2019ல் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொண்டு போகும் அந்த ஐந்து ராசிக்காரர்கள் யார் யார்

2019ல் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொண்டு போகும் அந்த  ஐந்து ராசிக்காரர்கள் யார் யார்

இப்போதுதான் புது வருடம் பிறந்திருக்கிறது. இதில் இந்த வருடம் எப்படியெல்லாம் இருக்குமோ என்கிற ஏக்கத்தில் எல்லோருமே இருப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் கைகொடுப்பது ராசிபலன்கள் சொல்லும் ஜோதிடம்தான்.


அவரவர் ராசிப்படி என்னென்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு சந்தோஷமாகவோ அல்லது முன்னெச்செரிக்கையுடனோ நடந்து கொள்ள இந்த ராசிபலன்கள் உதவி செய்கிறது.


அதில் இந்த வருடம் அதிர்ஷ்டம் மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு போகும் ஐந்து lucky ராசிகள் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உங்கள் ராசியும் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.ரிஷபம்


எப்போதும் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து உங்களுக்கு அலுத்து போயிருக்கலாம். இந்த வருடம் உங்களுக்கு மாற்றம் ஏற்பட போகிறது, உங்கள் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். உங்களுக்கே தெரியாத திறமைகள் எல்லாம் உங்களுக்கு இந்த வருடம் தெரிய வரும்.உங்களுடைய காதலின் பாதை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். உங்களுடைய உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள். உங்களுடைய இந்த வருடம் அமோகமாக இருக்கும்.
சிம்மம்


போன வருடம் முழுதும் அலைச்சலும் மருத்துவ செலவும் குறைந்த வருமானமும் எனக் கடந்திருப்பீர்கள். முக்கியமாக வருட இறுதிகளில் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் சொல்லவே முடியாத அளவுக்கு இருந்திருக்கும். இந்த வருடம் எல்லாம் மாறும். நேர்மறை எண்ணங்கள் மற்றும் செயல்கள் பெருகும். உங்கள் வியாபார சவால்களை முறியடிப்பீர்கள். வேலையில் பாராட்டுக்கள் அதிகரிக்கும். இந்த வருடம் அதிர்ஷ்டம் மட்டுமல்ல உங்கள் உண்மையாக நேசிப்பவர் யார் என்பதையும் நீங்கள் கண்டறிவீர்கள்.
கன்னி


இதுவரைக்கும் ஓட்டுக்குள் மறைந்த ஆமை போல எதிலும் பட்டுக் கொள்ளாமல் தொடர்பற்று இருந்து வந்தீர்கள்.இந்த வருடம் நீங்கள் உங்கள் ஓட்டை விட்டு வெளியே வந்து பரபரப்பாக இயங்க ஆரம்பிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையை பொறுப்பாக நடத்தி செல்ல விரும்பும் உங்களுக்கு இந்த வருடம் புதிய துணை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உங்கள் காதல் கனவுகள் நனவாகும். இருப்பினும் நல்ல எதிர்காலத்திற்காக கொஞ்சம் உங்கள் காதல் வேலைகளைத் தள்ளிப் போடுங்கள். இந்த வருடம் உங்களுக்கு புகழும் பெருமையும் கிடைக்கும் வருடம் ஆகும்.
மகரம்


அமைதிக்கும் பொறுமைக்கும் பெயர்போன உங்களுக்கு இந்த வருடம் தைரியமாக வாழ வேண்டிய அவசியத்தை போதிக்கும். காதல் , வியாபாரம் எதுவாக இருந்தாலும் உங்களை மற்றவர் ஜெயிக்க முடியாது. ஒரு ஓநாயின் தனிமையில் காத்துக் கிடந்த நீங்கள் இந்த வருடம் உங்கள் துணையைக் கண்டுகொள்வீர்கள்.ஒரு முக்கியமான நபர் உங்கள் இதயத்தில் நுழைய போகிறார் என்பதால் இதயத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்


மற்றவர் மீது அக்கறை கொண்ட நீங்கள் உங்கள் மீதும் சுயநலத்தோடுதான் இருப்பீர்கள். இந்த வருடம் உங்கள் உள்ளுணர்வு சொல்வதிற்க்கேற்ப நடந்து கொள்ளுங்கள். உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுப்பீர்கள். உங்களிடம் இருந்து எதையாவது அபகரிக்க நினைப்பவர்களை ஒரு கை பார்த்து விடுவீர்கள். உங்கள் மேலேறி மற்றவர் உயரம் போவதை இனிமேலும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டீர்கள். உங்கள் வலிமைதான் இந்த வருடம் உங்களுக்கு தந்துள்ள ஆயுதம். அதனைப் பயன்படுத்தி தைரியமாக முன்னேறுங்கள்


 


---                                                                           


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.