புது வருடத்தில் உங்களின் அழகை பலமடங்காக்க சில சிறந்த மெஹந்தி டிசைன்கள் - Mehndi Designs To Try This New Year

புது வருடத்தில் உங்களின் அழகை பலமடங்காக்க சில சிறந்த மெஹந்தி டிசைன்கள் - Mehndi Designs To Try This New Year

மெஹந்தி என்பது பெண்மையோடு கலந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மருதாணி என்பது மெஹந்தி ( mehandi ) க மாறியிருக்கிறது. இதனைக் கைகளில் இட்டு கொண்டால் பல உடல் ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நம் கைகளில் இடப்படும் மருதாணி எந்த அளவிற்கு சிவக்கிறதோ அந்த அளவிற்கு நம் துணை நம்மோடு காதலாக இருப்பார் என்று விளையாட்டாக கூறப்படுவதுண்டு.


இந்தப் புது வருடத்தில் சில அழகிய மெஹந்தி டிசைன்கள் உங்கள் வாழ்வை மேலும் மெருகேற்றட்டும் (Amazing Mehndi Designs To Try This New Year)


1. இந்த வடிவம் அழகானது. குழப்பங்கள் இல்லாமல் தெளிவாக இருக்கிறது.காய் முழுக்க மெஹந்தி வரைந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு இந்த டிசைன் மிகப் பிடிக்கும். இதன் கலைத்தன்மை சிக்கலாக இல்லாதது மற்றும் இதன் பூ வேலைப்பாடுகள் அழகாக இருப்பது பெண்மையை அதிகரித்துக் காட்டும் தன்மையுடையது. இந்த டிசைன் யார் வேண்டுமானாலும் போடும்படி எந்த விசேஷத்தில் வேண்டுமானாலும் அணியும்படி இருக்கிறது.
2. இந்த மெஹந்தி டிசைன்(Mehndi Design) அற்புதமாக இருக்கிறது. உங்கள் கைகளை மேலிருந்து பார்த்தாலும் சரி உள்ளங்கைகளை பார்த்தாலும் சரி இதன் அழகு அனைவரையும் கவர்ந்திழுக்கும். இது பழங்கால பெய்ஸ்லி மற்றும் பூ வேலைப்பாடுகள் இரண்டையும் கலந்த ஒரு சிறப்பான டிசைன். இந்த டிசைன் கைகள் முழுதும் அதிகமாகவும் இருக்காது அல்லது குறைவாகவும் தெரியாது. சரியான விதத்தில் உங்கள் கைகளில் பரவியிருக்கும். இது உங்கள் திருமணம் அல்லது மற்ற விழாக்களுக்கு மிக பொருத்தமான மெஹந்தி டிசைன்.
3. ஒரு வித்யாசமான அரேபிக் மெஹந்தி டிசைனை தேடிக் கொண்டிருக்கிறீர்களா இந்த மெஹந்தி டிசைன் (mehndi design) அதற்கு பொருத்தமாக இருக்கும். மூன்று விரல்களில் மட்டுமே பூ வேலைப்பாடுகள் கொண்ட டிசைன் மற்றும் நடு விரலில் இருந்து மெஹந்தி டிசைன் உங்கள் மணிக்கட்டோடு சேரும் அழகும் தனித்துவம் வாய்ந்தது. மற்ற கடைசி இரு விரல்களிலும் அடர்த்தியான டிசைன் மற்றும் சில புள்ளிகள் இந்த டிசைனின் அழகை வித்யாசப்படுத்திக் காட்டுகிறது!4. இந்த அரேபிக் மணப்பெண் மெஹந்தி டிசைன்(mehndi design) உங்கள் மூச்சை நிறுத்தும் அழகைக் கொண்டது. இந்த டிசைன் முழுதும் சிக்கலான மற்றும் சின்ன சின்ன விபரங்கள் அடங்கியதாக இருக்கிறது. இதன் அமைப்பு தனிப்பட்டு தெரிவதால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் தன்மை வாய்ந்தது.
5. இது மணப்பெண்ணின் கால்களுக்கான தனிப்பட்ட மெஹந்தி டிசைன். எந்த திருமணமாக இருந்தாலும் அங்கு மணப்பெண் ஸ்பெஷலாகத் தெரிய வேண்டும் என்பதன் விதிக்கேற்ப இந்த டிசைன் அவரை சிறப்பாகக் காட்டும். ஆகவே இத்தனை அழகான டிசைன் இருக்கையில் உங்கள் கால்களை நீங்கள் ஏன் வெறும் கால்களாக காட்ட வேண்டும். கால்விரல்களில் காணப்படும் இல்லை வடிவங்கள் இந்த மொத்த மெஹந்தி வடிவத்தையும் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறது.
6. மெஹந்தியை எளிமையான வடிவத்தில் போட விரும்புவர்களுக்கான டிசைன் இது. இது குறைவான டிசைனையும் அதிகமான வெற்றிடங்களயும் கொண்டது. இது உங்கள் கைகளின் அழகையும் அதே சமயம் மருதாணியின் சிறப்பையும் ஒரே நேரத்தில் எடுத்துக் காட்டும்.7. இது பெண்மையின் மேன்மையை உணர்த்தும் வகையில் அற்புதமாக பூக்களின் வடிவத்திலேயே வரையப்பட்டுள்ளது. இது அனைத்து டிசைன்களில் இருந்தும் தனித்து தெரிகிறது. இதில் ஆங்காங்கே விடப்பட்டுள்ள வெற்றிடங்களே இதன் சிறப்பாகவும் இந்த வடிவத்தை எடுப்பாகவும் ஆக்குகிறது.8. இந்த அரேபிக் டிசைன் எப்போதும் எல்லோராலும் விரும்படுவது. முக்கியமான விழாக்காலங்களில் இந்த வகை மெஹந்தியை வைத்துக் கொள்ளவே பெண்கள் விரும்புவார்கள். இதன் நுணுக்கமான வேலைப்பாடுகளும் மற்றும் பல்வேறு வடிவங்களை ஒன்றிணைத்து வரையப்பட்ட விதமும் இலை அமைப்புகளும் இந்த டிசைனின் சிறப்பம்சமாகும்.8. உங்கள் கால்களை ஒரு சிறப்பான தருணத்தில் அழகாக காட்ட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பமா. அப்படியெனில் நீங்கள் இந்த டிசைனை தேர்ந்தெடுக்கலாம். இதன் எதிர்கோணங்களை சேர்க்கும் வடிவம் மற்றும் பூ வேலைப்பாடுகளின் கலவை உங்கள் கால்களை அற்புதமாக்கும். திருமணத்தின் போது இந்த வடிவம் உங்கள் கால்களை தனித்துக் காட்டும்.
9. உங்களுக்கு க்ளிட்டர்களை பிடிக்குமா? உங்கள் கைகள் தங்க நிறத்தில் ஜொலிக்க நீங்கள் விரும்புகிறீர்களா. அப்படியெனில் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது இவ்வகை க்ளிட்டர் மெஹந்தி டிசைனைத்தான். ட்யூப் க்ளிட்டர்கள் மெஹந்தி டிசைனின் நடுவே நிரப்பப்படுகிறது. இதில் ஆங்காங்கே பலநிற கற்களையும் பதிக்கின்றனர். அதனால் இந்த வகை மெஹந்தி உங்கள் கைகளை விழாக்கோலம் பூணச் செய்கிறது.POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.