இன்னைக்கு கல்யாணம் என்றாலே,திரும்பும் திசை எங்கும், உற்சாகம் பொங்கும் வண்ணமே! இதில் முழு ஈர்ப்பு மணப்பெண் மீது தான்.பெண்கள் என்றாலே அவ்வளவு அழகு. அதில் பூ, பொட்டு, பட்டு, நகை, என்று ஜொலிக்கும் மணப்பெண் என்றால் சொல்லவே வேண்டாம்.அதிலும், திருமண நாள் நெருங்கும் நேரத்தில், மணப்பெண்கள் எப்பொழுதும் ஒளிரும் தோற்றத்தில் இருப்பார்கள். நீங்கள் இதுபோல் ஒரு மணப்பெண்ணா?
நீங்கள் பார்க்க வேண்டிய அழகிய திருமண சேலைகள் (Beautiful Wedding Sarees You Need To Check Out)
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே… என்ற வரிகளுக்கு ஏற்ற மாதிரி நீங்கள் உங்கள் திருமண தருணங்களை கொண்டாட உங்களுக்கு நாங்கள் சிவப்பை தவிர வேறு வெளிர் மற்றும் ஈர்க்கவைக்கும் நிறங்களில் புடவைகள் அணிவதை பற்றி உத்தி அளிக்கிறோம். இது உங்களின் தனித்துவத்தை காட்டுவது மட்டும் இல்லாமல் உங்கள் திருமண புடவையையும் ஒரு நவீன முறையில் காட்ட உதவும்!
டீல் க்ரீன் (Teal Green)
ட்ரெண்டில் இருக்கும் நிறங்களில் சிறந்தது எனும் விதத்தில் , இந்த மணப்பெண் அணிந்திருக்கும் நிறம் தான் – டீல் க்ரீன் (teal green ). இதில் புடவை மிக இனிமையான ஒரு தோற்றத்தை அளித்திருக்கிறது.டிஸ்ஸு பட்டு என்று சொல்லப்படும் இந்த வகை பட்டு புடவைகள் பார்க்க பிளைன் புடவை போல இருந்தாலும் பட்டின் மினுமினுப்பு புடவை முழுவதும் இருக்கும்.
சேலை பிளைன்னாக இருப்பதால்,இதற்கு ஒரு ஹெவி ஒர்க் பிளவுஸ் (முழுவதும் தங்க நிற ஜரிகை மற்றும் பாசி மணிகள்) அதே நிறத்தில் இருப்பது அவசியம். இது பச்சை நிறத்தில் ஒரு மாறுபட்ட தோற்றம்!
Read About : ஆண்டு சடங்குகள்
ஆப் வைட் வித் கோல்டன் ஜரி (White With Golden Zari)
தங்க நிறம் அல்லது சந்தன நிறத்தில் வரும் லைட் கலர் பட்டு புடவைகள் புதுக் கவிதை போல மிகவும் நேர்த்தியாக இருக்கும்.இதற்கு பிரின்சஸ் கட்டிங் பிளவுஸ் நன்றாக இருக்கும்.புடவைக்கு பொருந்துவது போல வெள்ளை கற்கள் மற்றும் வெள்ளை முத்துக்களால் செய்த நெக்லஸ் பொருத்தமாக இருக்கும்.இதற்கு நீங்கள் உங்கள் புடவை நிறங்களில் ஒரு பிளவுஸ் அணியலாம் அல்லது வேறு ஒரு கான்ட்ராஸ்ட் பிளவுசும் (contrast) அணியலாம் (பழுப்பு நிற, பல வண்ணம், சிவப்பு, அடர் பச்சை). இதில் நீங்கள் ஒரு தங்க தேவதை போல் தெரிவீர்கள்!
ஒலிவ் கிறீன் (Olive Green)
இது ஒரு மிக அருமையான நிறம். பச்சை,சிவப்பு,மஞ்சள் என்று பழைய நிறங்களின் தோற்றத்தில் மணப்பெண்களை பார்த்து அலுத்து இருக்குறீர்கள் என்றால் இது உங்களுக்கு மிக அவசியமான நிறம்! இது ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் நிறம் ஆகும். இதில், புடவை மற்றும் பிளவுஸ் ஒரே நிறத்தில் இருப்பதுதான் சிறப்பு!
சில்வர் அண்ட் கோல்ட் (Silver And Gold )
பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
வெள்ளை அழகு கொள்ளை அழகு.. ஏன்ற விதத்தில் நடிகை சினேகா நமக்கு திருமண (Marriage) புடவையின் நிறத்தை வழிகாட்டி உளார். உங்களின் புடவை நிறத்தை இதுபோல் மின்மினுக்கும் வெள்ளி நிறத்தில் அணிந்து கொண்டு, அதற்கு ஏற்ற நகைகளை முரணான ஒரு நிறத்தில் (தங்கம், வைரம், கற்கள் கொண்ட நகைகள்) அணிவதுதான் இப்போதைய ட்ரெண்ட். இதற்கு இவர் வெள்ளை மற்றும் பச்சை நிற அணிகலன்கள் அணிந்திருப்பது எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது!
லாவெண்டர் லுக் (Lavender Look)
பெண்களுக்கு மிகவும் பிடித்தமான வண்ணங்கள் இரண்டு.. பிங்க் மற்றும் லாவெண்டர்.. இது போன்ற வித்தியாசமான நிறத்தில் மணப்பெண்னின் பட்டு புடவை இருந்தால் பார்க்க ஒரு கிளாஸி லுக் தரும்.ஒரு இனிமையான தோற்றத்திற்கு இதுவே சிறந்த நிறம்!
டீல் வித் ப்ளூ (Deal With Blue)
அதே டீல் கிறீன் எனும் நிறத்தில் இனொரு இங்க் ப்ளூ நிறத்தை சேர்த்து அணிந்திருக்கிறார் இந்த மணப்பெண். இது போல வேறுபட்ட நிறங்களை நீங்களும் நிச்சயம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பேஸ்டல் பிங்க் (Pastel Pink)
பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
நடிகை ஸ்வாதி ரெட்டி அவர் திருமணத்திற்கு அணிந்திருக்கும் இந்த நிறம் ஒரு நவீன மற்றும் ஸ்டைலான பெண்மணியை குறிக்கிறது.இவரை போல நீங்களும் பேஸ்டல் பிங்க் புடவையில் ஒரு முரணான பிளவுஸ் அல்லது புடவையில் பார்டர் நிறம் ( நீல, ஊதா, கடல் பச்சை) அணிந்தால் மிகவும் ஈர்க்கும் தோற்றமாக அமையும்.
கிரீமீ ஆரஞ்சு (Creamy Orange )
பட ஆதாரம் – இன்ஸ்டாகிராம்
சிவப்பு, மஞ்சள் எனும் அடிப்படை நிறங்களை தள்ளிவைக்கும் விதத்தில் இந்த ஆரஞ்சு நிறம் உள்ளது. இதில் புடவை (saree) எளிமையாக இருந்தாலும், இவர் அணிந்திருக்கும் பிளவுஸ் அதில் இருக்கும் ஜரி வேலைகள் அனைத்தும் இதை அற்புதமாக காட்டி உள்ளது. சிவப்பு வழியிலேயே ஒரு நிறம் என்றால் நீங்கள் இது போல ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.
மற்ற பேஸ்டல் ஷேட்ஸ் (Other Pastel Shades)
மணபெண்ங்கள் சிவப்பு சேலை என்று இல்லாமல் வெளிர் கொண்ட நிறங்களில் (pastel / pale color) கூட மிக அழகாக தோற்றம் அளிக்கலாம் என நிரூபிக்கிறார்கள் இந்த பெண்மணிகள் .ஆம்! இதில் இந்த பெரிய சொக்கர் அட்டிகைகள் நவீன மண பெண்களுக்கான தோற்றம்!
மஸ்டர்டு எல்லோ (Mustard Yellow)
மஞ்சளும் இல்லாமல் தங்க நிறமும் இல்லாமல், இரண்டிற்கும் நடுவில் ஒரு மஸ்டர்டு நிறம் அணிந்திருக்கிறார் இந்த மகிழ்ச்சியான மணப்பெண்! அந்த சிரிப்பின் அர்த்தம் – இந்த தோற்றம் இவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது போல! அடிப்படையில் ,எப்போதும் மஸ்டர்டு நிறத்திற்கு சிவப்பு அணிவது பழக்கம். எங்களின் கருத்து – இதை மாற்றி நீங்கள் ஒரு பளிச் பிங்க் நிற பிளவுசையும் அணியலாம்.
எங்கள் டிப் (Tip)
இவை அனைத்தும் அற்புதமான நிறங்கள். இதில் உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுங்கள்.
நகைகள் (Jewellery) – கல் வைத்த நகைகள் மற்றும் தங்க ஆன்ட்டிக் அல்லது டெம்பிள் ஜெவெலரி (பிங்க்,லாவெண்டர்,ஏதேனும் வெளிர் நிறங்களில்) அழகாய் இருக்கும். பெரிய சொக்கர் நகைகள் அணியும் போது உங்கள் ஒட்டியாணத்தை சிறிதாக அணியவேண்டும்.
நெற்றி -போட்டு சிவப்பிலும், உங்கள் லிப்ஸ்டிக் அதற்கேற்ற ஒரு பளிச் நிறத்தில் (சிவப்பு , பிங்க் ) இருந்தால் அசத்தலாக இருக்கும்!
மங்களகரம் என்பது சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்காமல், நம் மனதில் இருந்தால் எந்த புடவையாக இருந்தாலும் மணப்பெண் அழகு தான்.
எந்த வித புடவையாக இருப்பின்… மணப்பெண் மல்லிகை சூடினாள்…பூவுக்கு பெருமை..! பெண்ணுக்கும் பெருமை.. !
படங்களின் ஆதாரங்கள் – இன்ஸ்டாகிராம்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.