உங்கள் பீரியட்ஸ் நிற்கப்போகிறது என்பதற்கான அடையாளங்கள்

உங்கள் பீரியட்ஸ் நிற்கப்போகிறது என்பதற்கான அடையாளங்கள்

40களுக்கு மேல் வாழும் பெண்களுக்கு தங்களுக்கு பீரியட்ஸ் எப்போது நிற்கும் என்கிற கவலை இருக்கலாம். அவர்கள் கீழ்கண்ட அறிகுறிகள் (symptoms) தங்கள் உடலில் ஏற்பட்டால் அவர்களது பீரியட்ஸ் நிற்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.     


ஹார்மோன்கள் தங்கள் செயல்களை நிறுத்த தொடங்கும் போது மாதவிலக்கு சுழற்சி பாதிக்கப்படும். இறுதி நிலை வருவதற்கு 3 முதல் ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த சிக்கல்கள் உடலில் ஏற்படலாம். இது தனிப்பட்ட உடல்வாகைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். சிலருக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும். ஒருசிலருக்கு இதன் அடையாளங்கள் இல்லாமலே காணாமல் போகும்.   


 


இதனைப் பற்றிய அதீத பயங்கள் அத்தனை மத்திம வயதுப் பெண்களுக்கும் உண்டு. என்ன நடக்குமோ என்கிற பயத்தோடுதான் அவர்கள் மாதாமாதம் நாட்களைக் கடத்துவார்கள்.       


எப்படி இந்த உடல் உணவை உண்டு வளர்ந்ததோ குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழிவிற்கும் அது தயாராக வேண்டியதும் உண்மைதான். இதற்காக மனதளவில் இயற்கையின் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது.


அடையாளங்கள்


உங்கள் பீரியட்ஸ் நிற்கப் போகும் என்றால் முதலில் அதன் சுழற்சி பாதிக்கப்படும். அதன்பின் உதிரப்போக்கு ஒரு சிலருக்கு அதிகரிக்கலாம். ஒரு சிலருக்கு குறைவாக ஏற்படலாம்.


ஒரு சில சமயம் பீரியட்ஸ் வராமலே நிற்கலாம். பின்னர் ஒரு சில வருடங்கள் வராமல் இருக்கும். அதன்பின் திடீரென ஒருநாள் ரத்தப் போக்கு ஆரம்பிக்கலாம்.


மூட்டு வலி மற்றும் வீக்கம் இந்த நேரங்களில் அதிகமாக இருக்கலாம். 


உடம்பில் வெப்பம் அதிகரிக்கலாம். இதனால் வியர்வை அதிகம் பெருகும். முகம் சிவக்கும். சில சமயம் தலை சுற்றும் . இப்படி சில நேரம் ஏற்படும்.சில சமயம் வருடங்களுக்கு இது தொடரும்.     நீர் அதிகம் அருந்துவதும் , பழரசம் அருந்துவதும் இதற்கு ஓரளவுக்கு பலன் தரும்.


இரவு நேரங்களில் வியர்வை பெருக்கால் நீங்கள் இன்னொருமுறை குளிக்க நேரிடலாம். இதுவும் இன்னொரு அடையாளம்.     


பெண்களின் பிறப்புறுப்பில் அதன் வழவழப்பு தன்மை குறையும். உலர்ந்து போகும். அதனால் அரிப்பு ஏற்படலாம். இந்த நேரங்களில் உடல் உறவை நீங்கள் தவிர்ப்பது நல்லது.     


நல்ல மாய்சுரைசர் பயன்படுத்தவும்.       


அடிக்கடி தலைவலிகள் வரும். வயிறு வலிக்கும். மார்பகங்கள் கனமாகும். சருமம் வறண்டு போகும். கூந்தல் பளபளப்பு குறையும். இதெல்லாமும் அடையாளமாகும்.இது போன்ற உடல் பிரச்னைகளால் அடிக்கடி எரிச்சலுக்குள்ளாவீர்கள். உங்களுக்கு மனநிலை அடிக்கடி மாறும் ,ஞாபக மறதி ஏற்படலாம், எதிலும் தொடர்பில்லாமல் இருப்பீர்கள் தேவையற்ற விஷயங்களுக்கு உடைந்து பலவீனமாக அழுவீர்கள்.


மேற்கண்ட அடையாளங்கள் இருந்தால் நீங்கள் மெனோபாஸ் நேரத்தில் இருக்கிறீர்கள் என்றும் இதனால் ஏற்படும் உடல் மாற்றங்களுக்கான மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால் ஓரளவிற்கு உங்கள் பீரியட்ஸ் நிற்கும்போது நீங்கள் அதனை சரியாக எதிர்கொள்ளலாம்.


மனரீதியாக உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ளலாம். பூப்பெய்ததில் இருந்து நாம் அனுபவித்து வந்த ரத்தப்போக்கு இனி நிரந்தரமாக நிற்கப் போகிறது ஆகவே உற்சாகமாவே இந்தக் கட்டத்தை நீங்கள் எதிர்கொள்ளுங்கள்.---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.