பிஸியான பெண்மணியா?! போதுமான ஊட்டச்சத்தை பெற, உங்களுக்கான சிறந்த ப்ரோடீன் ஷேக்ஸ் (protein shakes)

 பிஸியான பெண்மணியா?!   போதுமான ஊட்டச்சத்தை பெற,  உங்களுக்கான சிறந்த ப்ரோடீன் ஷேக்ஸ் (protein shakes)

இன்று வேலை பளுவில் ஓடி கொண்டிருக்கும் பெண்களுக்கு சரியான போசாக்கு உணவின் மூலம் மட்டும் கிடைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.இதனை சரி செய்ய மார்னிங் பிரேக்பாஸ்ட் ல புரத சத்து (protein)  அதிகம் உள்ளது போல் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கலாம்.அது தான் ப்ரோடீன் ட்ரிங்க்ஸ் (shakes).


உங்களின்  வாழ்வு முறையின் படி, நீங்கள் உட்கொள்ளவேண்டும் . உதாரணத்திற்கு , நீங்கள் திருமணமாகி குழந்தைகளோடு காலையில்  அலுவலகத்திற்கு ஓடிக்கொண்டு இருப்பவர் என்றால்,இதை காலையில் எடுக்கலாம். ஏனெனில், காலை உணவு எடுக்க உங்களுக்கு நேரம் மிகவும்  குறைவாக இருக்கலாம்! அல்லது, நீங்கள் உடல் பயிற்சின் போது பசியை போக்க,ஒரு சக்தியுடன் பயிற்சியில் ஈடுபட, ப்ரோடீன் ட்ரிங்க்ஸ் எடுக்கலாம். நீங்கள் உங்களின் உணவுகளுக்கு நடுவில் நொறுக்கு தீனி சாப்பிடுபவர் என்றால் , அப்போதெல்லாம் ப்ரோடீன் ஷேக் ஒரு கிளாஸ் குடிக்கலாம்.


இது உங்களின் பசியை போக்கும்!!


இதற்காக, நீங்கள் கடைகளுக்கு போக வேண்டாம். இதை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.ஸ்ட்ராபெர்ரி கேஷ்ஷு ஷேக் (Strawberry - cashew shake):


pexels-photo-1595006


ஸ்ட்ராபெர்ரி -5


முந்திரி -7-10


பால் -250ml


சுகர் - தேவைக்கு ஏற்ப


பழத்தை நன்கு அலசிய பின்னர்,  கொழுப்பு நீக்காத பாலை நன்கு காய்ச்சி, ஆறவைக்க வேண்டும்.முந்திரியை 1-2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை ஊற வைக்க மறந்துவிட்டால் கொஞ்சம் சுடு தண்ணீரில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊற  வைத்தல் வேண்டும். ஊற வைக்காமல் அரைத்து செய்தால் ஷேக் ட்ரிங்க்ஸ் பக்குவமான சிறு கெட்டி தனம் வாராமல் போகலாம்.ஊற வைத்து அரைக்கும் போதும் கிரீமி தன்மை கிடைக்கும்.முதலில் ஊற வைத்த முந்திரியை சிறுது பால் சேர்த்து ப்ளெண்டரில் நன்கு அரைத்து கொள்ளவும். 30 ml பால் சேர்த்தால் போதும். கிரீம் பதத்திற்கு அரைக்கவும். பின்னர்  ஜீனி, பால் வாடை பிடிக்காதவர்கள் எசென்ஸ் அல்லது ஒரு ஏலக்காய் சேர்த்து கொள்ளலாம். கூடுதல் மனமொடு இருக்கும்.அதில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை போட்டு மீதமுள்ள 220 ml பாலையும் சேர்த்து அடித்தால் ஸ்ட்ராிபெர்ரி ஷேக் ரெடி.இதன் மூலம் 24.72g புரத சத்து கிடைக்கிறது. இந்த ஷேக்யில் கடையில் கிடைக்கும் பிரெஷ்கிரீம் சேர்த்து கலக்கினால் கூடுதல் திக்னஸ் ஓடு  இருக்கும்.


வால்நட் பனானா ஷேக் (Walnut - banana shake) :


smoothie-729922 960 720


தேவையான பொருள் :


வால்நட் -5-7


வாழைப்பழம் -1


சர்க்கரை - தேவையான அளவு.


வால்நட்டை பாலில் நன்கு ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.


கிரீம் பதத்திற்கு அரைக்கவேண்டும். அதில் வாழைப்பழம் சேர்த்து ப்ளெண்டரில் அரைத்து ஜீனி சேர்த்தால் யம்மி ஷேக் ரெடி. தேவைப்பட்டால் வாசனைக்கு எசென்ஸ் அல்லது ஏலக்காய் சேர்க்கலாம். பனானா சேர்ப்பதால் சுமார்  43.54g புரதம் கிடைக்கும்.


மேலும் படிக்க  - அளவுக்கதிகமாக சாப்பிட கூடாத சில முக்கிய உணவு வகைகள்பசலி ஷேக் (spinach shake) :


pexels-photo-868511


பசுமையான பசலி கீரை


பாதாம் -10


சம்சா  விதை -சிறிதளவு.


ஆளி விதை -சிறிதளவு.


உப்பு -சிறிதளவு.


சர்க்கரை - தேவைக்கேற்ப.


பசலி கீரையை சுத்தம் செய்து, அலசி சூடான தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.பின்னர் ப்ளெண்டரில் ஐந்து முதல் எட்டு மணி நேரம்  ஊற வைத்த பாதாம் பசலி கீரை சேர்த்து, நன்கு அரைத்த பின்னர், ஊற வைத்த சம்சா விதைகள், ஆளி விதைகள் சேர்த்து தேவையான இனிப்பு சேர்க்கவும்.


பாதாமில் 17.26g புரத சத்து உள்ளது. கூடுதலாக சம்சா விதை ஆளி விதை, மேலும் வலுவான பொருட்களாக உள்ளது.


அவகோடா ஷேக் (Avocado shake) :


4443377532 61a94c5b80 o 173790


தேவையான பொருள் :


அவகோடா -1


தயிர் -200 ml


சம்சா விதை -சிறிதளவு


தேன் - தேவையான அளவு..


அவோகாடா பழச்சதையை ப்ளெண்டரில் போட்டு, தயிர்  சேர்த்து, அதனுடன் தேன் சேர்த்து நன்கு கிரீம் பதத்தில் அரைக்க வேண்டும்.இதன் மூலம் 18.34g புரத சத்து கிடைக்கும்.கடைசியாக ஊற வைத்த சம்சா விதைகளை சேர்க்க வேண்டும். தயாராகி விட்டது புரதம் நிறைந்த அவகோடா ஷேக்..


மேலும் படிக்க - தினமும் டிரை பூருட்ஸ் மற்றும் நட்ஸ் எவ்வளவு சாப்பிட வேண்டும்


மாம்பழ ஷேக் (Mango shake) :


mango-3380631 960 720


தேவையான பொருட்கள் :


அல்போன்சா மாம்பழம் -1


ஓட்ஸ் -1ts


பால் -200ml


தேன் - தேவைக்கேற்ப


தோல் சீவிய மாம்பழத்தையும்,  லேசான தீயில் ஓட்ஸை வறுத்து, இரண்டையும் ஒன்று சேர்த்து நன்கு அரைத்து பின்னர் பாலுடன் மீண்டும் அரைக்கவும். இனிப்பு சுவைக்கு ஏற்ப தேன் கலந்துகொண்டு பரிமாறினால் மேங்கோ ஷேக் ரெடி. இதன் மூலமாக 14.84g புரதம் நமக்கு கிடைக்கும்.


பொதுவாக காலை உணவுக்கு இது போன்ற ப்ரோடீன் ஷேக் (protein shake) எடுப்பதால், உடலுக்கு தேவையான புரதம் முழுமையாக கிடைக்கிறது. இதனால் ஆரோக்கியம், இளமை தோற்றம் போன்ற அனைத்து பெண்களின் அடிப்படை தேவையையும்  பூர்த்தி செய்யும்.


இதில் எந்த ஷேக் உங்களுக்கு பிடித்தது என்று எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


படங்களின் ஆதாரங்கள் - ஷட்டர் ஸ்டாக், பிக்சாபெ ,பேக்சேல்ஸ்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.