உங்கள் துணை மற்ற பெண்ணிடம் பழகுகிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது

உங்கள் துணை மற்ற பெண்ணிடம் பழகுகிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது

உறவு என்பது ஒரு அழகான பந்தம். இதில் ஏமாற்றம் வந்தால் கண்டிப்பாக சிக்கலாகி விடும். இந்த நவீன காலத்தில் கணவனும் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. நிறைய மனிதர்களை சந்திக்கிறோம், பழகுகிறோம். அப்படிப்பட்ட மனிதர்கள் அதோடு நின்றால் பரவாயில்லை உறவுக்குள் வரும் போது தான் ஏமாற்றமும் உறவில் நெரிசலும் உண்டாகிறது. சில பேர்கள் இந்த மாதிரியான உறவில் இருப்பதை தங்கள் மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.


என்ன தான் அவர்கள் உங்களிடமிருந்து மறைத்தாலும் அவருடைய சில நடவடிக்கைகள் அதை காட்டிக் கொடுத்திடம். உங்கள் துணை(partner) உங்களை ஏமாற்றுகிறார் என்பதை சில செயல்களைக் கொண்டு நாம் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இதை அறிந்து கொண்டு செயல்படுவது உங்கள் எதிர்கால உறவிற்கு வழி வகுக்கும். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்


தினசரி வேலையில் மாற்றம்
கண்டிப்பாக கூடவே வாழும் உங்கள் துணையின்(partner) தினசரி வேலைகளை அறிந்து வைத்திருப்பீர்கள். தினசரி வேலைகளில் எதாவது மாற்றம் ஏற்பட்டால் கொஞ்சம் உஷாராக அவர்களை கவனிக்க வேண்டும். இந்த மாற்றங்களாக கூட இருக்கலாம்


வழக்கத்தை விட
உங்கள் துணை(partner) கவனமாக செயல்படுதல் புதியதாக ஒரு பொழுதுபோக்கை கையில் எடுத்தல் உங்கள் இருவருக்கிடையே உரையாடல் குறைதல் திடீரென்று தனியாக வெளியே செல்ல நினைத்தல் முன்னாடியை விட அதிகமாக சண்டை இடுதல் இப்படி அவர்களை அணுகாதவாறு சில நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ரெம்ப ரகசியமாக சில செயல்களை கையாள ஆரம்பிப்பார்கள்.


மொபைல் போன்
உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்றால் அவரின் மொபைல் போன் நடத்தை மாறியிருக்கும். வழக்கத்தை விட அதிகமாக மொபைல் போன் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். மெசேஜ், சேட்டிங் இப்படி எல்லாவற்றிற்கும் பாஸ்வேர்ட் போட்டு மறைக்க முயல்வார்கள். வலைதளங்களில் அதிக நேரம் நேரத்தை செலவு செய்வார்கள். அவர்களுடைய போனை தொடும் போதெல்லாம் கத்த ஆரம்பிப்பார்கள்.


விருப்பமின்மை
உங்களுடன் நேரம் செலவு செய்ய விரும்பமாட்டார்கள். இதற்கு காரணம் அவர்களின் கவனத்தில் வேறு ஒருவர் இருப்பது தான். முன்னாடி இருந்த மாதிரி உங்கள் உறவில் முழு ஈடுபாட்டை காட்ட மாட்டார்கள். உங்கள் தீர்மானங்களுக்கு உதவ மாட்டார்கள்.


நன்றாக பார்த்துக் கொள்ளுதல்
அவர்களுடைய தோற்றத்தில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். முன்னாடி இருந்ததை விட தங்கள் ஆடைகளை அணிவதில் மெனக்கெடுவார்கள். பேஷன் மற்றும் பெர்மியூம் போன்றவற்றின் சைடு சாய ஆரம்பித்து விடுவார்கள்.


ஏமாற்றுவதை அறிந்தால் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் துணை உங்களை ஏமாற்றுவது உண்மை என தெரிந்து கொண்டால் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்களை வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் மறுக்க வாய்ப்புள்ளது.


இப்பொழுது சரியான முடிவு எடுக்க வேண்டிய நேரம் உங்கள் துணையுடன் அமர்ந்து இது குறித்து பேசுங்கள். வாக்கு வாதமாக இல்லாமல் உங்கள் எதிர்காலத்தை பற்றிய ஒரு நிதானமான பேச்சுவார்த்தையாக இருக்கலாம்.

சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இருவருக்கும் ஏற்றவகையில் ஒரு முடிவை எடுங்கள். முடிவை எடுப்பதற்கு முன் கவனமாக செயல்படுவது நல்லது.


அவசரப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உங்கள் துணை உங்கள் எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார் என்பதை முதலில் நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் அனைத்தையும் உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசி தீர்வு காணுங்கள். அவசர அவசரமாக பிரிவு என்கிற முடிவிற்கு போக வேண்டாம். பரிவு எந்த ஒரு பிரச்சணைக்கும் தீர்வாகாது.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo