அச்சுறுத்தும் சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள்! கட்டாயம் பார்க்கவும்

அச்சுறுத்தும் சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள்! கட்டாயம் பார்க்கவும்

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரையும் தற்போது மிகவும் அச்சுருத்தும் நோயாக இருப்பது சிறுநீரக நோய்(kidney) தான். உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிற சிறுநீரகங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே, உடலின் பொது ஆரோக்கியம் காக்கப்படும். பொதுவாகக் கட்டுப்படாத நீரிழிவு நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்தஅழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.


1. பொதுவான அறிகுறிகள்
i. முகம் வீங்குதல்
ii. பசியின்மை மற்றும் வாந்தி எடுத்தல்
iii. உயர்இரத்த அழுத்தம் - ஹைப்பர் டென்ஷன்
iv. இரத்தசோகையும் உடல்நலிவாதலும்
v. எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தாக்கங்கள்


2. சிறுநீரைப் பொறுத்த சில கோளாறுகள்.
           சிறுநீர் சார்ந்த பொதுவான பிரச்னைகள்


பொதுவான அறிகுறிகள்

முகம் வீங்குதல்
முகம் வீங்குதல், அல்லது பாதங்களும் அடிவயிறும் வீங்குதலும் இந்த நோய்களைக் காட்டிக் கொடுத்து விடும். இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வீக்கங்கள் முதலில் முகத்தில் ஆரம்பித்து கண் இமைகளைத் தொட்டு விட்டு முக்கியமாக காலை வேளையில் மிகவும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும் நிலைகளாகும்
சிறுநீரகங்கள்(kidney) பழுதாவதே முகம் வீங்கும் அறிகுறியால் தெரிவிக்கும் செய்தி. ஆனால் வெறும் வீக்கங்கள் மட்டுமே போதுமான அறிகுறிகள் அல்ல. ஒருசில மாதிரியான சிறுநீரக பழுதுகளில் முறையாக வேலை செய்து கொண்டிருக்கும் சிறுநீரகங்கள் கூட வீக்கங்களைக் கொண்டு வரும். (உதாரணத்திற்கு நெஃப்ராடிக் சின்ட்ரோம் போன்ற நோய் வகைகள்) . ஒரு சிலருக்கு அந்த வீக்கமே காணப்படாமல் போகலாம். ஆனால் சிறுநீரகங்கள் குறிப்பிடப்படும் அளவுக்கு பாழாகி இருக்கும்.


பசியின்மை மற்றும் வாந்தி எடுத்தல்
பசியின்மை, அசாதாரண வாய் ருசி, மற்றும் மிகக் குறைவாக உணவில் நாட்டம் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். இது மேலும் மேலும் பழுதாகும்பொழுது, விஷப் பொருட்களின் அளவு இரத்தத்தில் அதிகமாகும்பொழுது, - சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாந்தி மற்றும் அடிக்கடி விக்கல்கள் வரும்.உயர் இரத்த அழுத்தம் - ஹைப்பர் டென்ஷன்
சிறுநீரகங்கள் பழுதடைந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவது சகஜம். இளம் வயதில் அதாவது 30 வயதிற்குள் இது ஏற்பட்டால் அல்லது மருத்துவர் சோதிக்கும்பொழுது உயர் இரத்த அழுத்தம் உறுதியானால், சிறுநீரகக்(kidney) கோளாறுகளே அதற்குக் காரணமாக இருக்கலாம்.


இரத்தசோகையும் உடல்நலிவாதலும்
உடல்நலிவு, ஆரம்ப வலிகள், கவனக் குறைபாடு ஆகியவை இரத்த சோகை உள்ளவர்களுள் தென்படும் பொதுவான அறிகுறிகளாகும். மிக மிக மோசமாக சிறுநீரக நோய்கள் தாக்கும் பொழுது இது போன்ற அறிகுறிகள் ஆரம்பமாகலாம். பொதுவான சிகிச்சைகள் மூலம் இரத்த சோகையை குணப்படுத்த முடியவில்லையெனில், சிறுநீரக செயலிழப்பு என்பதை உறுதி செய்யலாம்.


எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தாக்கங்கள்
கீழ் முதுகில் வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் கால்களில் பிடிப்பு போன்றவை பொதுவாக சிறுநீரக நோய்களின் பிரதிபலிப்பு ஆகும்.
வளர்ச்சி குன்றுதல் மற்றும் உயரம் குறைவாக இருத்தல் மற்றும் கால் எலும்புகள் வளைந்து கொடுத்தல் - இவை எல்லாம் சிறுநீரக நோய்கள் குழந்தைகளைத் தாக்கும்பொழுது வரக் கூடிய அறிகுறிகள்.


சிறுநீரைப் பொறுத்த சில கோளாறுகள்.
சிறுநீர்(kidney) சார்ந்த பொதுவான பிரச்னைகள்
1. சிறுநீரின் கன அளவு குறைதல் சிறுநீரக நோய்களின் பொதுவான அறிகுறியாகும்.


2. சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் எடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழிதலும், சிறுநீர் கழிக்கும்பொழுது இரத்தமும் சேர்ந்து போதல் அல்லது சீழும் சேர்ந்து வருதல் என்பன சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறி.


3. சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் அடைப்பு வலியை ஏற்படுத்தும் அல்லது சிறுநீர் அளவு மிகவும் குறைந்து துளித்துளியாக வெளி வரும். மிகவும் மோசமான நிலைகளில், சிறுநீர் கழிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும்.


மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டாலும் சிறுநீரக நோய் என்று முடிவுகட்டி விடக் கூடாது. இவ்வகை அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது அவசியமாகும். சோதனைகளைச் செய்தும் பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டும் முடிவுக்கு வருவது நல்லது. கடுமையான சிறுநீரக நோய்கள் உள்ளிருந்து கொண்டே தொடர்வது கூட சாத்தியம் என்பதை அவசியம் உணர்ந்தாக வேண்டும். இது நெடுநாட்களாகவே கூட நீடித்துக் கொண்டு இருக்கலாம். வெளிப்புறத்தில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு இருக்கலாம். இளம் வயதிலேயே, இரத்த அழுத்த நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், சிறுநீரக நோய் எதுவும் தாக்கவில்லை என்பதை முதலில் ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவும்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo