திருமணமான தம்பதிகளில் உடலுறவில் இணையும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

திருமணமான தம்பதிகளில் உடலுறவில் இணையும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

திருமண(married) உறவில் இணையும் ஆண் பெண் ஆகிய இருவரும் பல்வேறு கனவுகள் மற்றும் கற்பனைகளுடன் தங்கள் வாழ்க்கை ஆரம்பிக்கின்றனர். வாழ்க்கை துணைக்கு என்னவெல்லாம் பிடிக்கும் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனமுடனும் அக்கறையுடனும் இருப்பார்கள். புதிய உறவு என்பதால் சந்தோஷத்தை மட்டுமே எதிர்பார்க்கவும் கொடுக்கவும் செய்வர்.


இருவரும் தங்கள கோபங்கள், கசப்பான அனுபவங்களை தவிர்த்து இனிமையான சந்தோஷமான அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள ஆசைபடுவார்கள். ஒருவரை ஒருவர் கவர்ந்திழுக்க பிடித்தமான விடங்களை மட்டும் பிகிர்ந்துக்கொண்டு வெளிப்படுத்துவர். இவை எல்லாவற்றையும் விட உடல் ரீதியான உறவை புதுபித்து கொள்ளவது மிக முக்கயமாக ஒன்றாகும்.

விளையாட்டில் ஈடுபடுவது
திருமண(married) உறவில் உடலுறவிற்கு முன்பாக காதல்படுக்கை விளையாட்டு மிகவும் முக்கியம். இது தான் உங்கள் உடலுறவை உச்சகட்ட நிலைக்கு எடுத்து செல்லும். ஆண் பெண் இருவரும் முத்தங்களை பரிமாறிக்கொள்வது, கட்டிப்பிடிப்பது, ஒருவர் மேல் ஒருவர் சீண்டல் செய்வது, குரும்பு விளைாயட்டில் ஈடுபடுவது உங்கள் நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கும். பதட்டத்தையும் குறைத்து சகஜமான நிலைக்கு உங்களை எடுத்துச்செல்லும்.


புதிய உறவு
புதிதாக ஒரு திருமண(married) வாழ்க்கையைத் தொடங்கப் போகிறோம் என்றதும் பொறுப்புகள் கூடுவதால் ஆண், பெண் இரண்டு பேருக்கும் அதிக அளவிலான மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அதனால் வாழ்க்கையைத் தொடங்க சௌகரியமான நேரத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் உடலளவிலும் நீங்களும் உங்கள் துணையும் முதலில் தயாராக வேண்டும். இருவருக்கும் எந்தவிதமான மன அழுத்தமும் இருக்கக்கூடாது.

தேவையான பாதுகாப்பு
முதல் முறையாக திருமண(married) உறவில் ஈடுபடுகிற போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகமிக அவசியமான ஒன்று. அதனால் தேவையில்லாத கர்ப்பத்தைத் தவிர்க்க முடியும். ஆணுறை, கருத்தரிப்பு மாத்திரைகள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்கள் ஆணுறை வாங்கி வைத்திருப்பார்கள் என்று உங்கள் துணையை நம்பிக் கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் ஆணுறைகளை வாங்கி வைத்திருப்பது நல்லது. ஆணுறை, மத்திரைகள் இரண்டையும் பயன்படுத்துவது இன்னும் கூடுதல் பாதுகாப்பைத் தான் தருமேயொழிய ஆபத்து எதுவும் இல்லை.

கன்னித்தன்மை
பெரும்பாலானோர் பெண் கன்னித்தன்மையடன் இருக்கிறாள் என்பதை முதல் முறை திருமண(married) உறவின் போது வெளிப்படும் ரத்தத்தை வைத்தே முடிவு செய்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை. அந்த காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்ததால் கன்னித் திகை்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த காலத்தில் பெண்கள் அப்படியில்லை. விளையாடும்போது, ஓடும்போது, வேகமக நடக்கும் போது, பயணங்களின் போது என எப்போது வேண்டுமானாலும் கன்னித்திரை உடைந்திருக்கும். எல்லா பெண்களுக்கும் இதுபோல் ரத்தப்போக்கு உண்டாவதில்லை. பெண்கள் ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல். குதித்தல், உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும்போது கூட கன்னித்திரை கிழிந்துவிடும். அதனால் முதல்முறை உண்டாகும் ரத்தப்போக்குக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது.

வலியை கண்டு பயப்பட வேண்டாம்
முதல் முறையாக திருமண(married) உறவு கொள்ளும்போது வலி உண்டாவது இயல்பு தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக வலி ஏற்படும். அவர்களுடைய பிறப்புறுப்பு சிறிதாக இருக்கும். அதனால் வலியை அதிகமாக உணர்வார்கள். அதற்காக பெரிதாகக் கவலையோ தேவையில்லாத பயமோ கொண்டிருக்கத் தேவையில்லை. கொஞ்ச நேரத்திலேயே வலி குறைந்து சுகமாக உணர ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் வலியைக் கண்டு பதட்டப்படாமல் இருப்பது தான் சுகத்தைக் கொடுக்கும்.

ஈரப்பதத்துடன் வைத்திருப்பது
பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் இது அவசியம் தான். குறிப்பாக பெண்கள் பிறப்புறுப்பை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம். ஏனெனில் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி வறட்சியாக இருந்தால் தான் உறவின் போது வலி அதிகமாக இருக்கும். முதல் முறை உறவு கொள்வதற்கு முன் ஓரளவு எதிர்பார்ப்டன் இருங்கள். பதட்டத்தையும் பயத்தையும் குறைக்க வேண்டும். இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டாலே முதல் முறை உடலுறவை நீங்கள் என்ஜாய் பண்ண முடியும். உங்கள் துணையை உங்கள் பக்கம் கவர்ந்து இழுக்க முடியும்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
 பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo