கள் வட்டாரம், நெருங்கிய வட்டாரம் என அனைத்து வட்டாரத்திலும் பேசி பேசி ஒரு முடிவிற்கு இழுத்துக்கொண்டிருந்த விவகாரம் இன்று முற்றுப்புள்ளியை பெற்றுள்ளது.

அந்த அளவிற்கு அலசி அராயப்பட்ட ஆர்யா திருமணம்(marry) அவ்வப்போது வதந்திகளாக வெளிவந்த நிலையில் தற்போது இந்த வதந்தி உண்மையாகியுள்ளது. 

நடிகர் ஆர்யா பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகிவந்த நிலையில் அந்த நடிகை யார் என தேடும் படலம் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியது.

இந்த நிலையில் நடிகை சாயிஷாவை ஆர்யா திருமணம்(marry) செய்யவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்து இருவீட்டார்களும் பேசி முடிவெடுத்துள்ளதாகவும், வரும் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் வெளியான உள்ளம் கேட்குமே, அறிந்தும் அறியாமலும் படங்களின் மூலம் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார்.  குறித்த டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஆர்யாவை திருமணம் செய்தே தீருவேன் என அடம்பிடித்து நிகழ்ச்சி விட்டு செல்ல மறுத்தார். ஒரு வேளை அவரைத்தான் ஆர்யா திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியாக அதுவும் நடக்காமல் நிகழ்ச்சியை நடத்தினவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஷாக்கை கொடுத்து திகைக்க வைத்தார்.

Learn About : திருமண கவிதைகள்

ADVERTISEMENT

அதன் பிறகு பெற்றோரும் ஆர்யாவிற்கு தீவிரமாக மணப்பெண் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது.

சாயி‌ஷா 2015 ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த அகில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 2017ல் வெளிவந்த வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதனை பலமுறை இவர்களிடன் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது இருவரும் மறுக்கவில்லை.

இந்த நிலையில் ஆர்யாவுக்கும், சாயி‌ஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி திருமணம்(marry) நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இருவரும் ஈடுபட்டு உள்ளனர்.

இதில் முக்கிய தகவல் என்னவெனில் ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது. ஆனால் அவரை திருமணம்(marry) செய்ய போகும் கதாநாயகியான சாயி‌ஷாவிற்கு 21 வயது தான் ஆகின்றது. இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 17 வருடம் வித்தியாசம். அங்கிள் என கூப்பிட வேண்டிய ஆர்யா மாப்பிள்ளை ஆகிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இருவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ POPxo சார்பாக வாழ்த்துகின்றோம்.

ADVERTISEMENT

இன்னொரு மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் ஆர்யாவின் மிக நெருங்கிய நண்பரான நடிகர் சங்க தலைவரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலிற்கும் விரைவில் திருணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னர் தான் தனது திருமணம் என விஷால் சபதம் செய்தார். நடிகர் சங்க கட்டிடம் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரெடியாகிவிடும் என்ற நிலையில் உள்ளதால் இந்த வருடம் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். இந்த ஆண்டு திரையுலகில் ஒரே திருமண கொண்டாட்டங்கள் தான் போல. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

31 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT