எல்லோருமே தன் வாழ்வில் வேலை, பொறுப்பு என ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் . அனால், நம் நலனிற்காக சிறிது நேரத்தை ஒதுக்குவதோ அதை பற்றி யோசிக்கிறதோ இல்லை என்பதே உண்மை.
இதை நீங்கள் சுய நலம் என கருதினால் அது தவறு.
இது சுய கவனிப்பு ஆகும். இதுதான் நீங்கள் உங்கள் மீது காட்டும் அன்பும் அக்கறையும், ஏனெனில், நீங்கள் மட்டுமே உங்களுடன் கடைசி வரை பயணிப்பீர்கள்! மற்றவர்கள் எல்லோருமே போகும்பாதையில் நீங்கள் சந்திக்கும் அன்பர்களே!
ஆஹா! சுய கவனிப்பு ! கேட்க நல்லாதான் இருக்கு ஆனா இதற்கு என்ன செய்யவது என யோசிக்கிறீர்களா? உங்களின் சுய அன்பிற்கும் கவனிப்பிற்கும் நாங்கள் உங்களுக்கு பட்டியல் போட்டு கொண்டுவந்திருக்கும் சில விஷயங்களை கீழ் காணலாம் . இதை செய்து பாருங்களேன்! இந்த புத்தாண்டில் (new year) நீங்களே உங்களை காதலிக்க ஆரம்பித்து விடுவீர்கள்!
பின்பு, வாழ்வை சிறப்பாக வாழ துடங்கிவிடுவீர்கள்.
ஒரு கப் காபி உங்களுக்காக –
இத்தனை நாளாக நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லோர்க்கும் காபி, டி என போட்டு குடுத்திருப்பீர்கள் அல்லது சிங்கள் (single) என்றால் ஏதோ ஒரு அவசரத்தில் குடித்திருப்பீர்கள் . ஒரு முறை நீங்கள் விரும்பும் படி டீகாஷனை (decoction) கலந்து உங்களுக்காவே போட்டு குடிங்களேன்!
நாவல் –
ஏதேனும் ஒரு நல்ல நாவலை படியுங்கள். படிக்க படிக்க உங்கள் உலகத்தையே சிறிது நேரம் மாற்றி சுவாரஸ்யம் ஆகிவிடும் அந்த நாவல். சமூக ஊடகங்களை டிஸ்கனெக்ட் (disconnect) செய்து விட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் செயுங்கள்! அது இல்லாமல் தானே நாம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தோம்.
நடனம் – டான்ஸ் பேபி ! டான்ஸ்!
ஆம்… நடனம் நம் மனதை லேசாக்கும். ஒரு புதிய கலையை கற்று கொள்ளுங்கள் . அதில் இருக்கும் மாஜிக் உங்களுக்கு புரிய, இதை நீங்கள் பின்பற்றிதான் பார்க்கணும்!
![ezgif-1]()
மியூசிக்-
இந்த உலகில் நீங்க மட்டும்தான் இருக்கீறீர்கள் என்று நினைத்துக்கொண்டு உங்கள் அறையில் மியூசிக் ஒன் செய்து பாடல்களை கேளுங்கள். மேலும் பாட்டு பாட துடங்குங்கள். ஸ்ருதி , ராகம், தாளம் எல்லாம் முக்கியமா என்ன?!?!
கொஞ்சம் சிரிங்க பாஸ் –
ஏதேனும் ஒரு நல்ல காமெடி சீரிஸ் அல்லது படத்தை போட்டு நல்ல வாய் விட்டு சிரியுங்கள். உங்களை சிரிக்க வைக்க நீங்களே போதும். வேறு யாரும் தேவை இல்லை என நீங்கள் நிச்சயம் உணருவீர்கள்!
பார்க்கில் –
ஏதேனும் ஒரு பார்க்கில் வாக்கிங் போக துடங்குங்கள். அங்கு நீங்கள் பிரெஷ் காற்று மற்றுமில்லாமல் புது நண்பர்களையும் சந்திக்க வாய்ப்புகள் அதிகம்!
குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் –
நீங்கள் உங்கள் மன அழுத்தத்தை குறைக்க குழந்தைகளோடு விளையாடுவது மிக அவசியம். மேலும், வயதான பெரியோர்களுடன் அமர்ந்து உரையாடுவது உங்கள் மனதிற்கு நிம்மதியை குடுக்கும்!
இது தானே சிறந்த சுய கவனிப்பு!
பீயுட்டி பார்லர் –
உங்களை மேலும் அழகு படுத்த நீங்கள் மேனிகுர், பேடிகுர் மற்றும் ஹேர் டூ (manicure, pedicure, hair do) செய்யது கொள்ளலாம். இதில் உங்களின் கான்பிடென்ஸ் (confidence) லெவெலும் அதிகரிக்கும்.
![giphy 3]()
உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள் –
தினம் நீங்கள் எவ்வளவு ஆசிர்வாதத்துடன் இருக்கிறீர்கள் என பட்டியல் போட்டு எழுதுங்கள். உங்களின் நன்றியை ஒரு ஒரு விஷயத்திலும் காட்ட துடங்குங்கள். அதில் உங்களின் சந்தோஷம் மேலும் பெருகும்!
சுத்தம் செய்யுங்கள் –
உங்களின் ரூம் அல்லது அலமாரியை ஒழுங்கீனம் செய்யுங்கள். இதிலும் மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்.
லோங் டிரைவ் –
காரில் நீங்கள் உங்கள் தோழிகளுடன் அல்லது நீங்கள் மட்டுமே ஒரு லோங் டிரைவ்வில் சொல்லுங்களேன்! இதில் நீங்கள் உங்களுடன் செலுத்தும் நேரமாகும். அதில் கிடைக்கும் சந்தோஷமே தனி. கெளம்பிட்டீங்களா?
பேஸ் மாஸ்க் (face mask) –
உங்கள் முகத்தை மேலும் பிரகாசிக்க வைக்க ஒரு நல்ல பேஸ் மாஸ்க்கை தேர்ந்தெடுங்கள். அது சாக்லேட் மாஸ்க், லெமன், ஹனி, கிறீன் டி அல்லது வேறு ஏதாவது ஒன்றாக இருக்கலாம். அதை தடவிவிட்டு சற்று நேரம் ஓய்வெடுங்கள்.
அப்போ, நீங்கள் சுய கவனிப்பிற்கு தயாரா?!
இதில் நீங்கள் எதை மிக விரும்பினீர்கள் என அனுபவித்து எங்களுடன் பகிர்துகொள்ளுங்கள் .
படங்களின் ஆதாரங்கள் – பிக்ஸாபெ ஜிபி பேக்செல்ஸ்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.