மீண்டும் ஒரு இளமையான தோற்றத்தை பெற (food for anti aging) இந்த உணவை தினமும் சாப்பிட்டால் போதும்

மீண்டும் ஒரு இளமையான தோற்றத்தை பெற (food for anti aging)  இந்த உணவை தினமும் சாப்பிட்டால் போதும்

பிறந்தநாள் என்பது கொண்டாட்டம் அப்போ..  இப்போதெல்லாம் பிறந்தநாள் என்றால் வயசு கூடிட்டே போகுதுனு பீல் பண்றிங்களா??


வயசு கூடட்டும், ஆனால் தோற்றம் வயதாகாமல் பார்த்து கொள்ளலாமே. ஆம் !!


வயது கூட கூட தோற்ற அமைப்பை இ்லக்காமல் (anti aging) இளமையான தோற்றம் பெற உணவு (food) பழக்க முறையில் கவனம் செலுத்தலாம்.பொதுவாக  வயதான தோற்றத்திற்க்கு காரணம் தோல் சுருக்கம், உடல் இடை, முடி உதிர்வு, கொழுப்பு தேக்கம் போன்றது.



தோல் சுருக்கம்:



பொதுவாக தோல் சுருக்கத்திற்கு உடலில் உள்ள செல் டேமேஜ் ஆன பின்னர் செல்லை விட்டு வெளியேறாமல், உடலில் தேங்கி நிற்பது சருமத்தின் வழவழப்பு நீங்கி தொய்வு ஏற்பட காரணமாக அமைகிறது.   அப்படி என்றால் செல்களை ஆரோக்கியமாக பார்த்து கொள்ள வேண்டும்.


Also Read About உப்பு பக்க விளைவுகள்


நட்ஸ் (nuts) :


pexels-photo-1549046
பாதாம் , பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை எடுத்து கொள்ள வேண்டும். இதில் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ளதோடு,  ப்ரோடீன் அதிகமா உள்ளதால், உடல் இடை கூடாமல், சரும வலிமைக்கு பெரிதும் உதவுகிறது.



பாதம் பருப்பை சும்மா சாப்பிடறதோட, நன்கு ஊற வைத்து சாப்பிட வேண்டும். இரவில் நன்கு அலசி,  8 மணி நேரம் ஊற வைத்து, அதனை மீண்டும் அலசி தோளோடு சாப்பிட வேண்டும்.இதில் உள்ள சத்துக்கள் முழுமையாக பெற இந்த முறை பின் படுத்தலாம்.



கரோடெனோய்ட்ஸ் என்ற சத்து பொருள் வண்ண காய் மற்றும் பழங்களில் இருக்கிறது.இவை செல்லின் இளமை தோற்றத்திற்க்கு உதிவி செய்யும். கேரட்,  ரெட் பெல் பெப்பர், பீட்ரூட் போன்ற வண்ண காய்களை சேர்த்து வந்தால், செல்கள் அரோக்கிய அடைவதோடு, டேமேஜ் ஆன செல்களும் வெளியேற உதவும்.


Also Read About ஜோவரின் நன்மைகள்



பப்பாளி :



இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட் தோள்களுக்கு வழவழப்பு தன்மை தரும். இதில் உள்ள வைட்டமின் A, C, K, & E,  போன்ற சத்து பொருட்கள் தோல் சுருக்கத்தை தவிர்க்க உதவும்.இதில் உள்ள பப்பைன் என்ற எண்ஸ்யம் தோளில் உள்ள சிறிய சிறிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.


கோஸ்:



முட்டை கோஸ் மற்றும் அதான் பேமிலி சேர்ந்த ப்ராக்கோலி, லெட்டூஸ் போன்ற காய்களில் உள்ள பைபர், லுடீன், போலேட்  pondraa ஆன்டி ஆக்ஸிடென்ட் பொருட்கள் சர்மத்திற்க்கு போசாக்கு தருகிறது. அதோடு, தோல்(skin) புத்துணர்ச்சி பெறுகிறது.இதனை வாரத்தில் 3 முறை சேர்த்து கொண்டால் உடல் இடை பாதிப்பும் வராமல், மேனி பளபளப்பு அடையும்.



அரைவேக்காட்டில் சாப்பிட்டு வந்தால் சத்துகள் முழுமையாக பெறலாம். அதிகமாக வேக வைக்கும் போதும் அல்லது பொரிக்கும் போதும், இதன் சத்துக்கள் இழக்க நேரிடும்.


ப்ளூ  பெர்ரி (Blue berry) :


 pexels-photo-670685


அன்தோசயனின் என்னும் இன்ஸ்யம் மற்றும் வைட்டமின் A மற்றும் C அதிமாக உள்ளது.அதுவே இதன் ஊதா நிறத்தில் இருக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இவையெல்லாம் சேர்த்து சருமத்தில் வெயில்,  தூசி, மாசு, பருக்களால் ஏற்பட்ட பாதிப்பினை தடுக்க உதவியாக அமைகிறது. மேலும் இது போன்ற பாதிப்புகள் வராமலும் தடுக்க உதவியாக அமைகிறது.



இதனை காலை உணவாக மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தியாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.



கீரை :



பச்சை கீரைகள், பசலிக் கீரைகள், போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரியும்.அது உங்களை இளமையோடும் துடிப்போடும் வைக்க முடியும் னு தெரியுமா?



அதிகப்படியான இரும்பு சத்து, வைட்டமின் A,  C, E, மற்றும் K அதிகமாக உள்ளது. இது மேனியை மென்மையாக வைப்பதோடு, ஆரோக்கியம் காக்கும்.


அது மட்டும் அல்லாமல் கூந்தல் வலிமைக்கும், பளபளப்புக்கும்,  முடி உதிர்வுக்கும் நல்ல தீர்வை இது தரும்.


மாதுளை :


pomegranate-3259170  480
பல நூண்றாண்டு ஆக, மருத்துவ குணம் நிறைத்து உள்ள இப்பழம், உங்களை இளமையாக இருக்க உதவும்.தோல் ஈரப்பதத்தோடு இருக்க உதவும்.



வயதான தோற்றம் தரும், தோல் சுருக்கத்தை கட்டு படுத்தி, முகம் தெளிர்ச்சி அடைய உதவும்.



தர்பூசணி :



நீர் சத்து உள்ள இப்பழம்,  வைட்டமின்கள் நிறைந்து உள்ளது..அதனால் வறண்ட சரும கோளாறு போன்ற பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.


அவகேடோ (avacado) :


குளிர் பிரதேசத்தில் கிடைக்கும் இப்பழம்,  ஐஸ்கிரீம் பழம் என்று கூட சொல்லப்படும்.இதில் அதிகமான பாட்டி ஆசிட் உள்ளதால்  சருமத்தின் மென்மைத்தன்மை தக்க வைக்க மிகவும் உதவுகிறது.இதில் அதிகமான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.வைட்டமின் K, C,  E, and B மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.இவை இறந்து செல்லை உடலில் இருந்து வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.ஆகையால் செல்லில் உள்ள கழிவை வெளியேற்றி, புத்துயிர் பெற்று, சருமம் மின்னும். தோலில் ஏற்படும் கேன்சர் போன்ற நோய்களும் வாராமல் தடுக்க உதவும்.



இ்தனை சாலட் மற்றும் ஸ்மூத்தி செய்து உண்ணலாம்.



மீன் :


 salmon-dish-food-meal-46239


கடல் மீன்கள் கொழுப்பு சத்துகள் இல்லாமல், ப்ரோடீன், வைட்டமின், அமினோ அமிலம் போன்றவை அதிகம் உள்ளதால் எண்ணையில் பொறிக்காமல் இருந்தால் சத்து முழுமையாக பெறலாம்


ஆகையால்,  வயதான தோற்றம் இல்லாமல், இளமையோடும் இருக்கலாம்.இது போன்ற உணவை உண்டால், வயது என்பது வெறும் எண்ணிக்கை தான்..


தோற்றம் என்றும் பதினாறு தான்!!!


 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !



மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.