ட்ரெண்ட் அலெர்ட் - உங்கள் திகைப்பூட்டும் ஒப்பனையில் சீசனிற்கு ஏற்ற சில லிப்ஸ்டிக் வகைகள்

ட்ரெண்ட் அலெர்ட் -  உங்கள் திகைப்பூட்டும் ஒப்பனையில் சீசனிற்கு ஏற்ற  சில லிப்ஸ்டிக்  வகைகள்

உங்கள் ஒப்பனையில் மிக முக்கியமான ஒரு பொருள் லிப்ஸ்டிக் . இதை நீங்கள்  சீசனிற்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டே போகலாம். மேலும், உங்களின் அலுப்பை நீக்க, புது புது நிறங்கள் கொண்ட லிப்ஸ்டிக் வகைகளை முயற்சித்து பாருங்கள். உங்கள் உதட்டின் நிறங்கள் உங்கள் ஆடைகளுக்கு ஏற்ற படி இருந்தால், நீங்கள் இன்னும் அழகாய் தோன்ற உதவும்.


இப்போ ட்ரெண்டில் இருக்கும் லிப்ஸ்டிக் (lipstick) வகைங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். குளிர்காலத்தில், அதற்கு ஏற்ற  ஒப்பனை செய்யதுகொண்டு, வெளியே செல்லுங்கள். இது உங்களுக்கு ஒரு நல்ல தோற்றத்தை அளிக்க உதவும். என்ன நிறம் இப்போதைய ட்ரெண்டில் உள்ளது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம்! இதை நாங்கள் உங்களுக்கு கற்றுத்தருகிறோம் ....


ஒரு புதிய லிப் கலருடன் ஒரு புதிய தோற்றத்திற்கு தயாரா?!


மேட் பினிஷ்  -


20190121 222805


ஒரு க்ளோஸ்சி பினிஷ் தரும் லிப்ஸ்டிக் போலவே இப்போதெல்லாம் மாட் லிப்ஸ்டிக் மிக பிரபலம் ஆகிவிட்டது. இதன் சிறப்பு  - ஒரு பளப்பான தோற்றத்திற்கு முரணாக இதில் ஒரு வறண்ட ப்ரகாசமற்ற நிற தோற்றம் அளிப்பதுதான். இதிலும் பல நிறங்கள் உள்ளனர்.ஒரு ஆரஞ்சு அல்லது ஒரு சிவப்பு நிற மேட் லிப்ஸ்டிக் இருந்தால் போதும்! எல்லா உடைகளிலும் ஜொலிக்கலாம்.


POPxo பரிந்துரைக்கிறது - லாக்மி 9 to 5 மேட் மூஸ் லிப் கலர்  (Rs.456)


மெட்டாலிக் டச் -


20190121 222832


நீங்கள் ஒரு பார்ட்டி கேர்ள்  என்றால், உங்களுக்கு மிக சிறந்த லிப்ஸ்டிக் நிறங்கள் இதுதான். மெட்டாலிக் லிப்ஸ்டிக்கில் வெள்ளி, செம்பு, வெண்கலம், தங்க நிறம் எனும் அணைத்து நிறங்களும் இதில் உண்டு. இதுதான் இப்போதைய ட்ரெண்ட் (trend)!


POPxo பரிந்துரைக்கிறது - நைக்ஸ் ப்ரொபசனல் மெட்டாலிக் மேட் லிப்ஸ்டிக்  (Rs.325)


மேலும் படிக்க - பளீச்சிடும் புன்னகைக்கு உங்கள் பற்களை பாதுகாப்பது எப்படி?


இரண்டு நிறங்கள் -


20190121 225122
ஒரே நிறத்தில் உதடு முழுவதும் பூசுவதை தாண்டி, இரண்டு நிறத்தில் லிப்ஸ்டிக் போட ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் இன்றைய மாடர்ன் லுக்கின் அடையாளம்! மேல் உதட்டில் ஒரு நிறம், அதற்கு முரணாக கீழ் உதட்டில் இனொரு நிறம் இன்றைக்கு லிப்ஸ்டிக் ட்ரெண்டில் டாப்பில்  உள்ளது!


POPxo பரிந்துரைக்கிறது - கிளினிக் சப்பி ஸ்டிக் டூ டோன் டொமாடோ  (Rs.1500) (இது போல் மற்றோரு லிப் கலரை தேர்ந்தெடுத்து கீழ் உதட்டில் பூசுங்கள்)


நுட் நிறம் -


20190121 225106


உங்கள் லிப்ஸ்டிக் பட்டியலில்  ஒரு நுட் நிறம் இருப்பது மிக அவைசியம். எந்த ஒரு ஆடையாக இருந்தாலும் இந்த நிறம் மிகவும்  பொருந்தும். இதை ஒரு மினிமல் மேக்கப்பில் அல்லது ஒரு நாச்சுரல் லுக்கில் பயன்படுத்தலாம். இதை பூசும்போது, உங்கள் கண் ஒப்பனையை கொஞ்சம் இருண்ட நிறங்களில் (கருப்பு, நீலம், சாம்பல்,) காண்பியுங்கள்.


POPxo பரிந்துரைக்கிறது - நைகா சோ மேட் நுட் லிப்ஸ்டிக் (Rs.399)


நோ லிப்ஸ்டிக் லுக்  -


20190121 224112


சிலர் லிப்ஸ்டிக் போட விரும்பினாலும் அதை பூசினது  தெரியாமல் இருக்க விரும்புவார்கள். அப்படி பட்ட ஒரு நிறம் தான் இந்த நோ- லிப்ஸ்டிக் லுக்கின் நிறம். இதில் கிரீம், பீச், ஏதேனும் ஒரு மந்தமான நிறம் அல்லது உங்களின் தோல் நிறத்திற்கு ஏற்ற நிறமாகவும் இருக்கலாம். இதை பூசிவிட்டு, ஒரு டிஸ்ஸுவில் உங்கள் உதடுகளில்  இருக்கும் நிறத்தை மேலாக துரைத்து எடுங்கள் . ஆஹா! 'நோ லிப்ஸ்டிக் , லிப்ஸ்டிக்' லுக்கிற்கு நீங்க ரெடி .


POPxo பரிந்துரைக்கிறது - லாக்மி 9 to 5 மேட் ப்ளஷ் புக்   (Rs.375)வைன் கலர் -


Untitled design %283%29


பனிக்காலங்களில் எந்த ஒரு இருண்ட நிறமாக இருந்தாலும் அது அழுகுதான்! அதிலும், வைன் ரெட் மிக சிறப்பான ஒரு நிறம். இதை எந்த நிற பெண்ணும் பூசிக்கொண்டு செல்ல உதவும். இது உங்களின் எளிமையை காட்ட சிறந்த நிறம். இதை பூசும்போது, உங்கள்  உடையை இதற்கு ஏற்ற நிறத்தில் ( மினுமினுக்கும் தங்க நிறம், கருப்பு, வெள்ளை) அணிந்தால் அற்புதமாக இருக்கும்! இதற்கு மேல் ஒரு க்ளோஸ் லிப்ஸ்டிக் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


POPxo பரிந்துரைக்கிறது - சுகர் சமட்ஜ் மீ நோட் லீகுய்ட் லிப்ஸ்டிக் ரஸ்ட் ரெட்  (Rs.499) பியூஷ்ச்சியா பிங்க் -


20190121 224756


பளிச்சிடும் பிங்க் இப்போது மீண்டும் ட்ரெண்டில் வந்துவிட்டது. இதில் லிப்ஸ்டிக் மட்டுமில்லை,  ஆடைகளும் வந்துவிட்டது. எனவே, ஒரு பளிச் பிங்க் உங்கள் லிப்ஸ்டிக் பட்டியலில் இருப்பது முக்கியம். இதில் க்ளோஸ் அல்லது மேட் இரண்டுமே ஒரு நல்ல பினிஷ் குடுக்க உதவும்.


POPxo பரிந்துரைக்கிறது - சுகர் சமட்ஜ் மீ நாட் லீகுய்ட் லிப்ஸ்டிக் பிரின்க் ஒப் பிங்க்  (Rs.474)


    மேலும் படிக்க - உதடுகளின் கருமை நிறம் உங்கள் அழகினைக் குறைக்கிறதா? 99% பலனளிக்கும் சிறந்த தீர்வுகள்!


பிரைட் ரெட் -


Screenshot 20190121-225508 2291410


அப்போதெல்லாம் செவப்பு மட்டுமே லிப்ஸ்டிக்கின் நிறம் என்று இருந்தது. இப்போது, சிவப்பை தவிர, எல்லா நிறங்களிலும் லிப்ஸ்டிக் வந்துவிட்டது. இருப்பினும், பளிச்சிடும் ஒரு சிவப்பு லிப்ஸ்டிக் உங்கள் பார்ட்டி நாட்களில் உங்களை இன்னும் அழகாய்  காட்ட உதவும். இது எப்போதும் உங்களை கைவிடாது! இதில் க்ளோஸ் (gloss) விட ஒரு மேட் பினிஷ் சிறந்ததாக இருக்கும்.


POPxo பரிந்துரைக்கிறது -மேக் ரெட்ரோ மேட் லிப்ஸ்டிக்  (Rs.1500)


இருண்ட பயங்கரமான நிறங்கள் -


20190121 224138


இவை இப்போது ட்ரெண்டில் உள்ளது. எப்போதும் பூசும் பிங்க், சிவப்பு எனும் நிறங்களை ஒதுக்கி வைத்து விட்டு, இதுபோல் இருண்ட நிறங்களை முயற்சி செய்து பாருங்களேன்! உங்களுக்குள் இருக்கும் அந்த நவீன பெண்மணிக்கு இது சிறந்த நிறம்.


POPxo பரிந்துரைக்கிறது - ஹூடா பியூட்டி ஸ்பைஸ் கேர்ள் மேட் லிப்ஸ்டிக்  (Rs.1650)


ஊதா நிறம் -


pexels-photo-925345


ஆம்! வயலட் நிறம் மிக புகழ் பெற்ற ஒரு நிறம் ஆகா அமைந்துள்ளது இந்த காலத்தில். இதற்கு நீங்கள் இதே நிறத்தில் ஒரு கண் மை  பூசினால், மிக அழகாக இருக்கும்.


POPxo பரிந்துரைக்கிறது - நைகா மேட் டு லாஸ்ட்  (Rs.599)


இப்போ உங்களுக்கு தெரிந்திருக்குமே.. எந்த நிறம் உங்களுக்கு தகுந்தது என்று!  


இதில் உங்களுக்கு பிடித்த நிறத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


படங்களின் ஆதாரங்கள் - பிக்ஸாபெ , பேக்செல்ஸ்   


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.