சினிக்கர்ஸ் - சினி ஸ்னாக்ஸ் I இது சினிமா ரசிகர்களுக்கான புதிய பகுதி!

சினிக்கர்ஸ் - சினி ஸ்னாக்ஸ் I இது சினிமா ரசிகர்களுக்கான புதிய பகுதி!

கனவுத் தொழிற்சாலையான சினிமா சம்பந்தப்பட்ட சில தகவல்கள் உங்களுக்காக! cini snacks


* பேட்ட படத்தின் உலகளவு வசூல் 240கோடியை தாண்டிவிட்டதாகவும் உலக அளவில் பேட்ட படம் 11வது இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


* இந்திய சினிமாவின் நம்பிக்கை இயக்குனரான ராஜமௌலியின் படத்தில் நடிக்க நிறைய நடிகர்கள் ஏங்குகின்ற நிலையில் இவரது அடுத்த படத்தில் நடிக்க தமிழ் நடிகரும் இயக்குனருமான சமுத்ரகனிக்கு இந்த வாய்ப்பு சென்றுள்ளதாம்.இயக்குனர் ராஜமௌலியின் இந்தப் படம் ஆர் ஆர் ஆர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. படபிடிப்பில் இருக்கும் போதே இப்படத்தின் சாட்டிலைட் உரிமை எந்திரன் 2.0 வை விட அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது * தமிழ்ப் பெண்களின் சாக்லேட் பாய் மாதவன் சைலென்ஸ் என்னும் ஆங்கிலப்படத்தில் நடிக்கிறாராம். இவருடன் ஜோடி சேர்வது ஆண்களின் கனவுத் தாரகை அனுஷ்காவாம்.


* பாலிவுட் படமான கலன்க் பற்றித்தான் இப்போது இணையதளம் பேசிக் கொண்டிருக்கிறது. சஞ்சய்தத், மாதுரி தீட்சித் , சோனாக்ஷி, வருண் தவான் மற்றும் அலியா பட் நடிக்கும் இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வருகிறது. இதில் அலியாவும் வருணும் இணையும் நான்காவது படமாக இது இருப்பதாக வருண் போட்ட ட்வீட் தான் இப்போது வைரலாகி இருக்கிறது.
* "ஏக் லடிக்கி கோ தேகாதோ யேசா லகா" ... இந்தப் பாடலை நம்மால் மறக்க முடியுமா? 1942 எ லவ் ஸ்டோரி படத்தில் நாயகன் அனில்கபூர் மனிஷா கொய்ராலாவோடு இணைந்து பாடிய பாடல்.80'ஸ் 90'ஸ் கிட்ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸ் 2010கே கிட்ஸ் என அனைவரையும் மதிமயக்கிய இந்தப் பாடலின் முதல்வரியைத் தலைப்பாகக் கொண்டு ஒரு படம் எடுக்கப்படுகிறது. இதில் சோனம் கபூர்தான் நாயகி. அதுமட்டுமல்ல இவரின் தந்தையாக ஒரிஜினல் தந்தையான அனில் கபூரே இந்தப் படத்தில் நடிக்கிறார் என்றால் சம்திங் ஸ்பெஷல்தான் இல்லையா !* ஒரே சமயத்தில் பாலிவுட் பட வாய்ப்பும் வருகிறது அதே சமயம் விஜயின் பட வாய்ப்பும் வருகிறது எனில் நீங்கள் எதனைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று சர்ச்சைகளில் பிரபலமடைந்த நடிகையான பிரியா வாரியரிடம் கேட்கப்பட்டபோது அவர் நான் ஏற்கனவே இந்திப்படத்தில் நடித்து விட்டேன் ஆகவே நிச்சயமாக நான் விஜய் படத்தில் நடிக்கவே விரும்புகிறேன் என்று பதில் அளித்துள்ளார்.


* அர்ஜுன் கபூர் தன்னை விட 13வயது மூத்த நடிகையான மலாய்கா அரோரா வை மறுமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் இவர்களுக்கு இடையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் மலாய்கா வின் முன்னாள் கணவருக்கு போட்டுக் கொடுத்து இருந்திருக்கிறார் இவர்களின் கார் ட்ரைவர். தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.* ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் என்கிற பெயரில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கைக்கு கதை படமாகி வருகிறது. இதனை ஆனந் மஹாதேவனுடன் இணைந்து இயக்கியபடி நடித்து வந்தவர் நம் மாதவன். இப்போது ஆனந் விலகி விட்டதால் முழுமையாகத் தானே இயக்கி நடித்தும் வருகிறார் மாதவன். இந்தப் படத்தில் அவரது கெட்டப் அப்படியே நம்பி நாராயணனோடு ஒத்துப் போகிறது.* வெற்றிமாறன் தனுஷ் வெற்றிக் கூட்டணி அடுத்து சேர்ந்துள்ள படம்தான் அசுரன். இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தனுஷுக்கு சரிசமமாக இதில் இவருக்கும் முக்கியத்துவம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.* அர்ஜுன் ரெட்டியை தமிழில் பாலா ரிமேக் செய்வதும் அதில் விக்ரம் மகன் துருவ் நாயகனாவதும் பழைய தகவல் என்றாலும் தற்போது அதன் பாடல் ஒன்று இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் ரதனின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் வானோடும் மண்ணோடும் எனும் இந்தப் பாடல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடல் நான் கடவுளில் வரும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் போல அனைவர் மனதிலும் பதியும் என்று கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியான தேடல்களை நமக்குள் விதைப்பதில் பாலா மெனக்கெடுவது தான் கண்ட தரிசனத்தை மற்றவருக்கும் பகிரும் மாண்பு என்றுதான் கூற வேண்டும்.

Subscribe to POPxoTV

--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo