உதடுகளின் கருமை நிறம் உங்கள் அழகினைக் குறைக்கிறதா? 99% பலனளிக்கும் சிறந்த தீர்வுகள்!

உதடுகளின் கருமை நிறம் உங்கள் அழகினைக் குறைக்கிறதா? 99% பலனளிக்கும் சிறந்த தீர்வுகள்!

அத்தனை பெண்களும் இளஞ்சிவப்பு நிற உதடுகளுக்காக ஏங்குவார்கள். ஆனாலும் உணவுப் பழக்கவழக்கம் , மரபணுக்கள் போன்ற பல்வேறு காரணங்களால் சில பெண்களின் உதடுகள் கருமையாக்க விடுகிறது. அது அவர்களின் அழகிய புன்னகையையும் மங்கி விட செய்கிறது.


இந்தக் கருமை நிற உதடுகளை மாற்றி இளஞ்சிவப்பு (pink ) நிறத்திற்கு திரும்பக் கொண்டுவர கீழே தரப்பட்டுள்ள சில எளிய தீர்வுகள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.


தேங்காய் எண்ணெய்


வீட்டில் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் இந்த தேங்காய் எண்ணெய் உதடுகளின் கருமை நிறத்தை போக்கி விரைவில் பழைய நிறத்திற்கு கொண்டுவருகிறது.


சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து இரவு உறங்கப் போகும் முன் உதடுகளில் தடவி லேசாக மசாஜ் செய்து விடுங்கள். இப்படி செய்து வந்தால் சில மாதங்களில் உதடுகள் இளஞ்சிவப்பாகும்.பகலிலும் இதனைப் பின்பற்றுங்கள்.பாதாம் எண்ணெய்


சில சொட்டுக்கள் பாதாம் எண்ணெயை எடுத்து இரவு தூங்கும் முன் மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் எண்ணெய் அப்படியே உதடுகளில் படிந்திருக்க வேண்டும்.


பாதாமில் உள்ள இலேபனம் எனும் மூலப்பொருள் உதடுகளை புதிது போல ஆக்க வல்லது. அது சீக்கிரமே உதடுகளின் கருமை நிறத்தை மாற்றி சிவப்பாக்கும்.எலுமிச்சை தேன் சீரம்


ஒரு ஸ்பூன் எலுமிச்சை ரசம் எடுத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் தேனை அதனோடு கலக்கவும். இந்தக் கலவையை உதடுகளில் தடவி ஒரு மணிநேரம் ஊற விடவும். அதன்பின் ஒரு மென்மையான துணியினை அல்லது பஞ்சினைப் பயன்படுத்தி இதனைத் துடைத்தெடுக்கவும்.


ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால் நிறமாற்றம் கொண்டுள்ள உதடுகள் மீண்டும் இளஞ்சிவப்பு வண்ணத்திற்கு மாறும்.
கிளிசரின்


கொஞ்சம் க்ளிசரினை பஞ்சில் நனைத்து அல்லது காது குடையும் பஞ்சில் தொட்டு உதடுகளில் ஒற்றி எடுக்க வேண்டும். இதனை இரவு முழுவதும் இப்படியே விட வேண்டும்.


சூரியனின் ஒளி மற்றும் மரபணு தாக்கம் மட்டும் இல்லாமல் உதடுகள் உலர்ந்த வண்ணம் இருந்தாலும் கருமையாகும். கிளிசரின் இதனை சரி செய்கிறது. மீண்டும் உதடுகள் பழைய நிறத்திற்கு திரும்புகிறது.
கற்றாழை ஜெல்


கொஞ்சம் கற்றாழை ஜெல்லை எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வர வேண்டும். சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.


கற்றாழையில் உள்ள ஆலோசின் எனும் மூலப்பொருள் உதடுகளில் ஏற்பட்டுள்ள நிறமாற்றத்தை வெகு சீக்கிரம் சரி செய்து உதடுகளை மிருதுவாக்கி இளஞ்சிவப்பாக்குகிறது.ஆப்பிள் சீடர் வினிகர்


ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினீகரோடு ஒரு ஸ்பூன் நீரைக் கலக்குங்கள். இந்தக் கலவையை பஞ்சில் தொட்டு உதடுகளில் ஒற்றி எடுக்கவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.


ஆப்பிள் சீடர் வினிகரில் இயற்கையான அமிலம் உள்ளது. இதில் உள்ள ஆல்பா ஹைடிராக்சிக் அமிலம் உதடுகளில் உள்ள கருமையை மாற்றி வெளுப்படைய வைக்கிறது. இதனால் உதடுகள் வண்ணம் மாறி சிவப்பாகுகின்றன. இதனை இரவு முழுதும் உபயோகப்படுத்த வேண்டாம்.
பேக்கிங் சோடா


ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து நீரோடு கலந்து கொள்ளவும். இதனை உதடுகளில் தடவி ஒரு டூத் ப்ரஷ்ஷினால் மெல்லத் தடவிக் கொடுக்கவும். அல்லது விரல்களைக் கொண்டும் செய்யலாம். இரண்டு மூன்று நிமிடங்கள் இப்படி செய்த பிறகு கழுவி உலர்ந்த பின்னர் கொஞ்சம் லிப் பாம் அல்லது ஆலிவ் ஆயில் தடவ வேண்டும்.


உதடுகளில் சேர்ந்துள்ள இறந்த செல்கள் மூலமாகக் கூட உதடுகள் கருமையாகக் காட்சி அளிக்கலாம். அதற்கு பேக்கிங் சோடாவை பயன்படுத்தினால் இறந்த செல்களை அகற்றி உதடுகளை இளஞ்சிவப்பாக்குகிறது. இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வரலாம். கண்டிப்பாக லிப் பாம் அல்லது ஆலிவ் ஆயிலை இறுதியில் தடவ வேண்டும். இல்லாவிட்டால் உதடுகள் வெடித்து விடலாம்.


 


 --


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.