logo
home / அழகு
மிதமான சுருள் கொண்ட வெட் ஹர் லுக் பெறுவது எப்படி?

மிதமான சுருள் கொண்ட வெட் ஹர் லுக் பெறுவது எப்படி?

ஆம்! வெட் ஹேர் லுக் இப்போதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. இது வெறும் ஈரமான கூந்தல் கிடையாது! இதற்கென சில உத்திகள் உள்ளனர். நம் செல்லும் இடத்திற்கு ஏற்ற சிகை மிக அவசியம் ஆகிவிட்டது. அதிலும் பார்ட்டி செல்லும் பெண்கள் என்றால்  இப்படி ஒரு வெட் ஹேர் லுக் (wet hair look) மிக அவசியம்! இதை எப்படி பெறுவது என்று நங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்.

  1. முதலில் நீங்கள் உங்கள் கூந்தலை நன்றாக வாஷ் செய்யுங்கள். அதன் பிறகு அதை  உலர வையுங்கள். ஹேர் ட்ரையர் ஏதும் பயன்படுத்தாமல், கூந்தலை துண்டில் உலரவைப்பது அவசியம். அடுத்து, ஒரு ஸ்டைலிங் பிரஷால் இதை சரி செய்யவும்.
  2. ஒரு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர் எடுத்து (அல்லது கடல் உப்பு ஸ்பிரே ) கூந்தலில் தெளித்தி ஈரமாக்கவும். இதை வேரிலிருந்து கடைசி நுனி வரை தெளிக்க வேண்டும். ஸ்பிரே செய்யும் போது கூந்தலை கொதி விட மறக்காதீர். இதை அதிகம் தெளிக்காமல் அளவாகா தெளிக்க வேண்டும்.
  3. சிறு பகுதிகளாக  உங்கள் கூந்தலை பிரிக்கவும்.இதில் ஏதேனும் ஒரு ஸ்டைலிங் வாஸ்க்ஸ் பயன்படுத்தி  வேரிலிருந்து நுனி வரை பூசவும். இது உங்கள் கூந்தலை சுருள் உடன் இன்னும் வேவி (wavy) ஆகா காண்பிக்க உதவும்.
  4. அடுத்து, இதில் நீங்கள் இப்போது, சிறிய பின்னல்களை பின்னிக்கொண்டே வரவேண்டும்.  இதை வேரிலிருந்து நுனி வரை நுணுக்கமாக பின்ன வேண்டும் (ஒரு தெளிவான வெட் ஹேர் தோற்றத்திற்கு ). அடுத்து, ஒரு டெக்ச்சரிங் கிரீம் ( இது உங்கள் பின்னல்களை மிக அருமையாக செட்டிங் செய்தபடி காண்பிக்க உதவும் ) எடுத்து உங்கள் பின்னல்களில் நன்றாக  தடவுங்கள்.
  5. பத்து நிமிடத்திற்கு பிறகு பின்னல்களை  பிரித்து விடவும். ஒரு மிதமான அலை கொண்ட வெட் ஹேர் லுக் தயார்!

மற்ற ஸ்டைலிங் தோற்றங்கள் –

Untitled design %2810%29

பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்

பின்னல் கொண்ட அழுத்தமான சுருள்கள் தேவையில்லை என்றால், நீங்கள் கீழ் இருக்கும் வேறு வெட் ஹேர்  ஸ்டைலிங் வழிகளை பின்பற்றலாம்.

ஸ்டைல்  1 –

உங்கள் கூந்தலை உலர்த்திவிட்ட உடனே தண்ணீரால் ஸ்பிரே செய்து  விட்டு, அதை நன்றாக உங்கள் விரல்களால், சுருக்கி விடவும் (பிடித்து இழுப்பதை போல் கசக்கவும் ) .இது ஒரு லேசான சுருள் கொண்ட தோற்றத்தை அளிக்கும். 

ஸ்டைல் 2 –

ஒரு சிறிதாக வரையறுக்கப்பட்ட பல் கொண்ட சீப்பை பயன்படுத்தி, உங்கள் கூந்தலை முன்னில் இருந்து பின்வரை சீவுங்கள். இது ஒரு பைன் பினிஷ் குடுக்கும்.

ஸ்டைல் 3 –

ஒரு வெகுடு எடுக்க வேண்டும்.நேராகவும் இருக்கலாம் அல்லது சைடில் இருக்கலாம். மீண்டும் ஒரு சிறிய பல் கொண்ட சீப்பை பயன்படுத்தி மெதுவாக சீவுங்கள். இதில் ஒரு ஸ்மூத் பினிஷ் தோற்றம் தரும்.

இதை இப்படியே நீண்ட நேரம் வைத்துக்கொள்ள, ஒரு டெக்ச்சரிங் ஹேர் ஸ்பிரே அல்லது ஷைன் ஸ்பிரே அடித்து முடிக்கவும்.

POPxo பரிந்துரைக்கிறது  –

டெக்ச்சரிங் ஹேர் ஸ்பிரே – வெலா மேட் டெக்ச்சரிங் ஹேர் பேஸ்ட் (Rs.600)

ஸ்டைலிங் ஸ்பிரே – டோனி & கய் பினிஷிங் பைன் ஸ்ப்ரே  (Rs.765)

டிப் – ஹேர் ஸ்பிரே அடிக்கும் போது எப்போதும் 1 அடி தூரத்தில் வைத்து அடிக்கவும்.

பினிஷிங் லுக் –

இதற்கு, அதித்தி  ராவ் போல் ஒரு பினிஷிங் குடுக்க – 

பாவுண்டேஷன் – உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஒரு  கிரீம் பாவுண்டேஷன் ஒன்றை முகத்தில் பூசவும். இதை உங்கள் விரல்களால் அல்லது ஒரு  பிரஷ்ஷில் சரிசமமாக பூசவும். தாடை வரிக்கு கீழ் உங்கள் கழுத்து பகுதிகளில் பூசுவது அவசியம்.

கண்கள் – இதில் நீங்கள் நோ – மேக்கப் லுக் தரலாம்.அல்லது உங்கள் கண்களுக்கு, உங்கள் உடைக்கு ஏற்ற ஒரு ஐ லைனரை பூசுங்கள். பார்ட்டி லுக் என்பதால், ஏதேனும் ஒரு எலக்ட்ரிக் ப்ளூ அல்லது கிறீன் லைனர் நன்றாக இருக்கும்.

உதடு –  அதித்தி யை போல் ஒரு நுட் லிப்ஸ்டிக் பூசினால் இது இன்னும் உங்களை எளிமையாகா காட்டும்.

ஒரு சீரற்ற கூந்தல் கொண்ட வெட் ஹேர் தோற்றம் .. உங்களை மேலும் எளிமையாக காட்ட! 

படங்களின் ஆதாரங்கள் – இன்ஸ்டாகிராம், பேக்சேல்ஸ் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo. 

 

 

27 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this