சரியான வழியில் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக் )பயன் படுத்துவது எப்படி? சில சுவாரசியமான குறிப்புகள்!

சரியான வழியில் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக் )பயன் படுத்துவது எப்படி? சில சுவாரசியமான குறிப்புகள்!

எந்தப் பெண்ணைக் கேட்டாலும் அவளுக்கு விருப்பமான அலங்காரப் பொருள், உதட்டுச்சாயம் என்பாள். என்னை பொருத்தவரையிலும், நான் பெரிதாக அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றாலும், எதோ ஒன்று எண்ணையும் கவர்ந்திருக்கின்றது. நான் எப்போதும் வீட்டை விட்டு வெளியே  போகும் போது ஒரு மெல்லிய உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக் ) பூசாமல் போவதில்லை. அது நிச்சயமாக ஒரு திடமான தோற்றத்தை கொடுக்கின்றது. எனினும், நான் எண்ணுவதை போல, அது அவ்வளவு சுலபமானது அல்ல. உதட்டுச்சாயம் பூசினால், அதனை நீங்கள் பராமரிக்கவும் வேண்டும். பூசும் போது, பூசியபின், மேலும் நீங்கள் வீடு திரும்பும் வரை அதன் மீது ஒரு சிறு கவனம் இருக்கத்தான் வேண்டும்.  எனினும், முதலில் நாம் ஏன் உதட்டுச்சாயம் பூசுவது முக்கியம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். பின்னர் அது எவ்வளவு உங்கள் தோற்றத்தை மேன்மை படுத்துகின்றது என்பதையும் தெரிந்து கொள்வோம்.


உங்களுக்கு இது சுவாரசியமாக இருந்தால் தொடர்ந்து படியுங்கள்!


  • உதட்டுச்சாயம் பூசுவதன் பலன்கள்

  • செவ்வனே உதட்டுச்சாயம் பூசாமல் எப்படி நீங்கள் அழகாக தயாராவது?

  • எப்படி உதட்டுச்சாயம் பூசுவது? படிப்படியான விளக்கம்!

  • எப்படி உங்கள் உதடுகளுக்கு சரியான நிறத்தை தேர்ந்தெடுப்பது?

  • உங்களுக்கு பயனுள்ள சில உதட்ட்ச்சாய குறிப்புகள்!


 


How-To-Apply-A-Lipstick-1


உதட்டுச்சாயம் பூசுவதன் பலன்கள்1.       நன்றாக உள்ளது.


எந்த வகையான உதட்டுச்சாயம் நீங்கள் தேர்ந்தெடுத்து உபயோகிக்கின்றீர்கள் என்பதை விட, அது நிச்சயம் உங்கள் தோற்றத்தை மேம்படுத்தும். நீங்கள் எளிமையானவரோ, சிக்கென்று இருக்க விரும்புபவரோ உங்கள் உதட்டிற்கு நிறத்தை அதிகப் படுத்த விரும்பினால் இந்த உதட்ட்ச்சாயம் ஒரு நல்ல தேர்வு. இந்த உதட்டுச்சாயம் உங்கள் உதடுகளுக்கு ஒரு முழுமையான வடிவம் கொடுக்கும். ஒரு சாதாரண டி சட்டை அணிந்து கொஞ்சம் உதட்டுச்சாயம் பூசிப் பாருங்கள். உங்கள் மொத்த தோற்றத்தில் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள். உங்களுக்கு உடனடியாக ஒரு தன்னம்பிக்கை வருவதோடு உங்கள் அழகும் அதிகரிக்கும். இது உங்கள் நாகரீக வாழ்க்கைக்கு மெருகு சேர்க்க ஒரு எளிமையான வழியாகும்.


2.       உங்கள் உதடுகளை குணப்படுத்தும்


இது மற்றுமொரு முக்கிய காரணம் என்று கருதலாம். உதட்டுச்சாயம் பொதுவாக உதடுகளை தூசி, போன்ற பிரச்சனைகளை உருவாக்கக் கூடும் விடயங்களில் இருந்து பாதுகாக்கும். அது உதட்டில் இருக்கும் வெடிப்பை போக்க உதவும். அத்தியவசிய எண்ணெய் உள்ள உதட்ட்ச்சாயம் உங்கள் உதடுகளுக்கு அதிக பாதுகாப்பைத் தரும். அது மேலும் உங்கள் உதடுகளை குணப்படுத்துவதோடு அதிக பொலிவையும் கொடுக்கும். அனேக உதட்டுச்சாயம் (lipstick) அத்தியவசிய எண்ணெய் உள்ளடக்கம் கொண்டவையாகவே உள்ளது. மாறும் தட்பவெட்பம் மற்றும் தூசி போன்றவற்றில் இருந்து உங்கள் உதடுகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. உங்கள் உதடுகளை பிரகாசிக்க செய்கிறது.


3.       நீரேற்றம்


உங்கள் உதடுகளை எப்போதும் சற்று ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்வது முக்கியம். நாம் பொதுவாக இத்தகைய முக்கியத்துவத்தை நம் அன்றாட வேலை மும்மரத்தில் மறந்துவிடுவதுண்டு. முன்பே சொன்னது போல, சில உதட்டுச்சாயங்கள் அத்தியவசிய எண்ணெய் உள்ளடக்கம் கொண்டவையாக இருக்கும். அவை உங்கள் உதடுகளுக்கு நேரேற்றம் தருவதோடு நல்ல பொலிவையும்த் தரும். நீங்கள் உதட்டு தைலம் கொண்டு செல்ல மருந்து விட்டால் இந்த உதட்டுச்சாயம் ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.


How-To-Apply-A-Lipstick-2


4.       சூரியத் திரை


யுவி கதிர்கள் மற்றும் சூரிய கதிர்வீச்சில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாப்பது மிக அவசியம். நம்மில் அநேகமானவர்கள் சூரிய கதிரில் இருந்து சருமத்தை பாதுகாக்க எண்ணுவதை போல உதடுகளை எண்ணுவதில்லை. அதற்க்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. எனினும், உதட்டுச்சாயம் பூசும் போது, உங்கள் உதடுகள் தானாகவே குணமடைவது போல சூரிய கதிரில் இருந்தும் பாதுகாக்கப் படுகிறது.


5.    உங்கள் உதடுகளை வரையறுக்கிறது


நாம் ஒன்றை மறக்க வேண்டாம், அதாவது, இந்த உதட்டுச்சாயம் உதடுகளுக்கு முழுமையான தோற்றத்தை கொடுப்பதோடு திடமாகவும் காட்டும். அது உங்கள் உதடுகளை வரையருப்பதோடு மற்றவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். மேலும் உதட்டு லைனெர் உபயோகித்து கொஞ்சம் உதட்டுச்சாயம் பூசுவதால் உங்களுக்கு மேலும் திடமான உதட்டு அமைப்பு கிடைக்கும்.


6.   உங்கள் கண்களின் அழகை அதிகரிக்கும்


­­­உங்கள் முகத்தில் உதடுகளுக்கு பிறகு அழகை மேலும் அதிகரிப்பது கண்கள். நீங்கள் சரியான உதட்டுச்சாயம் பயன் (use) படுத்துவதால் உங்கள் கண்களின் நிறமும் மேன்மை பெரும். மேலும் கண்கள் நல்ல பெரிய தோற்றத்தையும் பெரும். மொத்தத்தில் நீங்கள் புன்னகைக்கும் போது உங்கள் சருமத்திற்கும் பிரகாசத்தை தரும்.


7.    உங்களை அழகாக காட்டும்


மற்றுமொரு உண்மை என்னவென்றால், இந்த உதட்டுச்சாயம் உங்கள் அழகை அதிகப் படுத்தும். உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகப் படுத்தும். உதட்ட்ச்சாயம் அணியும் பெண்கள் சற்று தன்னம்பிக்கை அதிகரித்து உணருவார்கள்.


8.    மற்ற நலன்கள்


உதட்டுச்சாயம் மேலும் பல முக்கிய நன்மைகளைத் தரும். உங்கள் உதடுகள் மற்றும் முகத்தில் இருக்கும் தொலைவிட சூரிய கதிர்களை எதிர்த்து போராடும் தன்மை குறைந்தே காணப் படுகிறது. அதனாலேயே நீங்கள் உதடுகளுக்கு தோல் சம்பந்தப் பட்ட ப்ரச்சனைகள் வராமல் இருக்கு தரமான உதட்டுச்சாயம் பயன் படுத்தும் தேவை ஏற்படுகிறது. மேலும் தோல் புற்றுநோய் வராமல் தவிர்க்க நீங்கள் வாங்கும் உதட்டுச்சாயம் எஸ்பிஎப் 15க்கு மேல் இருக்குமாறு உறுதிப் படுத்த வேண்டும்.


How-To-Apply-A-Lipstick-3


செவ்வனே உதட்டுச்சாயம் பூசாமல் எப்படி நீங்கள் அழகாக தயாராவது?


உங்கள் உடல் ஆரோக்கியத்தை காப்பது போல உங்கள் உதடுகளுக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் சிடிஎம் செயல்முறையை பற்றி தெரிந்து கொண்டு அதை கடைபிடிப்பது அவசியம். குறிப்பாக அதிக பலன் பெற வேண்டும் என்றால் இதனை நீங்கள் தூங்க செல்லும் முன் செய்ய வேண்டும்.  


உங்கள் உதடுகளை கவனித்துக் கொள்ள இங்கே சில குறிப்புகள்:


1.    தளரவம்


இறந்த தோல் உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். உங்கள் உதடுகளிலும் கூட. அதனால் உங்கள் உதடுகளை தளரவம் செய்வது அவசியம். இது உங்கள் உதடுகளில் உள்ள இறந்த தொலை நீக்க உதவும். மேலும் உங்கள் விரல்களை பயன் படுத்தி உங்கள் உதடுகள் மீது மென்மையாக தடவி இந்த செயல்முறையை செய்யும் போது அதிக பலன் கிடைக்கும். இதனை நீங்கள் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் சர்க்கரையை தூள் செய்து அதனை உங்கள் உதடுகள் மீது இதமாங்க தேய்க்கவும். இவ்வாறு செய்யும் போது இறந்த தோல் வெளியேறும். இதனுடன் நீங்கள் பல் பசியையும் பயன் படுத்தி, தினமும் பல் விளக்கும் போது செய்யலாம். இதுவும் நீண்ட கால பலன் தரக் கூடிய முறையாகும்.


2.    ஈரம்


உதட்டுச்சாயம் மட்டும் பயன் படுத்தினால் போதாது. உங்கள் உதடுகளை ஈரத்தன்மையோடு வைத்துக்கொள்ள உதட்டுத் தைலம் கூட தொடர்ந்து பயன் படுத்தி வரவேண்டும். இதற்க்கு உங்களுக்கு தனியாக நேரம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் தினமும் முகம் கழுவும் போது அல்லது தூங்க செல்லும் முன் உதட்டுத் தைலத்தை பூசிவிட்டு பின் உங்கள் வேலையை செய்யலாம். உங்கள் உதடுகள் ஓட்டும் தன்மை கொண்டதாக இருந்தால் எண்ணெய் இல்லாத உதட்டுத் தைலம் பயன் படுத்துவது நல்லது. நீங்கள் இந்த தைலத்திர்க்காக உங்கள் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கூட பயன் படுத்தலாம். என் பாட்டி தினமும் நல்ல தரமான நெய்யை உதடுகளில் தூங்கப் போவதற்கு முன் தடுவுவார்கள். இதை நீங்களும் முயற்ச்சி செய்து பார்க்கலாம். இந்த முறை எனக்கு பெரிதும் பயன் தந்துள்ளது. இந்த இரண்டு குறிப்புகளும் உங்களுக்கு குறையற்ற உதடுகளை பெற உதவும். மொத்தத்தில் உங்கள் உதடுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும்.


How-To-Apply-A-Lipstick-4


எப்படி உதட்டுச்சாயம் பூசுவது? படிப்படியான விளக்கம்!


உதட்டுச்சாயம் பூசுவது ஒரு தனிக் கலை என்றே சொல்லலாம். ஒரு முழுமை அடையாமல் உதட்டுச்சாயம் பூச யாருக்குத்தான் விருப்பம் இருக்கும்? அதனால், இந்த சில படிப்படியான விளக்கும், உங்களுக்காக:


1.        உதடுகளை நன்றாக துடையுங்கள்! உங்கள் உதடுகளில் எந்த தூசியும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது மிக அவசியம். உங்கள் உதடுகளை சுத்தமாக துடைத்து விட்டு எந்த எண்ணையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏதேனும் உதட்டுச்சாயம் அல்லது தைலம் இருந்தால் அது நீங்கள் புதிதாக பூசப்போகும் உதட்டுச்சாயத்திற்கு பொலிவு தராது.


2.    சிறிது அடித்தளம் தேவை: இது உங்களுடைய தினசரி உதட்டுச்சாயம் பூசும் வேலையை மிகைப் படுத்துவது போல தோன்றினாலும், அடித்தளம் இல்லாமல் உதட்டுச்சாயத்தை பூசுவது விரைவாக அது மறைந்து விட காரணமாகிவிடும். உங்கள் விரல்களால் அல்லது தூரிகை பயன் படுத்தி சிறிது உதட்டுச்சாயத்தை பூச முயற்சி செய்யுங்கள்.


3.    உதட்டு லைனெர்: இதை பயன் படுத்தும் போது உதட்டுச்சாயம் உதட்டின் எல்லைக் கோடுகளை விட்டு வெளியேறாமல் துல்லியமான வடிவத்தை உங்கள் உதடுகளுக்கு கொடுக்கும். உதட்டுச்சாயம் பயன் படுத்தும் முன் உதட்டு லைனர் பயன் பயன் படுத்துவது நல்லது. எனினும், இந்த லைனர் இதமானதாகவும் ஒரே நிறத்திலும் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் உதடு சீரான நிறம் பெறாமல் போகலாம்.


How-To-Apply-A-Lipstick-5


4.       உதட்டுச்சாயம் பூச வேண்டிய நேரம் இது: உதட்டு லைனரை பயன் படுத்திய பின், இப்போது நீங்கள் உதட்டுச்சாயம் பயன் படுத்த வேண்டிய நேரம். நீங்கள் நேராகவோ அல்லது தூரிகை பயன் படுத்தியோ உதட்டுச்சாயத்தை பூசலாம். எனினும் உதட்டு லைனெர் கோட்டிற்குள் சாயத்தை பயன் படுத்துவது முக்கியம். இரண்டாவது படிவம் உதட்டுச்சாயம் தேவைப் பட்டால் அல்லது மேலும் திடமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் கொடுக்கலாம்.


5.       சுற்றி பரப்பவும்: நீங்கள் எதுவும் சீராக இருக்க வேண்டும் என்று என்னுபவராக இருந்தால், மேலும் உங்கள் உதடுகள் நல்ல தோற்றத்தை பெற வேண்டும் என்று எண்ணினால், உங்கள் உதடுகளை சுற்றி சிறிது அடித்தளம் பூசிக் கொள்ளலாம். இது ஒரு துல்லியமான தோற்றத்தை உங்கள் உதடுகளுக்குக் கொடுக்கும். உங்கள் தாடைகளுக்கு ஒப்பனை போடி கூட பயன் படுத்திக் கொள்ளலாம்.


