க்ரிமினல்களிடம் இருந்து உங்களைக் காத்துக் கொள்ள சில குறிப்புகள்

க்ரிமினல்களிடம் இருந்து உங்களைக் காத்துக் கொள்ள சில குறிப்புகள்

நாகரிகம் வளர வளர குற்றங்களும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப குற்றங்களும் தங்களை அப்டேட் செய்து கொண்டே தான் இருக்கின்றன.


பெரு நகரங்களில் கிராமங்களை விட குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. தனியே செல்லும் நபர்களைக் குறிவைத்து நகைகளை மிரட்டி வாங்குவது , வீடு புகுந்து கொள்ளை செய்வது மற்றும் இதற்காக கொலை கூட செய்யத் தயங்காதவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்க (safety) சில விஷயங்களை நாம் செய்வது இன்றைய கால கட்டத்தில் முக்கியமானதாகும்.


வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் பெற்றோர் வேலைக்கு சென்று விடும் சமயம் தனியாக இருக்கும் பெண் குழந்தைகள் மற்றும் தனியாக வசிக்கும் பெண்கள் ஆகியோர் கண்டிப்பாக தங்களுக்குத் தேவையான பாதுகாப்போடு இருக்க வேண்டியது அவசியம்.உங்களை யாரேனும் கண்காணிக்கலாம். ஆகவே ரகசியங்களை வெளியிடாதீர்கள்.


உங்கள் வீட்டுக்கு அருகே மற்றும் வெளியே மின்சார விளக்குகள் எரிய விடுங்கள். இருட்டுதான் குற்றங்களுக்கு வசதியானது. வீட்டின் அருகே மறைவான புதர்கள் இருந்தால் அகற்றி விடுங்கள்.


பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பல்வேறு விதக்கருவிகள் இப்போது விற்பனைக்கு வந்து விட்டன. பெப்பர் ஸ்பிரே, கூர்மையான சிறிய வகை பின்கள், மிளகாய் பொடி போன்றவற்றை எப்போதும் கைப்பையில் வைத்திருங்கள்.தனியே வசிப்பவர்கள் தங்கள் வீட்டின் கதவை யாரேனும் தொட்டால் அலாரம் அடிக்கும் வகையில் உள்ள கருவிகளை பயன்படுத்தலாம். முடிந்தவரை தனியே வாழ்பவர்கள் அபார்ட்மெண்ட்களை தேர்ந்தெடுப்பதே நல்லது.


ஆபத்துக் காலத்தில் உங்கள் செல்போன்கள் மூலம் உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி சில நவீன ஆப்கள் பயன்படுத்துங்கள்.             


உங்கள் வீட்டை யாரேனும் கவனிப்பது தெரிந்தாலோ சந்தேகப்படும்படி அங்கு யாரேனும் சுற்றினாலோ உடனடியாகக் காவல் நிலையத்திடம் தகவல்களை சொல்லுங்கள்.                 உங்கள் அக்கம் பக்கத்தாரோடு நட்பில் இருங்கள். அது எப்போதும் பாதுகாப்பை இரட்டிப்பாக்கும்.                                   


உங்களிடம் தேவைக்கு அதிகமான அளவில் பணமோ அல்லது நகையோ இருந்தால் வங்கிகளில் அதனைப் பத்திரப்படுத்துங்கள். பெரும்பாலான கொள்ளை மற்றும் கொலைகள் இதற்காகத்தான் நடக்கின்றன.


மோசமான எண்ணங்களுடன் உங்களை அணுகுபவர்களை நீங்கள் சமாளிக்க கொஞ்சம் தற்காப்புக்கலைகளை கற்றுக் கொள்ளுங்கள். தனியாக இருந்தாலும் இதனால் உங்களை நீங்கள் பாதுக்காக்க முடியும்.         


      


சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப சாதுர்யமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம்.                       


உங்களுடைய வருமானம், சேமிப்பு, சொத்து விபரங்கள் பற்றிய விஷயங்களை பெருமைக்காக வெளியே கூறாதீர்கள். நம்பிக்கையானவர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்துங்கள். உங்கள் ரகசிய விஷயங்கள் வெளியே கசிவதுதான் உங்களுக்கு ஆபத்தாக முடிகின்றன.   


           


----


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPx