சுவாரஸ்யமான குறும்படங்கள்: உங்கள் வேலையின் நடுவில் பார்க்க -ரசிக்க

சுவாரஸ்யமான  குறும்படங்கள்: உங்கள் வேலையின் நடுவில் பார்க்க -ரசிக்க

நாம ஒரு டைம்ல கொஞ்சம் நேரம் கிடைச்சா போதும் கைல ஒரு புக் எடுத்துட்டு கம்முன்னு உட்க்காந்துருவோம். ஆனா இப்போ அந்த இடத்தை மொபைல் போன் பிடிச்சுருக்கு. இப்ப டைம் கிடைச்சா வாட்சப் பேஸ்புக் னு போயிரும். இன்றைக்கு தேதியில் பல்வேறு குறும்படங்கள் (shortfilms) வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இது ஒவோன்றும் வித்யாசமான கதை மற்றும் கருத்துடன் வெளியாகிறது. இனி ஒரு என்டேர்டைன்மெண்ட் அல்லது டயம் பாஸ் என்றால் திரை அரங்கம் மட்டும்தான் போகவேண்டும் என்பது கட்டாயமில்லை. வீட்டில் இருந்தபடியே பார்க்க, அலுவலகம் செல்லும் வழியில், பிரேக் டயமில் கொஞ்சம் நேரம் கிடைத்தால் போதும்,  உங்களை என்டேர்டைன் செய்ய குறும்படங்கள் எக்கச்சக்கம் !! அப்படிப்பட்ட சில சுவாரசியமான படங்கள் உங்களுக்காக...மா...  :  இது ஒரு 28 நிமிட படம்.


பதினைந்து வயது மகளுக்கும் தாய்க்கும் உள்ள உணர்வு போராட்டம் இப்படம். மிடில் கிளாஸ் பேமிலி.. அப்பா ஸ்ட்ரிக்ட் ப்ரோபஸ்ஸோர்.. மகளின் ஆடைகளில் கூட புதுமையை ஏற்க முடியாத மனிதர்..ஸ்போர்ட்ஸ் படிப்பு என அனைத்து துறையில் சாதிக்க துடிக்கும் மகள் அம்மு  ஊக்குவிக்கும் தாய். ஆனால், வயதின் காரணமாக கர்ப்பம் ஆக, கணவனின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மகளின் வாழ்க்கையை மீட்டு எடுக்கும் ஒரு தாயின் போராட்டமே இந்த குறும்படம். அருமையான திரைக்கதைக்கு இசை மேலும் கூடுதல் பிளஸ். 


அன்மாரிடு கேர்ள் (Unmarried girl) : 3 நிமிட காணொளி.. திருமண வயது அடைந்து பெண் திருமணத்தை எதிர் கொள்ளாமல் இலட்சியத்தை நோக்கி செல்லும் போது எதிர் கொள்ளும் கேள்வியை நகைச்சுவை உணர்வோடு வெளி படுத்துவது.இது ஒவ்வொரு பெண்ணும் கடந்து வந்த கேள்விகளே... எதார்த்தமான நகைச்சுவை உணர்வோடு கூறி இருப்பது செம கிளாஸ்!தங்லிஷ்:இது ஒரு குறும்படம். சென்னை சிட்டில இங்கிலிஷ் ஃப்ளுவன்சி (fluency) வராமல், திறமைகள் இருந்தும் வேலை  கிடைக்காமல் தவிக்கும் மதுரை பையனின் கதை. நேர்காணலில் வெற்றி பெற முடியாமல் தவிக்கும் நண்பனுக்கு உதவியாக தன் தங்கையை இங்கிலிஷ் கற்று தர அனுமதிக்கின்றன. இதன் காரணத்தால் இருவருக்கும் கிரஸ் (crush ) வர, இது வெளி ஆட்கள் மூலம் தெறித்து கொள்ளும்போது சூழ்நிலையை நண்பர்கள் எடுக்கும் முடிவே தங்கிலீஷ். கடைசியில் வேலை கிடைத்து, காதலை ஏற்று கொள்ள படுகிறதா என்பதே மீதி கதை.ஒர்த் டு வாட்ச்!தோட்டாக்கள் பூவாச்சு :அழகான பெண் தன் தோழியின் காதலுக்காக சமாதானம் பேச முன் பின் தெரியாத தோழியின் காதலனை பார்க்க செல்கிறாள்.ஆனால்,  அவனிடம் பேசுவர்த்தற்கு பதிலாக வேறு ஒரு ஆணிடம் பேசிவிட, இவள் பேசும் அழகில் மயங்கி அந்த இடத்திலேயே காதலை வெளி படுத்துகிறான் அவன். அந்த இடம் என்கவுண்டர் செய்ய போலீஸ் தேர்தெடுத்த இடம். அந்த நபர் போலீஸ். தோட்டா சத்தத்தில் மென்மையாக காதலை வெளிப்படுத்தினான் கதாநாயகன். இவள் காதலை ஏற்றதால் ஏற்படும் விபரிதாமாய் தோட்டாவை சந்திப்பது முடிவு. Gvm படம் பார்த்த பீல் கிடைக்கும். குறைத்து வார்த்தையில் ஓவியமாக அமைந்தது இந்த தோட்டாக்கள் பூவாச்சு குறும்படம்.

Subscribe to POPxoTV

 


புரட்டாசி அலப்பறைகள் :நக்கலைட்ஸ் சேனல் ஓட கலக்கல் காணொளி இது புரட்டாசி மாசம் பக்தியோடு விரதம் இருக்கும் தாய்க்கும், நான் வேஜ் சாப்பிட முடியாமல் தவிக்கும் மகள். இருவருக்கும் இடையில் ஏற்படும் எதார்த்தமான சூழ்நிலைகளும், வாக்குவாதங்களை அழகான காணொளியாக தயாரித்து இருப்பார்கள்.அதனை மேலும் சுவாரசியம் ஆக்குகிறது இடையில் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல வரும் திரைப்பட பாடல் வரிகள் மற்றும் இசை.கம்ப்ளீட் காமெடி பேக்கேஜ்.. ஜாலியா சிரிக்க இது பெஸ்ட் சாய்ஸ்.


மேலும் படிக்க & பார்க்க - நகைச்சுவை தொடர் : பார்த்து மகிழுங்கள் தி அப்பைரு (the affair)படுக்கையில் கிடக்கும் தாய், அவளிடம் தந்தை யாரோ ஒரு இளம் பெண்ணோடு  பழக்கத்தில் இருக்கிறார் என்று முறையிடும் மகள் மற்றும் மகன், இருவரும் தனியாக வசிக்கிறார்கள் ஆனால் அப்பாவின் நடவடிக்கையை அம்மாவை காண வரும் போதும் முறையிடுகிறார்கள்.இருந்தும் கணவன் மீது கோவம் கொள்ளாமல் நம்பிக்கையோடு இருக்கிறாள். கண்ணும் கருத்துமாய் மனைவியை பார்த்தும் கொள்கிறான். அப்போ அந்த பெண் யார்?  பார்த்து அறிந்துகொள்ளுங்கள் ! 


முற்றிலும் உணர்வு பூர்வமான கதைக்கு பலமாக உள்ளது, லிவிங்ஸ்டன் நடிப்பு. மிகவும் அருமையான அமைதியான கதைக்களம்.

Subscribe to POPxoTV

மேலும் படிக்க - உங்கள் எக்ஸ் பற்றிய உண்மைகளை உங்கள் துணையிடம் சொல்வது நல்லதா?கொஞ்சம் டைம் கிடைச்சா யாரோ அனுப்புனா காணொளியை (விடியோ) பார்க்காமல், நமக்கு பிடிச்ச வீடியோவை யூ டியூப்பில் (youtube) பார்த்து சின்ன சின்ன ரிலாக்ஸ் டைம்மிங்க சுவாரஸ்யமாக மாத்துங்க பிரண்ட்ஸ்....


படங்களின் ஆதாரங்கள் - பேக்செல்ஸ்,யு டியூப் 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.