6.    இறுதி ஒப்பனை: உங்களுக்கு இரண்டாம் படிவம் பூச வேண்டும் என்று தோன்றினால், சிறிது ஒப்பனைப் பொடியை பூசி பின் உதட்டுச்சாயத்தை பூசிக் கொள்ளலாம். இதழ் பொலிவு பயன் படுத்தலாம். இது நிறத்தை தக்க வைத்துக் கொள்ளும். உங்கள் உதடுகளுக்கு நல்ல வடிவத்தை கொடுக்க இதை பயன் படுத்தலாம்.


How-To-Apply-A-Lipstick-6


எப்படி உங்கள் உதடுகளுக்கு சரியான நிறத்தை தேர்ந்தெடுப்பது?


உங்கள் உதடுகளுக்கு நீங்கள் நல்ல தோற்றத்தையும் அழகையும் கொடுக்க வேண்டும் என்றால், சரியான நிறத்தை தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் தோல் நிறத்திற்கும் முக தோற்றத்திற்கும், உதடுகளின் வடிவத்திற்கும் ஏற்ற உதட்டுச்சாயம் உங்கள் அழகை மேலும் அதிகப் படுத்தும். இங்கே நீங்கள் எளிதாக தக்க நிறத்தை தேர்ந்தெடுக்க சில சுவாரசியமான குறிப்புகள்:


1.    உங்கள் சருமத்தின் நிறத்தை முதலில் கவனியுங்கள்:


நீங்கள் எப்போதும் உங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். அது உங்கள் விருப்பம். எனினும், சில நிறங்கள் உங்கள் தோற்றத்தை மேலும் அதிகப் படுத்தும், ஆனால் சில நிறங்கள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தக் கூடும். அதனால் நீங்கள் உதட்டுச்சாயம் தேர்ந்தெடுக்கும் போது சரியான நிறத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல சிவந்த நிறமுடையர் என்றால், நீங்கள் இளம்சிவப்பு, சிவப்பு போன்ற நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் கோதுமை நிறம் கொண்டவர் என்றால், இளம் சிவப்பு, செர்ரி, மாவ் போன்ற நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். சற்று கருத்த நிறம் அல்லது மாநிறம் அல்லது மங்கிய நிறம் கொண்டவர் என்றால், அடர்ந்த சிவப்பு போன்ற நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.


2.    உங்கள் உதடுகளின் வடிவம் முக்கியம்:


உங்கள் முக அழகை அதிகப் படுத்த உங்கள் உதடுகளின் வடிவம் முக்கிய பங்கு வகிக்கிறது. மெல்லிய உதடுகள் கொண்ட பெண்கள் அடர்ந்த நிறத்தை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் உதடுகளை மேலும் மெல்லியதாக காட்டக் கூடும். அதற்க்கு பதிலாக நீங்கள் பளபளப்பான நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். அது உங்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும். மேலும், சற்று பருமனான உதடுகளை கொண்ட பெண்கள் பளபளப்பான நிறங்களை தவிர்ப்பது நல்லது.


How-To-Apply-A-Lipstick-7


3.. பிற விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்


இது முக்கியமாக உங்கள் தலை முடியின் நிறம் மற்றும் உங்கள் பற்களின் நிறத்தை குறிக்கும். அவைகளுக்கும் உங்கள் உதட்டுச்சாயத்தின் நிறத்தை தேர்ந்தெடுப்பதற்கும் முக்கிய பங்கு உள்ளது. சில நிறங்கள் சரியான அல்லது நீங்கள் எதிர் பார்த்த அழகை கொடுக்காமல் போகலாம். உதட்டுச்சாயம் உங்கள் பற்களையும் ஒரு தனித்துவமான அழகோடு எடுத்துக் காட்டும்.


4.    தவறான நிறங்களை தூக்கி எரிந்து விடாதீர்கள்


சில தருணங்களில் நமக்கு சில நிறங்கள் உதடுகளுக்கு ஏற்றதாக தோன்றும். ஆனால் சில நேரங்களில் அவை தவறான தேர்வாகவும் போகலாம். இருப்பினும் அவற்றை தூக்கி எரிந்து விடாதீர்கள். அவ்வாறான நிறங்களை நீங்கள் பயன் படுத்தி ஒரு புது நிறத்தை ஏற்படுத்தலாம். இப்படி செய்வது உங்கள் பணத்தையும் சேமிக்க உதவும்.


பல வகையிலான உதட்டுச்சாயம் சுவாரசியமாக இருக்கும்!


நீண்ட காலமாகவே இந்த அழகுத் துறையில் உதட்டுச்சாயத்தின் மீதான பரிசோதனைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. நாம் சில அசாதாரண எனினும் பிரபலமான உதட்டுச்சாயத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். அத்தகைய சாயத்தை ஒரு முறையாவது பயன் படுத்த என்னலாம். எளிதான நிறத்தில் இருந்து பிரகாசிக்கும் நிறம் வரைக்கும் பல வகைகள் உள்ளது. அதில் உங்களுக்கு பிடித்த தேர்வு எது?


உங்களுக்கு பயனுள்ள சில உதட்ட்ச்சாய குறிப்புகள்!


1.        பல் தூரிகை அல்லது மஸ்கார தூரிகை பயன் படுத்தி உங்கள் உதடுகளை தேய்த்து விடுங்கள்


2.        சுத்தமான உங்கள் விரலால் உதடுகளை சுற்றி தேய்த்து மற்றும் உங்கள் உதடுகளை இழுத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் உதட்டுச்சாயம் பற்களில் ஒட்டாது


3.        சில நேரங்களில் நீங்கள் உதட்டுச்சாயத்தை நல்ல நிறம் பெற சிறிது உங்கள் கன்னங்களில் பூசவும் பயன் படுத்திக் கொள்ளலாம்


4.        கண் நிழல் சிறிது எடுத்து உதட்டு தைலம் அல்லது வசளினோடு சேர்த்து பயன் படுத்தினால் சற்று நல்ல நிறம் கிடைக்கும்


How-To-Apply-A-Lipstick-8


5.        உங்கள் அடர்ந்த உதட்டுச்சாயத்தொடு கன்சீலராகவும் பயன் படுத்தி மிதமான நிறத்தை பெற முயற்சி செய்யலாம்


6.        உதட்டுச்சாயம் உடைந்து விட்டால் குளிர் சாதனா பெட்டியில் உரைவிப்பானில் ஒரு நாள் வைத்து விடுங்கள், அது நன்கு ஒட்டிக் கொள்ளும்.


7.        கோடைகாலங்களில் உங்கள் உதட்டுச்சாயத்தை குளிசாதன பெட்டியில் வைத்து விடுவது அது உருகுவதை தவிர்க்க உதவும்


8.        சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற உதட்டுச்சாயத்தை கன்சீலராகவும் பயன் படுத்தலாம். ஆம்! அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள்


9.        நீல நிறம் கொண்டு ஏதாவது முயற்சி செய்து பார்க்க எண்ணினால், வெளிர் நிற உதட்டுச்சாயத்தை கண் நிழலாக பயன் படுத்தலாம்


இந்த குறிப்புகள் உங்களுக்கு சுவாரசியமாக இருப்பதோடு பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம். அடுத்த முறை நீங்கள் அலங்காரம் செய்யும் போது இவை உங்களுக்கு அதிக பலனைத் தரக் கூடியதாக இருக்கும். உங்களுக்கு மேலும் சில இவ்வகை குறிப்புகள் தெரியும் என்றால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த குறிப்புகள் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறோம்!


பட ஆதாரம் - பிக்ஸாபெ,பேக்செல்ஸ் 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.