இந்த காலத்தில் இன்னமும் பெற்றோரையும் பேணிப் பாதுகாக்கும் குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மேற்கத்திய தாக்கங்கள் நம்மைத் தாக்கினாலும் இன்னமும் சில முக்கிய விஷயங்களில் நாம் மாறவில்லை என்பது பெருமைக்குரிய விஷயம்தான்.
ஆனாலும் இப்போதெல்லாம் திருமணம் என்பது மிகத் தாமதமாக நடைபெறுகிறது. முன்பெல்லாம் 18 வயதிற்குள் குறைந்தது ஒரு குழந்தைக்காவது தாய் ஆகியிருப்போம். ஆனால் இப்போதோ முதல் குழந்தை பிறப்பது 35 வயதிற்கு மேல்தான் என்கிறது ஒரு ஆய்வு.
இதனால் சிறு குழந்தைகளையும் அதே மனநிலையில் உள்ள பெற்றோரையும் ஒரே நேரத்தில் பராமரிக்கும் போது பல்வேறு மனநிலை சிக்கல்கள் எழுகின்றன. இரண்டு தலைமுறையினருக்கும் (between parents and kids )ஏற்ப வாழ்தல் அவரது விருப்பங்களை செய்து கொடுத்தல் என்பது இந்தத் தலைமுறையினருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இதனை வெளியே யாரிடமும் சொல்ல முடியாத சூழ்நிலையும் இருப்பதால் தீவிர விரக்தியினால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதில் இருந்து விடுபடவும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரையும் சமநிலையில் பராமரிக்கவும் சில குறிப்புகள் உங்களுக்காக.
தாத்தா பாட்டியையும் பேரன் பேத்தியையும் ஒன்றிணையுங்கள்
தனது குழந்தைகளை பற்றிய விஷயங்களை உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேளுங்கள். இப்படி செய்வதன் மூலம் பெரியவர்கள் குடும்ப சூழல் மற்றும் உங்கள் மன அழுத்தம் போன்றவற்றைப் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். அவர்களின் முக்கியத்துவம் புரியும்.
இதைப்போலவே பெரியவர்களை பார்த்துக் கொள்வதில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு பேப்பர் படித்து சொல்வது முதல் மருந்து எடுத்து தருவது வரை உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். இதனால் அவர்களுக்கு இடையேயான உறவு வலிமையாகும். மற்றவர்களுக்கு உதவும் குணம் உங்கள் குழந்தைகளுக்கு தானாகவே ஏற்படும்.
இரட்டை வேலைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்
பெற்றோர்களின் உணவு விருப்பங்கள் குழந்தையின் உணவு விருப்பங்கள் வேறு வேறானவை அதனால் நீங்கள் அதிக நேரம் சமையல்கட்டு பக்கத்தில் இருக்க நேரிடலாம். இதனைத் தவிர்க்க இருவருக்கும் பொதுவான ஆரோக்கியமான உணவினைப் பற்றி இருவரிடமும் பேசுங்கள். வாரத்தில் ஒருமுறை அவரவர் விருப்ப உணவை சமைத்துக் கொடுங்கள். இதனால் உங்கள் வேலைப்பளு குறையும்.
தேவைப்படாத போதும் உதவி செய்யாதீர்கள்
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரையும் நீங்கள் மாறி மாறி கவனித்துக் கொள்கிறீர்கள். ஆனாலும் அவர்கள் உங்கள் மேல் குறைகள் சொல்லலாம். அவர்கள் சுதந்திரம் பறிபோவதாகவும் கருதலாம் என்கிறார்கள் உளவியலாளர்கள். அல்லது இரண்டு பேருமே எல்லாவற்றிற்கும் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் சிக்கலாம். இதனைத் தவிர்க்க உங்களால் என்ன முடியும் என்பதை அவர்களிடம் தெளிவாக எடுத்து சொல்லுங்கள். அதைப் போலவே யாருக்கு அதிகமாக உதவி தேவைப்படும் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுங்கள். இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள் குழந்தைகள் பெரியவர் இருவருமே சில விஷயங்களை அவர்களே செய்து கொள்வார்கள்.
வேலையைப் பகிர்தல்
என் தோழி ஒருவருக்கு காலையில் குழந்தையைப் பள்ளியில் விட வேண்டும் மீண்டும் தன் அப்பாவை மருத்துவரிடம் கூட்டி செல்ல வேண்டும் அதன்பின் மதிய உணவுக்கு குழந்தையைப் பார்க்க போக வேண்டும் மாலையில் அவர் மிகவும் களைத்திருப்பார். இது போன்ற சமயங்களில் உங்கள் கணவரோடு சில வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படியும் இல்லாவிட்டால் அபார்ட்மெண்ட் வாசிகள் எனில் ஒரே பள்ளிக்கு செல்லும் மற்ற குழந்தையின் பெற்றோரிடம் உதவி கேட்கலாம். இதில் தயக்கம் வேண்டாம். வாரத்தில் சில நாட்கள் இப்படி நகரட்டும்.
இப்படி இரண்டு பேரையும் மாற்றி மாற்றி கவனிப்பதில் நீங்கள் உங்களைக் கவனித்துக் கொள்ள மாட்டீர்கள். ஆனால் அப்படி இருக்காதீர்கள். உங்களுக்கான நேரம் ஒதுக்குங்கள். என்ன ஆனாலும் அந்த நேரத்தை நீங்கள் மற்றவருக்காக விட்டுக் கொடுக்காதீர்கள். உங்கள் தோழியை சந்திப்பதோ அல்லது தனியே ஒரு லாங் ட்ரைவ்வோ ஏதோ ஒன்று உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதும் இங்கே அவசியம்.
ஏனெனில் நீங்கள் நன்றாக இருந்தால்தான் மற்றவரைப் பார்த்துக் கொள்ள முடியும்.
—-
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.