பிறந்த கிழமைகளின் அடிப்படையில் உங்கள் எதிர்கால ராசிபலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பிறந்த கிழமைகளின் அடிப்படையில் உங்கள் எதிர்கால ராசிபலன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

ஜோதிடம் எப்போதும் சுவாரஸ்யமான ஒன்றுதான். இதில் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள்கூட செய்தி தாள்களில் தினமும் ராசிபலனை யாருக்கும் தெரியாமல் படிப்பவர்கள் ஆகத்தான் இருப்பார்கள்.


எனக்கும் தினமும் இதனைப் படித்தபின் நாளைத் தொடங்குவது பிடிக்கும். பெரும்பாலான நாட்களில் இந்த ராசிபலன் எனக்கு மிக சரியாகப் பொருந்தும். ஒரு முக்கிய நபரை சந்திப்பீர்கள் என்று எனது ராசிபலன் கூறியிருந்தால் அன்றைக்கு நான் அப்படி ஒரு நபரை சந்தித்து தான் இருப்பேன்.


உங்களுக்கு அதிர்ஷ்டம் ஆரம்பித்து விட்டது என்று எனது ராசிபலன் கூறியிருந்த நாளில்தான் POPxo வில் எனக்கு வேலைக்கான ஆர்டர் வந்தது. நம்புங்கள் நிச்சயம் ஜோதிடம் என்பது உண்மைதான். ஆனால் எந்த ஜோதிடர் அதனை சொல்கிறார் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது.பிறந்த நாள் ஜோதிடம், பிறந்த ராசி ஜோதிடம் , பிறந்த நட்சத்திர ஜோதிடம் போலவே பிறந்த கிழமை (day of birth )ஜோதிடமும் மிக சரியான பலன்களைக் கொடுக்கும். உதாரணமாக சனிக்கிழமை பிறந்த எனது ஜோதிட பலன்கள் முற்றிலும் உண்மையானது.


உங்களுடைய பலன்களும் உண்மையானதுதானா என்பதை படித்து தெரிந்து கொண்டு கமெண்டில் கூறுங்கள்


திங்கள் கிழமை


சந்திரனின் ஆதிக்கம் இந்த நாளில் அதிகமாக இருக்கும். பெரும்பாலும் அமைதியான நபர்களாக இவர்கள் இருப்பார்கள். தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு முன்னேறுவார். கருணையானவர்கள்.நன்மை தீமை இரண்டையும் ஒன்றாக பார்ப்பார்கள். கல்வி இவர்களுக்கு கசக்கும் ஆனாலும் பிற்காலத்தில் ஞானத்தை அடைவார்கள்.
செவ்வாய் கிழமை


செவ்வாய் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் போர் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். தங்களது கோபத்தை மற்றவரின் மனம் நோகும்படி வெளிப்படுத்துவார்கள். ஆளுமைத் தன்மை அதிகம் இருக்கும். இதனால் இதே குணம் கொண்ட உறவுகள் நிலைக்காது.புதன் கிழமை


புதனின் ஆதிக்கம் உள்ள நாள் இது. இந்த நாளில் பிறந்தவர்கள் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் அறம் போற்றும் ஒரு வாழ்வை வாழ்வார்கள். பெரியவர்கள் மேல் மரியாதை கொண்டவர்கள். மிகத் தெளிவாக தங்கள் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள்.வியாழக் கிழமை


குருவின் ஆதிக்கம் அதிகம் உள்ள நாளில் பிறந்த இவர்கள் அறிவுக்கூர்மை மிக்கவர்களாக இருப்பார்கள். எத்தனை கடினமான சூழல் இருந்தாலும் புத்திசாலித்தனத்தால் அதனை வெல்வார்கள். நண்பர்கள் மற்றும் உறவுகளின் அன்பைப் பெறுவார்கள். அதிர்ஷ்டம் இவர்கள் பக்கம்தான்.வெள்ளிக் கிழமை


சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள். தனித்துவம் கொண்டவர்களாக மின்னுவார்கள். காதல் இவர்களின் குல தெய்வம் . எல்லாவற்றையும் பொறுத்து கொள்வார்கள். எப்போதும் சிறந்தவர்கள் என பாராட்டப்படுவார்கள்.சனிக் கிழமை


சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் இளம் வயதில் புரியாத பல துன்பங்களுக்கு ஆளாவார்கள். இதன் காரணமாக வளர்ந்த பின் மிகக் கவனமாக இருப்பார்கள். நண்பர்கள் உறவினர்கள் எல்லோரிடமும் ஒரு இடைவெளி விட்டுத்தான் பழகுவார்கள். தாய் தந்தை ரத்த உறவுகளோடு பழகும் போது அசௌகரியமாக உணர்வார்கள். மூன்றாவது மனிதர்களை நம்புவதால் சில சமயம் ஏமாற்றங்களை சந்திப்பார்கள்.ஞாயிற்றுக் கிழமை


சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் வாழ்க்கை அதே வெளிச்சத்தோடு இருக்கும். வாழ்க்கை இவர்களுக்கு அற்புதமாக இருக்கும். லேசாக இருப்பார்கள். மற்றவர்களோடு நெருங்க கூச்சப்படுவார்கள். தாங்கள் கொண்டுள்ள மதத்தின் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கும். தங்கள் குடும்பத்தாரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். --


படங்களின் ஆதாரங்கள் - பிக்ஸாபெ,பேக்செல்ஸ்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.