தியானம் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி?

தியானம் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி?

தியானம்(meditation) என்பது ஒரு எளிய சக்தி வாய்ந்த நுட்பமாகும். எவ்வாறு மனதுடன் சம்பந்தப் பட்ட ஒன்று உடல் எடையைக் குறைக்கும் என்று ஆச்சர்யப் படுகின்றீர்களா? எவ்வாறு தியானம்(meditation) உடல் எடையைக் குறைக்கும் என்று பார்ப்போம்.


1.முயற்சியின்றி உடல் நிறை குறியீட்டு எண்ணைக் குறையுங்கள் (Reduce Your Body Mass Index Effortlessly)
எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், உங்களுடைய அடித்தள வளர்சிதைமாற்ற விகிதத்திற்கு(BMS) ஒழுங்காக கணக்கு வைத்துக் கொண்டிருப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிகளைக் குறைப்பீர்கள். இவ்வாறு கலோரிகளைக் குறைப்பதன் விளைவு உடல் எடையைக் குறைப்பது ஆகும்.


2. உடற்பயிற்சித் திட்டத்தை மாற்றுவது (Tweek Your Work Out Regime)
சில நாட்களுக்கு உடற்பயிற்சியை நிறுத்தி விட்டால், உடனேயே எடல் எடை கூடுவதைக் கவனித்திருக்கிறீர்களா? ஏனெனில் நீங்கள் உண்ணும் உணவுச் சத்து செலவழிக்கப் படுவ தில்லை. ஜிம்மில் செய்யும் உடற் பயிற்சி பசியைத் தூண்டுகிறது. ஆனால் அது சத்து உறிஞ்சப்படுவதைத் தடுப்பதில்லை. யோகா மற்றும் தியானத்தின் மூலம் உறிஞ்சல் அதிகப்பட்டு, கலோரிகள் அதிகம் உள்ள உணவுப் பொருட்களின் மீது நாட்டம் குறைகின்றது. பசி எடுக்கிறது, ஆனால் குறைந்த அளவு உணவிலேயே திருப்தி ஏற்படுகிறது. இது நீண்ட காலப் பயனைத் தருகிறது. சில நாட்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் உங்கள் எடை கூடாது.


Also Read: எடை இழக்க பயிற்சிகள் (Simple Exercises To Loose weight)
3. உங்கள் நடுநிலையை மீட்டுத் தருகிறது (Restore Your Balance)
அதிகமான எடை கூடுவது அல்லது எடை குறைவது என்பது சில சமயங்களில் ஹார்மோன்களின் சம சீர் குலைவினால் ஏற்படலாம். தியானம்(meditation) அத்தகைய சீர்குலையும் நிலையினை சம நிலைப்படுத்த உதவும். அதாவது அதிக எடையைக் குறைக்கவும், குறைந்த எடையைக் கூட்டவும் உதவும்.


4. சாப்பிட வாய்ப்புகளை வெளியே குறைக்க (Reduce The Number of Go-to's)
எல்லாவிதமான உணவுகளின் மீதும் ஏற்படும் ஆசை எடைக் குறைப்பிற்குப் பெரும் தடை ஆகும். ஒரு பேக்கரியைக் கடக்கும் போது வாசனை மிகுந்த ஒரு டோ நட் வாங்க வேண்டும் என்னும் விருப்பத்தை தடுப்பது எவ்வாறு? சீரான தியானத்தின் மூலம் அது மிக எளிதாகும்.


எல்லாவிதமான உணவுகளின் மீதும் ஏற்படும் ஆசை எடைக் குறைப்பிற்குப் பெரும் தடை ஆகும். ஒரு பேக்கரியைக் கடக்கும் போது வாசனை மிகுந்த ஒரு டோ நட் வாங்க வேண்டும் என்னும் விருப்பத்தை தடுப்பது எவ்வாறு? சீரான தியானத்தின் மூலம் அது மிக எளிதாகும்.


5. உங்கள் அர்ப்பணிப்பை அதிகப்படுத்துங்கள் (Boost Your Commitment)
எடைக் குறைப்புத் திட்டத்தை அச்சுறுத்தல்களுக்கு இரையாக்குவது எவ்வளவு எளிதானது என்பதை அறிந்தீர்களா? தூக்கம், சத்தில்லா உணவு, இனிப்புகள், இவையனைத்தும் எடைக் குறைப்புத் திட்டத்தினை எளிதில் தகர்த்துவிடும். உங்கள் முயற்சியின் அர்ப்பணிப்பு நிலைக்கு தியானம்(meditation) உதவும். தினமும் தியானம் செய்தால் உங்கள் எடையைக் குறைக்கும் எண்ணம் வலுவாகி, உடற்பயிற்சி, மிதமான உணவு, மற்றும் ஆரோக்கிய பழக்கங்கள் ஆகியவற்றுக்கு உங்கள் அர்ப்பணிப்பு அதிகமாகும். நோக்கத்தினை அறிந்துணரும் வலு தியானத்தினால் ஏற்படும்.


6. அழுத்தத்தைக் குறையுங்கள், காய்கறிகளை உண்ணுங்கள் (Beat the stress & Have Vegetables)
அடுத்த முறை நீங்கள் சாக்கலட் அல்லது பிற சத்தற்ற குப்பை உணவுகளை அணுகும்போது, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று யோசியுங்கள். மன அழுத்தம் எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் இந்த போக்கிற்கு நேரிடையான தொடர்பு உள்ள ஒன்று. இது தாற்காலிகமாக அழுத்தத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடும். ஆயினும் தியானம்(meditation) செய்தால், சேர்ந்திருக்கும் அனைத்து அழுத்தங்களுக்கும் இயற்கையாக நீங்கள் விடை கொடுக்கலாம். அது இன்னும் கூடுதலான ஆரோக்கிய வழியாகும்.


7. உங்கள் கடிகாரத்தில் சில மணி நேரத்தை அதிகப்படுத்துங்கள் (Add Hours To Your Clock To Implement Your Weight-loss Stratagy)
இப்போது எடைக்குறைப்புக்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் குறைந்து விட்டன. தியானம் உங்களுக்கு ஒரு நாளில் அதிக நேரத்தினைக் கூட்டும்! தியானம் செய்ய உங்களுக்கு 15 முதல் 20 நிமிஷங்களே தேவை. அதை ஒரு நாளில் எளிதாக உங்கள் வசதிக்கேற்ப அடையலாம். அந்த 20 நிமிஷ தியானத்தால், உங்கள் செயல் திறன் கூடும். உங்கள் அனைத்துப் பணிகளையும் குறைந்த நேரத்தில் முடித்து விடலாம். உங்கள் எடைக் குறைப்புத் திட்டத்திற்கு அதிக நேரம் காண முடியும்.


8. உங்களுக்கு நீங்களே விருப்பமானவராக ஆகுங்கள்! (Make Yourself Your Favourite)
இது விசித்திரமாக இருக்கிறதா? நீங்கள் ஏற்கனவே உங்களைக் குண்டு என்று ஏற்றுக் கொண்ட பின்னர் ஏன் எடையைக் குறைக்க வேண்டும் என்று அதிசயிக்கின்றீர்களா? ஏனெனில், உங்கள் உடலமைப்பினை நீங்கள் ஏற்றுக் கொண்ட பின்னர் நீங்கள் உள்ளே அமைதியுடன் எதைப் பற்றியும் கவலைப்படுவதை நிறுத்தி விடுகிறீர்கள். அத்தகைய மனநிலையில் எடை குறைய எடுக்கும் முயற்சிகள் எளிதாகவும், மிக்க பயனுள்ளதாகவும் இருக்கும். இதை ஒரு முறை முயன்று பாருங்கள். இளைப்பாறுங்கள்! உங்கள் உடலை நேசியுங்கள்! உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தினை காணுங்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo