மேஷம்
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட(Horoscope) எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் பணியில் கவனத்துடன் இருக்கவும். சந்தேக உணர்வினால் நெருங்கிய உறவினர்களுக்கு இடையில் மனக்கவலைகள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். வேலையாட்களால் பணியில் சில தாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
மிதுனம்
மனதில் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்களின்(Horoscope) மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கணவன்,மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.
கடகம்
திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொல்லைகள் நீங்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுவதற்கான சூழல் அமையும். இன்று உங்களுடைய(Horoscope) அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.
சிம்மம்
கலைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். எதிர்பாலின மக்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மனக்கவலைகள் உண்டாகும். இயந்திரம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.
கன்னி
அந்நியர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பப் பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எண்ணங்களால் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். வாரிசுகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.
துலாம்
எதிர்காலம் சம்பந்தமான செயல் திட்டங்களைத் தீட்டி அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எண்ணங்கள் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.
விருச்சிகம்
திட்டமிட்ட பயணங்களில் சில இடர்பாடுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கி, கலகலப்பான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீலம் நிறமும் இருக்கும்.
தனுசு
திருமணப் பேச்சு வார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத விதமாக நண்பர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொருள்சேர்க்கை உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ரெயின்போ நிறமும் இருக்கும்.
மகரம்
தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் முதலீடுகள் அதிகரிக்கும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து ஆதாயம் பெறுவீர்கள். வெளியூா சம்பந்தமான தொழில் வாய்ப்புகளில் இருந்த தடைகள் நீங்கும். உடைமைகளில் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.
கும்பம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடங்களில் செல்வாக்கு உயரும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட கால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். திறமைகள் வெளிப்படுவதற்கான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.
மீனம்
உறவினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். தேவையற்ற பேச்சுக்களால் மனக்கவலைகள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.