நாவூரும் தோசையின் நன்மைகள் மற்றும் வகைகள்

நாவூரும் தோசையின் நன்மைகள் மற்றும் வகைகள்

தோசை(Dosa) என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப்பதார்த்தம் ஆகும். தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒரு சில விடுதிகளில் தட்டையான வடிவில் நெய்த்தோசையைச் சுட்டுவிட்டுப் பின்னர் கூம்பி வடிவிலும் பரிமாறுவர். மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். வெந்தயம் - தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால் தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும். இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்லது குளிர்ச்சியை தரும்


தோசை(Dosa) பெயர் காரணம்
தோய்தல் என்றால் மாப்புளித்தல், தோய் என்பது தோயை என்றாகி பின்னர் தோசை என்றாகியது. தோசைக்கல்லில் வட்டமாகத் தேய்த்து செய்யப்படும் உணவுப்பண்டமாதலால் தேய்+செய் என்ற சொற்களே மாறி தோசை என்றாகியது என்போரும் உள்ளனர்.


தோசை(Dosa) வகைகள்


·         மசாலா தோசை - பொதுவாக உருளைக் கிழங்குப் பிரட்டலுடன் பரிமாறப்படும் தோசை.


·         வெங்காய தோசை


·         நெய் தோசை/ரோஸ்ட்


·         வெண்ணைய் தோசை


·         முட்டை தோசை


·         ரவா தோசை


·         குண்ணுத்தோசை


·         செய்முறுக்கல்


·         அடை


·         பொடி தோசை


·         பேப்பர் ரோஸ்ட்


·         கல் தோசை


·         சாதாரண தோசை


·         தக்காளி ஊத்தப்பம்


·         வெங்காய ஊத்தப்பம்


·         செட்தோசை - வடைகறி மிகவும் பிரபலமான ஒரு உணவு .பெரும்பாலும் இந்த செட்தோசை மாவில் மஞ்சள் கலந்து தோசை தயார் செய்யப்படும்.


·         வெந்தய தோசை - இந்த தோசை சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெரிது விரும்பி உண்ணும் ஒரு தோசை வகை. வெந்தய தோசை பார்க்க மஞ்சள் நிறமாக கட்சி அளிக்கும்.


·         மரவள்ளி கிழங்கு தோசை - அரிசியுடன் மரவள்ளிக் கிழங்கை சமபங்காக இட்டு அரைத்துக் கொள்வார்கள்.


தோசை செய்யும் முறை
புழுங்கல் அரிசி - 400 மில்லிகிராம்
உளுத்தம் பருப்பு - 100 மில்லிகிராம்
உப்பு - தேவையான அளவு


ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.


அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.


அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.


விருப்பம் என்றால் நிறுமூட்டுவதற்காக சிறிதளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம்.

பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.


தோசைக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.


புளித்த மாவினை தோசைக் கல்லில் ஊற்றி தாள் போல் தேய்த்து சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவும். சுவையான தேசை ரெடி.


தோசை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


 • பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்பிடப்படும் தோசையில் ஒருசில நன்மைகள் உள்ளன. தினந்தோறும் அரிசி மாவு தோசை மட்டுமின்றி கம்பு, கேழ்வரகு இவ்வாறு வகை வகையான தோசையை சாப்பிட்டால் உடலுக்கு மிக நல்லது.

 • நமது உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் சத்து தோசையில் அதிக அளவு உள்ளது. எனவே, தோசையை நாம் தினந்தோறும் சாப்பிடும் போது நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட் சத்து கிடைக்கிறது.

 • தோசையை அதிகமாக சாப்பிடுவதனால் விட்டமின் மற்றும் மினரல்ஸ் அதிகமாக கிடைக்கிறது. தோசையோடு சாம்பார் சேர்த்து சாப்படுவதனால் புரோட்டீன் சத்தும் கிடைக்கிறது.

 • தோசையை காலை உணவாக எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நல்லது.

 • சிலருக்கு கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியனவற்றை சாப்பிடப் பிடிக்காது. அப்படிபட்டோருக்கு தோசையாக கொடுத்தால் சாப்பிடுவர். எனவே, தோசையின் மூலம் கேழ்வரகு மற்றும் கம்பில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது.

 • வேக வைத்த முட்டையை சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே, முட்டையை தோசையின் மீது ஊற்றி முட்டை தோசையாகக் கொடுக்கலாம். இதன் மூலம் முட்டையில் உள்ள புரோட்டீன் சத்து கிடைக்கிறது.


குறிப்பு:


 • தோசையில் அதிக அளவு எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.
  எண்ணெய்யை அதிகமாக பயன்படுத்தினால் இதயத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

 • சர்க்கரை நோய் இருப்பவர்கள் அரிசி மாவு தோசைக்கு பதிலாக கேழ்வரகு மற்றும் கம்பு தோசையை சாப்பிட்டால் நோயைக் கட்டுப்படுத்தும்.

 • நீரிழிவு நோயாளிகள் தோசையோடு தேங்காய் சட்டினி சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo