காபி தனக்கென ஒரு தனித்துவ நறுமனத்தோடும் சுவையோடும் இருக்கும் போது தேநீரும் தனக்கென ஒரு தனித்துவத்தோடுதான் உள்ளது. ஒரு சூடான தேநீர் உங்கள் மனதையும் உடலையும் அமைதியாக்குகிறது. எனக்கு நல்ல நறுமணத்தோடு இருக்கும் தேநீர் மிகவும் பிடிக்கும். அதன் சுவை என்னை ரசித்து பருக தூண்டும். எங்களிடம் பல வகை தேநீர் வகைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை மற்றும் நறுமணத்தோடு உள்ளது. பல வகையான தேநீரில் நீங்கள் பச்சை தேநீர், நீலத் தேநீர், கருப்பு தேநீர், வெள்ளைத் தேநீர், மூலிகைத் தேநீர், ஊலாங் தேநீர், கெமோமில் தேநீர், ரோஜா தேநீர், எர்ல் கிரே தேநீர், மாட்ச மற்றும் புளித்த தேநீர் போன்ற ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். எனினும், பல வகைகளில், கெமோமில் தேநீர் உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். ஏன் என்று நீங்கள் கட்டாயம் கேட்க வேண்டும். உங்கள் காலை உணவோடு நீங்கள் கெமோமில் தேநீர் பருகுவதற்கு பல காரன்கங்கள் உள்ளது. அதன் பல உடல் நல பழங்களோடு, இந்த கெமோமில் மலர்கள் அழகானது. மற்ற தேநீர் வகைகளை விட, இது இலைகளை பற்றி மட்டும் இல்லை அல்லது மலர்களை பற்றி அல்ல. இது வெள்ளை கெமோமில் உங்கள் கோப்பையில் இருப்பது பற்றி. உங்களை மேலும் புத்துனர்வாக்க இது சிறந்தது.
பயன்படும் தேநீர் பைகள் பயன்படுத்துகிறது
கெமோமில் தேநீர் என்றால் என்ன? (About Chamomile Tea)
கெமோமிலலை(chamomile) பாபூன் கா ஃபால் என்று இந்தியில் அழைப்பார்கள். இதற்க்கு அதிர நோய் குணப்படுத்தும் தன்மைகள் உள்ளது. இந்த தேநீரை உலர்ந்த மலர்களை கொண்டு செய்வார்கள். இது உங்கள் மனதை அமைதிப் படுத்துவதோடு, நல்ல ஆரோக்கியத்தையும் தரும். அமைதியாக காட்சியளிக்கும் கெமோமில் மலர்கள் கோடை காலத்தின் தொடக்கத்தில் அதிகமாக மலரும். இது ஆசிய, ஆஸ்திரேலியா, ஐரோப் மற்றும் வாடா அமெரிக்காவில் அதிகம் காணப்படும். இந்த கெமோமில் தேநீரில் உள்ள பூக்கள் நறுமண ரசாயன கலவை கொண்டது. இது ஒரு நல்ல வலி நிவாரணி மற்றும் எதிர்ப்பு சக்தி மற்றும் வலிப்பு குறைவு தன்மை கொண்டது. அது தசை சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்க உதவும். ஒரு கோப்பை கெமோமில் தேநீர் ஒரு நல்ல சளி நிவாரணியும் கூட.
நீங்கள் அதிகம் சோர்ந்து இருக்கும் போது அல்லது அதிக வேலை பார்த்திருந்தால், இந்த கெமோமில் தேநீர் ஒரு கோப்பை அருந்துங்கள். அது உங்களை தனுடைய நறுமணத்தோடு உங்கள் மனதை உற்சாகப் படுத்துவதோடு உங்கள் உடலுக்கும் சக்தி தரும். உடல் நலம் தருவதோடு, இந்த தேநீர் உங்கள் தலை முடிக்கும் சருமத்திற்கும் நல்ல பலன்களைத் தரும். இதுவே இந்த தேநீர் உலகம் முழுவதும் பிரபலமாக காரணம். அதிக பலன்கள் நிறைந்த இந்த தேநீர் நீங்கள் வழக்கமாக அருந்த ஏற்றது.
இங்கே நீங்கள் மேலும் இந்த கெமோமில் தேநீரை பற்றி அறிந்து கொள்ள பல அறிய தகவல்கள் உங்களுக்காக!
கெமோமில் தேநீரின் பலன்கள் (Benefits of Chamomile Tea In Tamil)
கெமோமில்(chamomile) தேநீர் குணப்படுத்தும் தன்மைகள் கொண்டது. மற்ற தேநீர் வகைகளை போல, இதில் காஃபின் இல்லை. அதனால் இதனை நீங்கள் நம்பி அருந்தலாம். இது உங்கள் நரம்புகளையும் தசைகளையும் அமைதிப் படுத்த உதவும். இது ஒரு இயற்க்கை மயக்க மருந்து. மேலும் இது இயற்கையாகவே உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். தைராய்டு மற்றும் மார்பக புற்றுநோயை குணப் படுத்தக் கூடிய தன்மை இதற்க்கு உள்ளது.
நல்ல தூக்கம் கிடைக்க கெமோமில் தேநீர் (Improve Your Sleep) :
நீங்கள் போதிய தூக்கம் இன்றி அவதிப் படுகுரீர்கல்லா? இந்த கெமோமில்(chamomile) தேநீர் ஒரு நல்ல மருந்தாக உங்களுக்கு பலன் தரும். நீங்கள் இந்த தேநீரை படுக்கப் போகும் முன் அருந்தினால் அது உங்கள் நரம்புகளையும் நரம்பு மண்டலத்தையும் அமைதிப் படுத்தி உங்களை விரைவாக உறங்க வைத்து விடும். உங்களுக்கு பெரிதும் தூக்கம் குறைவால் பிரச்சனைகள் இருந்தால் அது உங்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
பதட்டம் குறைய கெமோமில் தேநீர் (Anxiety)
கெமோமில் தேநீர் ஆதி காலத்தில் இருந்தே பதட்டத்தை குறைக்க பெரிதும் பயன் படுத்தப்பட்டது. அது உங்கள் தசைகள், நரம்புகள் மற்றும் நரம்பு மண்டலம் போன்றவற்றை அமைதிப்படுத்தி மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும். நீங்கள் பதற்றத்தோடு இருந்தால் ஒரு கோப்பை கெமோமில் தேநீரை அருந்தலாம். அது உங்களுக்கு விரைவாக நல்ல பலனைத் தரும்.
ஆம், இந்த கெமோமில் தேநீர், பல அற்புதங்களை உங்களுக்கு செய்யும். உங்கள் மனதை அமைதிப் படுத்துவதோடு, உங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதோடு, இந்த மூலிகை உங்களுக்கு உடல் எடையை குறைக்க நேர்மறைப் பலன்களையும் தரும். எனினும், நீங்கள் கெமோமில் தேநீரை உடல் எடை குறைக்க அருந்தும் போது சூடான நீரில் அருந்துவதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன் உங்கள் வயிற்றில் உள்ள செரிமான சாரை செயல் படுத்த இந்த தேநீரை அருந்த வேண்டும். தூங்கப் போகும் முன் இதை அருந்துவது உங்கள் மன அழுத்தத்தை குறைப்பதோடு உடல் எடை அதிகப் படுத்தும் ஹர்மோன்களையும் கட்டுப்படுத்தும். எனினும் இதன் பலனை நீங்கள் விரைவில் உணர சில உணவு முறையையும் நீங்கள் பின் பற்ற வேண்டும்.
எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்த கெமோமில் தேநீர் (Help Our Immune System Fight Infection & Viruses:
நுனுயிர்களை எதிர்த்து செயல் பட மற்றும் உங்கள் உடலில் எதிர் சக்த்தியை அதிகப் படுத்த இது ஒரு நல்ல வழி. உங்களுக்கு சளி, சுரம், வறண்ட தொண்டை, மூக்கடைப்பு, போன்ற உபாதைகள் இருந்தால் இந்த தேநீர் அதில் இருந்து விரைவாக குணமடைய உதவும்.கெமோமில் தேநீர் – தலை முடி வளர்ச்சி மற்றும் சருமம் மேம்பட இந்தியர்கள், ரோமானியர்கள், மற்றும் கிரேக்கர்கள் இந்த கெமோமில் தேநீரை அதிகம் தங்களுடை சரும அழகிர்க்கிர்கும் ஆரோக்கியத்திற்கும் அதிகம் பயன் படுத்தினார்கள். குறிப்பாக சொரியாசிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற நோய்களை குணப் படுத்த இந்த தேநீரை அதிகம் பயன் படுத்தினார்கள். அது காயங்களை விரைவாக குணப் படுத்தும். அதற்க்கு முதுமையை கட்டுப் படுத்தி இளமையான தோற்றத்தை தரக் கூடிய தன்மையும் உண்டு. வேனிற்கட்டி, கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையம் மற்றும் முகப் பரு போன்றவற்றை குணப் படுத்தும் குணங்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் தலையில் உள்ள பொடுகு பிரச்சனைகளையும் விரைவாக குணப் படுத்தும்.
தசை வலியை போக்க கெமோமில் தேநீர் (Natural Period Pain Relief)
உங்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி, அல்லது மற்ற பிரச்சனைகளை இந்த கெமோமில் தேநீர் எளிதாக குணமடைய உதவும். அது உங்கள் கருப்பையை தளர செய்யும். மேலும் வலியை உண்டாக்கக் கூடிய புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உற்பத்தியை குறைக்க உதவும்.
செரிமானத்திற்கு கெமோமில் தேநீர் (Chamomile Tea for Digestion)
ஒரு இதமான சூடான கெமோமில் தேநீர் உங்கள் வயிற்று வலி, வயிற்று புண், மற்றும் செரிமான அமைப்பை சரிப் படுத்த உதவும். இந்த தேநீர் உங்கள் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், பசியற்ற தன்மை, குமட்டல், வாந்தி மற்றும் இயக்கம் நோய் போன்றவற்றை சரி செய்ய உதவும்.
கெமோமில் பக்க விளைவுகள் (Side Effects of Chamomile Tea)
பல நன்மைகள் கொண்ட இந்த தேநீர் சில எதிர்மறை பலன்களையும் தரக் கூடும். இங்கே சில குறிப்புகள், நீங்கள் இந்த கெமோமில் தேநீரை தவிர்க்க வேண்டிய தருணங்கள்:
1. உங்களுக்கு டேசி ரக செடிகளால், ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றால் இந்த கெமோமில் தேநீரை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் ஒவ்வாமையை அதிகப் படுத்தக் கூடும். மேலும் சரும பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள் மற்றும் தொண்டையில் வீக்கம் அல்லது வறட்சி போன்றவற்றை அதிகப் படுத்தக் கூடும்
2. நீங்கள் கருவுற்றிருந்தாள் அல்லது குழந்தைக்கு பால் கொடுப்பவராக இருந்தால் இந்த தேநீரை மருத்துவரின் ஆலோசனைப் படியே நீங்கள் அருந்த வேண்டும். ஏனென்றால் மற்ற மருந்துகளோடு இந்த மூலிகை கலக்கும் போத சில உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது
3. நீங்கள் வார்பரின் அல்லது ஹெபரின் போன்ற எதிர்ப்போக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்குரீர்கள் என்றால் இந்த கெமோமில் தேநீரை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இரத்த சன்னமான கலவைகள் அதில் உள்ளது. அது உள்ளுறுப்புகளில் ரத்தப் போக்கை ஏற்படுத்தக் கூடும் நீங்கள் ஏதேனும் மருந்து உட்கொண்டிருப்பவராக இருந்தால் இந்த தேநீரை அருந்தும் முன் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது முக்கியம்.
4. அடர்த்தியாக இருக்கும் இந்த தேநீரை அதிக அளவில் அருந்துவதை தவிர்பப்து நாளது. அது வாந்தி போன்ற உபாதைகளை உருவாக்கக் கூடும். குறைவாக அருந்தினால் நல்ல பலன்களைத் தரும்.
எப்படி கெமோமில் தேநீரை தேர்ந்தெடுத்து பாதுகாப்பது? (Buying & Storing Tips)
நம்பகமான கடையில் இருந்து இந்த கெமோமில் தேயிலையை வாங்குவது மிக முக்கியம். அனைத்து மலர்களின் தலைகளும் நன்றாக உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். அவை தோட்டத்தில் இருந்து நேரடியாக கடைகளுக்கும் வருபவை. அதிகம் செயல் முறைக்கு உட்படுத்தப் பட்ட தேயிலைகள் அதிகப் பலன்களைத் தராது. அதனால் நீங்கள் இந்த கெமோமில் தேயிலையை ஒரு காற்றுப் புகாத ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளவும். மேலும், உலர்ந்த இடத்திலும் சூரிய ஒளிப் படாத இடத்திலும் வைத்துக் கொள்ளுங்கள். இது மலர் என்பதால் பூச்சிகளை ஈர்க்கும் தன்மை இதற்க்கு உண்டு. அதனால் சரியாக இதனை பாதுகாக்க வேண்டும்.
கெமோமில் தேநீர் செய்முறை (Chamomile Tea Recipe)
உங்களிடம் தற்போது நல்ல தரமான கெமோமில் தேயிலை உள்ளது என்று நம்புகிறோம். இந்த தேநீரை செய்வது மிகலும் எளிதான வேலை. எனினும் உங்களுக்கு அதை பற்றி எந்த யோசனையும் இல்லை என்றால், இதோ உங்களுக்காக, இந்த தேநீரை எப்படி செய்ய வேண்டும் என்ற படிப்படியான விளக்கம்
1. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நீரை சூடு படுத்திக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இயற்கையான இனிப்பூட்டியை சேர்த்துக் கொள்ள விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு அல்லது தேன் போன்ற ஏதாவது ஒன்றை பயன் படுத்தலாம். அப்படி இல்லை என்றால் நீங்கள் கொஞ்சம் ஆப்பிலை கூட கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம்
2. இப்பொது கெமோமில் மலர்களை அந்த கொதிக்கும் நேரில் சேர்த்துக் கொள்ளுக்னால்
3. பாத்திரத்தை மூடி வைத்து விட்டு மலர்கள் நல்ல நறுமணம் வீசுவதை பாருங்கள். மேலும் நிறத்தையும் பாருங்கள். அடுப்பை 2 – முதல் 1௦ நிமிடங்கள் மிதமாக வைத்து விடுங்கள்
4. உங்களுக்குத் தேவையான நிறம் மற்றும் திடம் வந்த பின், தேநீரை வடிகட்டி அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்துக் கொள்ளலாம்.
சரும ஆரோக்கியத்திற்கு எப்படி கெமோமில் தேயிலையை பயன் படுத்துவது? (Beauty Benefits Of Chamomile Tea)
சருமம் புத்துணர்வு பெற (Rejuvenate The Skin)
கெமோமில் தேயிலை இயற்கையாகவே உங்கள் ஈரப்பதம் ஊட்டக் கூடிய, சுத்திகரிக்கக் கூடிய மற்றும் குணப்படுத்தக் கூடிய தன்மைகள் கொண்டது. ரோமானியர்கள், கிரேக்கர்கள் மற்றும் எகிப்தியர்கள் இதை காயங்களை குணப் படுத்தவும் வடுவை போக்கவும் அதிகம் பயன் படுத்தினார்கள். நீங்கள் இந்த கெமோமில் தேநீரை அருந்தினாலோ அல்லது தொடர்ந்து பயன் படுத்தி வந்தாலோ உங்கள் சருமம் புத்துணர்வு பெறுவதை நீங்கள் உணரலாம். முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மற்றும் வரிகளை போக்கும் குணம் இதற்க்கு உண்டு. ஆக்சிஜன் அதிகப் படுத்தக் கூடிய தன்மை இதற்க்கு உண்டு. அதனால் இது உங்கள் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். சூரிய கதிர்களால் ஏற்படும் பிரச்சனைகளை குணப் படுத்த இது உதவும். இயற்கையாகவே உங்கள் முகத்தில் இருக்கும் அசுத்தங்களை துடைக்க உடஹ்வும். ஏமலும் கண்களுக்குக் கீழ் ஊதி இருக்கும் தோற்றம் மற்றும் கருவளையங்களை போக்க உதவும்.
முகப் பருக்களை போக்க கெமோமில் தேநீர் பை (Helps To Get Rid Of Facial Problems)
இந்த மூலிகை முகத்தில் இருக்கும் பருக்களை போக்க உதவும். நீங்கள் இந்த தேநீரை தொடர்ந்து அருந்தினால் அது உங்கள் முகப் பருக்களை போக்குவதோடு, உங்கள் ரத்தத்தையும் சுத்தப் படுத்தும். நீங்கள் தினமும் இந்த தேநீரை அருந்தலாம். அதிக ஆக்சிஜன் நிறைந்துள்ளது. மேலும் சூரிய கதிர்களால் ஏற்படும் உபாதைகளையும் குணப் படுத்த உதவும்.
தலை முடி வளர கெமோமில் தேநீர் (Promotes Hair Growth)
உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லை, தலை முடி நன்கு வளரவும் இந்த தேநீர் மிகவும் உதவியாக உள்ளது. தலையில் பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை இது எளிதாக குணப் படுத்தும். மேலும் இந்த கெமோமில் உங்கள் முடியின் நிறத்தையும் மிகப் படுத்தும். தலை முடியை பிரகாசிக்க செய்யும். இதனை நீங்கள் மருதாணியுடன் கலந்து தடவலாம். இதனுடன் மற்ற மூலிகைகளையும் கலந்து பயன் படுத்தலாம். தரமான ஷாம்பு பயன் படுத்தி முடியை மிதமாக அலசவும். காப்பி நிறத்தில் முடி வேண்டும் என்றால் மருதாணியுடன் இதனை கலந்து பயன் படுத்தலாம்.
உங்கள் முக அழகிற்கு வீட்டில் எப்படி கெமோமில் முக மூடி (மாஸ்க்) தயாரிப்பது (Homemade Face Mask)
நீங்கள் அதிகம் தேநீர் அருந்தாதவராக இருந்தால் இந்த அழகு குறித்த பலன்களை பெற இதனை கட்டாயமாக பயன் படுத்த எண்ணுவீர்கள். இந்த வீட்டில் தயாரிக்கப் பட்ட மூலிகை முக மூடி உங்களுக்கு பல அற்புதமான நன்மைகளைத் தரும். இங்கே உங்களுக்காக உங்கள் சருமத்தை மென்மையாக்க சில எளிதான செய்முறை குறிப்புகள்:
1. கெமோமில் மற்றும் பாதாம் கோட்டை முக மூடி (Almond + Chamomile Mask)
ஒரு தேக்காண்டி கெமோமில் எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும். மூன்று சொட்டு பாதாம் என்னை எடுத்துக் கொள்ளவும். மற்றும் ஒன்னரை தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி நன்கு சுழற்ச்சி முறையில் மசாஜ் செய்யவும். பின் 1௦ முதல் 2௦ நிமிடம் அப்படியே விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். சுத்தமான துணியால் இதமாக முகத்தை துடைக்கவும்.
2. கெமோமில் ஓட்ஸ் முக மூடி (Chamomile + Oatmeal Face Mask)
அரை கோப்பை பதப்படுத்தப் பட்ட ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி பேகிங் சோடா எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும். ஒன்னரை தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். கால் கோப்பை நன்கு கொதிக்க வைத்த கெமோமில் தேநீரை எடுத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை முகத்தில் 5 முதல் 1௦ நிமிடங்கள் வரை விட்டு விட்டு, பின் முகத்தை கழுவி விடவும்.
3. கெமோமில் மற்றும் வாழைப்பழ முக மூடி கலவை (Banana + Chamomile Face Mask)
அரை வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு தேக்கரண்டி நன்கு கொதிக்க வைத்த கெமோமில் தேநீரை சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 1௦ நிமிடங்கள் விட்டு விட்டு, பின் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்.
4.கெமோமில் மற்றும் ஆலிவ் என்னை கலவை (Chamomile + Olive Mask)
கால் கோப்பை ஆலிவ் என்னை எடுத்துக் கொண்டு அரை கோப்பை வெள்ளை சர்க்கரை எடுத்துக் கொண்டு ஒரு பை கெமோமில் தேயிலையை அதில் போட்டுக் கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி சுழற்ச்சி முறையில் மசாஜ் செய்யவும். 1௦ முதல் 2௦ நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் முகத்தை நன்கு கழுவி விடவும்.
5. கெமோமில் தேங்காய் கலவை (Coconut and Chamomile Face Mask)
ஒரு பை கெமோமில் தேயிலையை மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி செக்கில் ஆட்டப் பட்ட தேங்காய் எண்ணையை எடுத்துக் கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் சுழற்ச்சி முறையில் நன்கு தேக்க வேண்டும். பின் அதனை 15 நிமிடங்கள் காய விட்டுவிடவும். பின் மிதமாக சூடான நீரால் முகத்தை கழுவி விட வேண்டும்.
எப்படி பயன் படுத்திய கெமோமில் தேநீர் பையை மீண்டும் உபயோகிப்பது? (How To Reuse Chamomile Tea Bag)
ஒரு முறை நீங்கள் தேநீர் போடா உபயோகித்த கெமோமில் தேநீர் பையை கிழே போட்டுவிடாமல், அதனை குளிர் சாதனா பெட்டியில் வைத்து விடவும். இந்த குளிர்ந்த தேயிலையை ஒரு தெளிப்பு பாட்டிலில் போட்டு ஒரு தேக்கரண்டி ஊற்றி உங்கள் முகத்திற்கு டோனராக பயன் படுத்தலாம். மீதமுள்ள தேயிலையை நீங்கள் முக மூடி கலவை செய்ய பயன் படுத்தலாம். மேலும், இந்த தேயிலையை ஒரு பனி தட்டில் வைத்து கண சதுரம் செய்யலாம். அதனை உங்கள் முகத்திற்கு அல்லது சருமத்திற்கு கோடைகாலத்தில் தடவு பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த கண சதுரத்தை உங்கள் சருமத்தை நீர்தன்மையோடு வைத்துக் கொள்ள பயன் படுத்தலாம்.
மேலும் இந்த கெமோமில் தேயிலை பையை உப்பிய கண்களை குணப் படுத்த பயன் படுத்தலாம். உங்கள் கண்களை மூடிக் கொண்டு இந்த பயன் படுத்திய தேயிலை பையை கண்கள் மீது 15 நிமிடங்களுக்கு வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த தேயிலை பையை நீங்கள் உங்கள் காலனிகளுக்குள் வைத்தால் துர்நாற்றம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
அற்புதம்! இப்பொழுது நீங்கள் உங்களுக்கு பிடித்த கெமோமில் தேநீரை தேர்ந்தெடுத்து பயன் படுத்த தொடங்குங்கள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo