வெங்காயத்தாள் (spring onion ) உங்கள் கண்பார்வையை மேம்படுத்துவதில் எவ்வாறு உதவுகிறது?

வெங்காயத்தாள் (spring onion ) உங்கள் கண்பார்வையை  மேம்படுத்துவதில்  எவ்வாறு  உதவுகிறது?

நம் வாழ்வில் நம் கண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். இருந்தாலும் , நாம் அதை உதாசீன படுத்தி, அதற்கு தேவைக்கேற்ப பாதுகாப்பை அளிப்பதில்லை. இதன் விளைவுகள் நம் கண் பார்வையை பாதிக்கின்றது.இதை சேரி செய்ய ஒரு எளிய வழி - உணவு! நம் உணவில் சேர்க்கும் காய்கறிகளே நமக்கு இயற்கை தந்திருக்கும் ஒரு மந்திரம்.காய்கறிகளில் பிரபலமான ஒன்று வெங்காயத்தாள் (spring onion). சிலருக்கு இதை எப்படி சமைப்பது, இதன் பயன்கள் மற்றும் நன்மைகள் (benefits) எதுவும் தெரியாது. இந்த  ஊட்டச்சத்துக்கள் மிகுந்த வெங்காயத்தாளின் மூலம் உங்கள் கண் பார்வையை சேரி செய்யக்கூடிய சிறப்புகளை பற்றி பார்ப்போம்.


வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தாள் வெள்ளை,மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்க கூடியது. இது குறைந்த கலோரியை கொண்டது. இந்த அற்புதமான வெங்காயத்தாளை சீனாவில் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. சீனர்கள் வெங்காயத்தாளை பயன்படுத்தாமல் உணவுகளை சமைப்பதில்லை. சீனர்களின் நீண்ட ஆயுளுக்கும் வெங்காயத்தாள் ஒரு முக்கிய காரணம்.பல வகைகளில் இந்த வெங்காயத்தாள் கண்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. அதில் சிலவற்றை பார்ப்போம்.


கண் நோய்/பார்வை கொளாறு:


beautiful-2315 960 720


கண் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் அவசியம் வெங்காயத்தாளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிட்ட பார்வை/தூர பார்வை என்பது இன்றைய உலகில் பெரியவர்கள் மட்டும் பாதிப்படைவதில்லை. மொபைல்/டிவின்னு பார்த்து பார்த்து ஸ்கூல் பிள்ளைகள் கூட பாதிக்கப்படுகிறார்கள். இந்த பார்வை கோளாறுகளை சரி செய்வதற்கு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை வெங்காயத்தாளை பச்சையாகவோ, உணவிலோ சேர்த்துக் கொள்ள வேண்டும். பார்வை மங்களாக தெரிபவர்கள் வெங்காயத்தாள் பூவை கசக்கி கண்களில் காலை மாலை இரண்டு அல்லது மூன்று சொட்டு போட வேண்டும். இவ்வாறு செய்தால்  மூன்றே நாட்களில் பார்வை தெளிவடையும். வெங்காயத்தாளில் வைட்டமீன் சி, வைட்டமீன் பி2, வைட்டமின் ஏ,கே மற்றும் தயமின் என பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன இதுமட்டுமின்றி மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்,காப்பர்,மாங்கனீஸ் நார்ச்சத்துகள் மூலங்களாக உள்ளன.


Also Read Benefits Of Ginger In Tamil


வெங்காயத்தாளை எப்படி வாங்குவது:


வெங்காயத்தாளின் அடிபாகத்தில் இருக்கும் வெங்காயம் பளபளப்பாக இருக்க வேண்டும் அதன் குச்சி போன்ற தலைப்பகுதி நல்ல அடர்ந்த நிறத்தில் ஊசி போல் இருக்க வேண்டும்.


வீட்டில் பாதுகாக்கும் முறை:


சாதரணமாக வெங்காயத்தை காற்றோட்டமாக வைப்பது போல் இதை வைக்க கூடாது இதை குளிர்சாதன பெட்டியில் அதன் சத்துக்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.


பயன்படுத்தும் முறை:


வெங்காயத்தை போன்றே இதையும் பயன்படுத்தலாம்.


  • வெங்காயத்தாள் சாம்பார்-வெங்காயத்திற்கு பதிலாக இதை தாலிக்கலாம்

  • சாண்ட்விச் செய்யலாம்-பிரட் சாண்ட்விச் தயாரிக்கும் போது அதில் வெஜிடபிள்ஸ் அல்லது நான்வெஜ் (non veg)உடன் வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

  • சூப்-அனைத்து விதமான சூப்களிலும் இதனை சேர்த்து கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க - உங்கள் கிட்சேனில் சுலபமாக கிடைக்கும் இயற்கை வைத்தியங்கள் (natural healers)


வெங்காயத்தாளின் மற்ற நன்மைகள் -


பல்வலிக்கு:


blonde-2094172 960 720


வெங்காயத்தாள் பூ மற்றும் வெங்காயத்தை சம அளவெடுத்து சாறெடுத்து தினமும் வாய்கொப்பளித்து வந்தால் தீராத பல்வலி நீங்கும் ஈறு பிரச்சனைகள்  குணமாகும்.மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.


வயிற்று பிரச்சனை:


வெங்காயத்தாள் பூவை பொடியாக வெட்டி ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் சேர்த்து சூடேற்றி வதக்கவும். பூ வெந்தவுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் குடித்தால் வயிற்று பிரச்சனை நீங்கும் மேலும் இது பசியை தூண்ட கூடியது. செரிமான உபாதைகளை நிவாரணம் கூட வழங்குகிறது.


மூலம்:


ஒரு சட்டியில் வெங்காயத்தாள் பூக்களையும் வெங்காயத்தையும் நறுக்கி தயிரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் எரிச்சல் குத்தல் குணமடையும்.


சர்க்கரை நோய்:


diabetes-777002 960 720


இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுதுகிறது. குளுக்கோஸ் ஏற்ப்புத்தன்மையை  அதிகரித்து சர்க்கரை அளவை சீர் செய்கிறது.


புற்றுநோய்:


வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கூழ்ம நிலை கார்போஹைட்ரேட் நீரில் கரையகூடியது. இது புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.


கொலஸ்டரால்:


வெங்காயத்தாள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கவும் அதனால் ஏற்படும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது.


இதயத்தை பாதுகாக்கிறது:


pexels-photo-887349


இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட் டிஎன்ஏ பாதிப்படையாமல் இருக்க உதவுகிறது. புது செல்களை உருவாக்குகிறது. இதய நோய் மாரடைப்பிலிருந்து காக்கிறது. இரத்த அழுத்தத்தை சீர் ஆக்குகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் கே இருப்பதால் எலும்புகள் பலமடைகிறது.


ஆகவே,இனி வெங்காயத்தாளை நம் உணவில் சேர்க்கலாமா?  இவ்வளவு நன்மையை தரும் வெங்காயத்தாளை நீங்களும் அடிக்கடி உங்கள் வீட்டு சமையலில் சேர்த்து  சமைத்து சாப்பிடுங்கள், மருத்துவம் என்று தனி செலவு செய்யாமல் உணவே மருந்து என்று வாழ்வோம். 


மருந்து கடைல மாத்திரை வாங்காமல்,காய்கறி கடைல ஆரோக்கியம் வாங்குவோம்..


வாங்க.. !!.


படங்களின் ஆதாரங்கள் - பிக்ஸாபெ ,பேக்செல்ஸ்   


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.To approve a single suggestion, mouse over it and click "✔"

Click the bubble to approve all of its suggestions.