பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என காமசாஸ்த்திரா கூறும் தகுதிகள்

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என காமசாஸ்த்திரா கூறும் தகுதிகள்

இன்றைய காலத்தில் ஆண்களுக்கு சற்றும் சலித்தவர்கள் இல்லை நாங்கள் என நிறுபிக்கும் விதத்தில் பெண்கள் அனைத்து பணிகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது இருக்கும் அனைத்து துறைகளிலும் சில இடங்களில் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதீத சாதனை படைத்தவர்களாகவே இருக்கின்றனர்.


அதற்கு காரணம் பெண்களின் அயராத உழைப்பு மற்றும் விடா முயற்சி என கூட சொல்லலாம். வெரும் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கூறி அடிமை படுத்தி வந்த காலத்தை பெண்கள் தங்களது திறமையால் உடைத்தெறிந்துள்ளனர். பெண்களின் இந்த முன்னேற்றம் அனைவரையும் ஆச்சரியப்படவைத்தாளும் காமசாஸ்த்திரா(kamasasthra) பெண்கள் எப்படி இருக்க வேண்ம் என சில குறிப்புகளை கொடுத்துள்ளது.பல்வேறு சாதனைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் குடும்பத்தை நடத்துவதிலும் வல்லவர்கள் தான் என்பது இந்த காமசாஸ்த்திரா(kamasasthra) நிறுபித்துள்ளது.


காமசாஸ்த்திரா(kamasasthra) கூறும் தகுதிகள்
மனைவியாக கூடிய ஒரு பெண் தன் கணவனின் குடும்பத்திற்கு இணையான அந்தஸ்துள்ள குடும்பத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். இது பொருளாதார நிலை பற்றியதல்ல அதுபோன்ற குடும்பத்தில் இருந்து வரும்போது அவர்களின் பழக்கவழக்கங்களும், மாண்பும் இருக்குமென சாஸ்திரங்கள் கூறுகிறது.


அந்த பெண் நிச்சயம் அறிவில் சிறந்தவளாகவும், உலகில் நடக்கும் சம்பவங்களை கவனிப்பவளாகவும் இருக்க வேண்டும். பெண்ணின் கல்வியும், அறிவும் சமூகத்தின் மீதான அவளின் அக்கறையை காட்டும்.


ஒரு பெண் தன்னுடைய சுற்றப்புறத்தை பற்றியும் அதைசுற்றி நடக்கும் நிகழ்வுகள் பற்றியும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி உயர்வு, தாழ்வு பார்க்காமல் அனைவரிடமும் பண்புடன் பழகவேண்டும்.ஒரு பெண் தான் சார்ந்த மதத்தை மதிக்க வேண்டும் மற்றும் அதன் சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களை புறந்தள்ளாமல் இருக்கவேண்டும். தன்னுடைய சமூக மற்றும் குடும்ப பொறுப்புகளை தட்டிக்கழிக்ககூடாது.


பெண்ணின் ஆன்மா என்பது மிகவும் புனிதமானது. பணத்தை சேமித்து தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தும் லக்ஷ்மிதேவியாக இருப்பவள் பெண். சரஸ்வதி தேவியை போல இனிமையான மற்றும் தூய்மையான புன்னகை உள்ள பெண் உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.


அனைத்து நன்மை, தீமைகளையும் கற்றறிந்த ஒரு பெண் அனைத்து நியாத்தையும் அறிந்தவர். அவள் தன் கணவருக்கு ஒரு மந்திரி போல ஆலோசனைகளை வழங்குவாள். குடும்பம் என்னும் ராஜ்ஜியத்தை நிர்வகிக்கும் சிறந்த மந்திரியாக இருப்பாள்.


உடன்பிறந்தவர்களுடன் வளர்ந்த ஒரு பெண் மிகவும் பொறுமைசாலியாக இருப்பார் சொல்லப்போனால் பூமாதேவியை போல. அவர்கள் குழந்தைகளை சிறப்பாக பார்த்துக்கொள்வார்கள், உறவுகளையும், உரிமைகளையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கு அவர்கள் தயக்கம் காட்டமாட்டார்கள்.தன்னுடைய அன்பு மற்றும் ஆசைகளை வெளிப்படையாக கூற தெரிந்த பெண் கணவனின் அன்பை எளிதில் பெற்றுவிடுவார்கள். அவர்களின் வசசேகரத்தை இந்த குணம் அதிகரிக்கும்.


வயதில் மூத்தவர்களை நிச்சயம் மதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும். அவர்களின் அறிவுரைகளையும், அனுபவத்தையும் ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்திற்கும் நன்மையை வழங்கும்.


கடினமான சூழ்நிலைகளை புரிந்துகொள்ளும் வலிமையான மனம் கொண்டவராக இருக்கவேண்டும். குடும்பத்தின் மோசமான தருணங்களில் இருந்து அதனை எப்படி வெளியே கொண்டுவருவது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களது அன்பும், ஆதரவும் எந்த நிலையிலிருந்தும் குடும்பத்தை மீட்டெடுக்கும்.இப்படியான தகுதிகளை பெண் கொண்டிருக்க வேண்டும் என காமசாஸ்த்திரா கூறுகின்றது. ஆனால் காம சாஸ்த்திராவில் எழுதும் முன்னே பன்டைய காலம் தொட்டு பெண்கள் இத்தகைய குணாதிசியங்களை இயல்பாகவே கொண்டிருந்ததாக புராணங்களும் கதைகளும் தெரிவிக்கின்றனர். 


எந்த சாஸ்திரம் தெரிவிக்கும் முன்பே பெண் என்பவல் இயல்பாகவே இத்தகைய நல்ல பண்புகளை கொண்டிருக்கிறாள். இன்னும் சொல்ல போனால் ராஜா காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண் நாட்டை ஆட்சி செய்திருக்கின்றனர். போருக்கு சென்று வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo