ஒரு நல்ல உறவிற்கு, இந்த மூன்று விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்

ஒரு நல்ல உறவிற்கு, இந்த மூன்று  விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்

திருமண வாழ்க்கை என்பது வெற்றி பாதையாக அமைவது என்பது அவ்வளவு எளிதல்ல. மீண்டும் மீண்டும் ஒருவரை காதலிப்பது எளிதல்ல. இதற்க்கென ஒரு தனி புத்திசாலித்தனம் வேண்டும்.இருமனம் இணையும் பந்தத்தில், மனம் ஒத்து போவது தான் மிக முக்கியம். இங்கு திருமணம் என்பது ஆடம்பர விழாவாக பார்க்கப்படுகிறது தவிர இரு மனம் இணையும் ஒப்பந்தம் என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.திருமணம் என்றால் அது அல்லது இது என மாற்றும் பொருளாக பார்க்காமல் நம்முடைய தாய் தந்தையை பிறவியிலே இறைவன் நிர்ணயித்து விட்டான், அதுப்  போல பேணிக் காக்க வேண்டும் திருமண பந்தத்தை.


இரு வேறு துருவங்கள் ஆன ஆணும் பெண்ணும் சமக்கோட்டில் செல்வதற்க்கு இருவரும் இணைத்து செயல்பட,இந்த மூன்று விஷயங்களை நீங்கள் மற்றவர்களிடம் பகிர்துகொல்லாமல் இருக்க வேண்டும்.விட்டு கொடுத்து போக வேண்டும், அப்படி போனால் வெற்றி அடையலாம் .


சிறு சண்டைகளை மற்றவர்களிடம் சொல்லாதே -


கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவது வழக்கம்.. அதை கணவனோ மனைவியோ யாரிடமும் சிறுபிள்ளை தனமாக பகிர்ந்துக்கொள்ள கூடாது. அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கூட பகிர்ந்துக் கொள்ளக்கூடாது..


pexels-photo-984949


கணவன் மனைவிக்கிடையே எப்படி எதற்காக எல்லாம் சண்டை இருக்கும் என்றால்-


  • கணவன் மனைவியிடம் பேச நினைக்கும் போது மனைவி செல் போனை பயன்படுத்துவது கணவனுக்கு எரிச்சலை உண்டாக்கும் சண்டையில் முடியும்.. அதே தவறை கணவன் செய்யும் போது மனைவிக்கு எரிச்சலை உண்டாக்கும்..

  • சிலருக்கு சத்தமாக சாப்பிடுவது பிடிக்காது கணவனுக்கு பிடிக்காத விஷயத்தை மனைவி செய்வது மனைவிக்கு பிடிக்காத விஷயத்தை கனவன் செய்வது சண்டையை உண்டாக்கும்..

  • சாப்பிடும் போது கணவன் அது சரியில்லை இது சரியில்லைன்னு குறைக்கூறுவது,

  • மனைவி கணவன் வாங்கி வரும் பொருட்களை குறைக்கூறுவது,

  • கணவன் மனைவி குடும்பத்தை பற்றி பேசுவது மனைவி கணவன் குடும்பத்தை பற்றி பேசுவது,

  • தனக்கு பிடித்த மாதிரி மனைவி இல்லாதது,

  • கனவனுக்கோ மனைவிக்கோ முன்னாள் காதல் ஏதேனும் இருப்பின் அதை பற்றி ஒருவர் மற்றவரை குத்தி காமிப்பது,என பல இடங்களில் சண்டைகள் வரும்...


ஒரு நல்ல உறவிற்கு இதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இரகசியமாக வைக்க வேண்டும்.


மேலும் படிக்க - ஒரு ஆண்மகனிடம் மேலும் சிறப்பாக அவனை அறிந்து கொள்ள கேட்ககூடிய 160 கேள்விகள்


த‌ற்போதைய உலகில் சமுக வலைத்தளங்களில் அன்றாட வாழ்வில் நடந்த விஷயங்கள், நடக்கும் விஷயங்கள் என அனைத்தையும் ஷேர்  செய்கின்றனர். இந்த பழக்கத்தினால் சில குடும்பங்களில் பிரலயேமே வெடிக்கிறது. நல்ல செய்திகளை ஷேர் செய்வது தப்பில்லை ஆனால்  நம் சொந்த வாழ்க்கை விஷயங்களை புகைப்படங்களை ஷேர் செய்வது தவறு.


அதே போல் நம் சொந்த விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. சொந்தமாக இருந்தாலும் அக்கம் பக்கமாக இருந்தாலும் நம் குடும்ப விஷயங்களை பாதுகாக்க வேண்டும்.. கணவனை பற்றி மனைவியோ, மனைவியை பற்றி கணவனோ மற்றவரிடம் குறைக்கூற கூடாது.. விட்டில் ஆயிரம் சன்டை இருந்தாலும் வெளியில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருத்தல் வேண்டும். இவ்வாறு இருந்தால் ஒரு ஆரோக்கியமான உறவுடன் (healthy relation) வாழ்க்கை சிறக்கும்.


உங்கள் பாலியல் வாழ்க்கை இரகசியமாக இருக்கட்டும்-


 couple-3064048  480


உடலுறவு கணவன் மனைவி இரண்டு பேர்க்குமே சமபங்கு உள்ளது. ஆனால் பொதுவாக பெண்கள் உடலுறவில் ஈடுபாடு கொள்வது ஆண்களை காட்டிலும்  மிக குறைவு. ஆண்கள் உடலுறவில் நிறைய எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில் பெண்களின் ஈடுபாடின்மை கண்டு மனம் விட்டு போகிறார்கள். சில ஆண்கள் வேறு பெண்களை தேடி போகும் சூழ்நிலை உள்ளாகிறது. உடலுறவில் பெண்கள் ஆண்களையும் ஆண்கள் பெண்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. உடலுறவு என்பது வெறும் உடல்  சுகத்தை மட்டும் குறிப்பிடுவது இல்லை மனதளவிலும் சந்தோஷத்தையும் வாழ்க்கையில் அன்யோன்யம் சிறந்த வகையில் அமையும்.. உடலுறவு ரகசியங்களை ரகசியமாகவே வைக்க வேண்டும். யாரிடமும் இதை பற்றி பகிர்ந்து கொள்ள கூடாது..


குடும்ப விஷயங்களை  வெளியில் சொல்லாதீர் -


உங்கள் இருவருக்கும் என தனிப்பட்ட ரகசியம் எப்போதும் வேண்டும்.வெளிப்படை என்னும் பெயரில் ரகசியங்களை உடைத்தால் கணவனின் நன் மதிப்பை இலக்க நேரிடும.


பெண்களின் பெவரைட் (favourite) சாங்  .....


கண்ணாலயே.... என்ற பம்பாய் பட பாடல்.. திருமண நேரத்திற்கு வரும் இப்பாடலில் வரும் இரு வரி,


மாமன்காரே ராத்திரி வந்தா மடியில கட்டிக்கோ,


மாமன் சொன்ன சங்கதி எல்லா மனசுல வச்சுக்கோ...


இவ்விரு வரி, வெறும் பாடல் வரிக்கலாக மட்டும் பார்க்காமல், ஆழ்ந்த கருத்து உள்ளது.


மாமன் சங்கதியை மனதில் வைத்து கொள்ள வேண்டும். சரி எது என்பதை உணர வேண்டும். ஆயிரம் சொந்தம் நட்புகள் இருந்தாலும், உன் கணவனின் குறையை யாரிடமும் சொல்லாதே.


girl-1076998  480
கணவனின் செயல் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதை திருத்த நினைத்து, உடனே எதுவும் சொல்லாமல், பொறுமையுடன் இருந்து, வேறு நல்ல மனநிலையோடு இருக்கும் போது குறையாக சொல்லாமல்,  அந்த செயலை இப்படி செய்து இருக்கலாமே என்று நிதானமாக சொன்னால் அமைதியான சூழலில் தவறை உணர்வதோடு மனைவியின் மீது நன்மதிப்பு வரும்.


வெற்றிகரமாக வாழ்க்கையை வழி நடத்துவது புத்திசாலி பெண்களுக்கு எளிது தான்.


படங்களின் ஆதாரங்கள் - pixabay, youtube,pexels


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.