பெண்களுக்கு பிடிக்காத ஹேர்ஸ்டைல்… ஆண்களே கவனமாக இருங்க

பெண்களுக்கு பிடிக்காத ஹேர்ஸ்டைல்… ஆண்களே கவனமாக இருங்க

என்னதான் வெரைட்டியான டிரெஸ் அணிந்தாலும் ஸ்டைலா தெரியலையே!' என்பது பலரின் மைண்ட்வாய்ஸ். மேலாடை விதவிதமாக உடுத்தியும் மாறாத தோற்றம், லேசாகத் திருத்தம் செய்யப்படும் சிகையலங்காரத்தால் வெளிப்படும். அந்த வகையில், ஹேர் கலரிங், ஸ்ட்ரெயிட்னிங், கர்லிங் போன்றவற்றின் மீது இந்தக் காலத்து இளைஞர்களுக்கு ஆர்வம் எக்கச்சக்கம். அதிலும், தனக்குப் பிடித்த பிரபலங்களின் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு, அவர்களைப்போல் தங்களை மாற்றிக்கொள்ள விரும்பும் டீன்ஸோ ஏராளம். அவர்களுக்காகவே, பிரபலங்கள் சிலரின் சூப்பர் டூப்பர் ஹேர்ஸ்டைல் டீட்டெய்ல்.

கால்பந்து வீரரான டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்காம், 19 முறை வெற்றிக்கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டவர். இவரின் விளையாட்டுத் திறமைக்கு மட்டுமல்ல, விதவிதமான ஹேர்ஸ்டைலுக்கும் தீவிர ரசிகர் பட்டாளம் உண்டு. ஒவ்வொரு முறையும் விதவிதமான ஸ்டைல்களில் தோன்றும் பெக்காமின் தாய் சாண்ட்ரா ஜார்ஜினா, சிகையலங்கார நிபுணர். இதனால்தான் என்னவோ டேவிட்டின் ஒவ்வொரு ஹேர்ஸ்டைலும் பலரால் ஈர்க்கிறது. ஷார்ட், லாங் என எல்லா வகையான ஸ்டைல்களிலும் டேவிட் டாப். பஸ்கட் (Buzzcut), மொஹாக் (Mohawk), தி மேன் பன் (The man Bun) போன்ற விதவிதமான ஸ்டைல்களை அறிமுகப்படுத்தியது டேவிட்தான். சலூன்களில் அவரை உதாரணமாகக் காட்டி முடித்திருத்தம் செய்துகொள்ளும் ஆண்கள் பலர்.


ஆண்கள் வைக்கும் சில ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்கும் என நினைத்து கொண்டு தாங்களாக சில விஷயங்களை செய்து அசிங்கப்பட்டுக்கொள்கின்றனர். ஆனால் ஆண்கள் வைக்கும் சில ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம். அது என்னென்ன ஹேர்ஸ்டைல் என்று இதில் பார்ப்போம்.


தலையில் நடுப்பகுதி மட்டும்
ஒரு சில ஆண்களுக்கு இந்த வகை ஹேர்ஸ்டைல் மிகவும் பிடிக்கும் போல. தலையின் நடு பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடத்தில் உள்ள முடியை எல்லாம் ட்ரிம் செய்து விடுவர். இந்த வகை ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்காதாம்.

லூஸ் ஹேர்
பெண்கள் முடியை கட்டாமல் லூஸ் ஹேர் விட்டிருந்தால் ஆண்களுக்கு அதிகம் பிடிக்கும். ஆனால், ஆண்கள் இது போன்று வைத்திருந்தால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம்.


தலைவர்களின் ஹேர்ஸ்டைல்
ஹேர்ஸ்டைல் வைக்கின்ற பெயரில் இது போன்ற கொடுமைகளும் நடப்பதுண்டு. மிகவும் கடுமையாக நடந்து கொள்ள கூடிய தலைவர்களின் ஹேர்ஸ்டைலை பல ஆண்கள் வைத்து கொள்வார்கள். இந்த வகை ஹேர்ஸ்டைலால் கூட உங்களுக்கு காதல் செட்டாகாமல் இருக்கலாம்.


கிரில் ஹேர்ஸ்டைல்(Hairstyle)
ஹேர்ஸ்டைல் வைக்கின்ற பெயரில் சில மோசமான செயல்களும் நடக்கும். அதில் இதுவும் ஒன்று. இது போன்று கிரில் ஹேர்ஸ்டைல் வைக்கும் ஆண்களை பெண்கள் கண்டு கொள்வது கூட இல்லையாம்.


பின்னல்களை கொண்டு ஹேர்ஸ்டைல்(Hairstyle)
பலவித பின்னல்களை கொண்டு ஹேர்ஸ்டைல் வடிவமைத்தால் அது பார்ப்பதற்கு வித்தியாசமாக தான் இருக்கும். ஆனால், இது பெண்களுக்கு பிடிப்பதில்லை என ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், விளையாட்டு வீரர்கள் இது போன்று வைத்திருந்தால் கூட பிடிப்பதில்லையாம்.

பாப்காட் போன்ற ஹேர்ஸ்டைல்(Hairstyle)
ஒரு சில ஆண்கள் குழந்தைகளுக்கு வைக்க கூடிய பாப்காட் போன்ற ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார்கள். இது பெண்களுக்கு சிரிப்பை உண்டாக்க கூடிய ஒன்றாக தான் இருக்குமாம். மேலும், இது பார்ப்பதற்கும் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை.


ஜெல் ஹேர்ஸ்டைல்(Hairstyle)
தலையில் எப்போதும் ஜெல்லை தடவி கொண்டு எண்ணெய் வடிவது போன்ற ஹேர்ஸ்டைல் வைத்திருந்தால் அது பலருக்கும் பிடிப்பதில்லையாம். மேலும், இது பார்க்க பொலிவான தோற்றத்தையும் தருவதில்லையாம்.


மிலிட்டரி கட் ஹேர்ஸ்டைல்(Hairstyle)
மிலிட்டரி கட் ஹேர்ஸ்டைல் வைத்திருந்தால் மிகவும் கோபக்காரர்கள் போன்ற தோற்றத்தை பெண்களுக்கு தருகிறதாம். எனவே, இவை உங்கள் மீது பயத்தை உண்டாக்குமே தவிர விருப்பத்தை உண்டாக்காது.

பயமுறுத்தும் ஹேர்ஸ்டைல்(Hairstyle)
சிலர் பிறரை பயமுறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் வைக்க கூடிய இது போன்ற ஹேர்ஸ்டைல் யாருக்காக இருந்தாலும் வெறுப்பை தான் உண்டாக்கும். ஆதலால் இந்த வகை ஹேர்ஸ்டைலை தவிர்த்து விடுங்கள்.


கிரியேட்டிவிட்டி ஹேர்ஸ்டைல்(Hairstyle)
சிலருக்கு இருக்க கூடிய கிரியேட்டிவிட்டி அனைத்தையும் இதில் தான் காட்டி இருப்பார்கள். அனால், இது மிக பெரிய தாக்கத்தை தான் பலருக்கும் ஏற்படுத்தும். பெண்களுக்கு இது போன்ற ஹேர்ஸ்டைல்கள் பிடிப்பதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.


ஸ்பைக் ஹேர்ஸ்டைல்(Hairstyle)
சிலர் ஸ்பைக் ஹேர்ஸ்டைல் வைக்கின்ற பெயரில் முள்ளம்பன்றிக்கு இருப்பது ஹேர்ஸ்டைலை வைத்து கொள்வர். இது பல பெண்களுக்கு பிடிப்பதில்லையாம். அத்துடன் இதை வினோதமாக தான் பார்க்கவும் செய்வார்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo