போன் கம்பெனி காரங்க நல்லா சம்பாரிக்கிறது நிச்சயத்திற்கும் கல்யத்திற்கும் (wedding) இடையில் உள்ள நேரத்துல தான் என்று கடி ஜோக்ஸ் வர அளவுக்கு ஒரு பந்தத்தில் இணையும் முன் ஆணும் பெண்ணும் பேசி கொள்கிறார்கள். அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை, ம்ம்ம்… அப்புறம், வேற, சொல்லு… என்ற வகையில், செல்லாமல் சுவாரஸ்யமான உரையாடலாக மாற்ற, அதை தெளிவாக எதுஎதை பெண்களாகிய நீங்கள் திருமணத்திற்கு முன்பே (விசித்திரமான விஷயங்களாக இருந்தாலும்) பேச வேண்டிய சில ஐடியாஸ்….
வீட்டு வேலை :
ஆணும் பெண்ணும் சமம் னு வெளில பேசுனாலும், வீட்டில் அப்படி இருக்குறது ரொம்ப முக்கியம். அதுனால வேலை பத்தி முதல் தெளிவாக எடுத்து சொல்லுங்க. கண்டிப்போடு சொல்லாமல் அன்பாக பேசி புரிய வைக்கணும்.ஒரே நபர் அனைத்தையும் செய்ய முடியாது. வேலையை பளுவாக கருதாமல் சமமாக பிரித்து கொள்வது பற்றி பேசுங்கள்.
வாழும் சூழல் :
இரு வேறு சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ஒன்றாக வாழும் போது, இருவருக்கும் பிடித்தது போல சூழலை ஏற்படுத்தி கொள்ளல் வேண்டும். இயற்கை ரசிக்கும் குணம் இருந்தால், தோட்டம் வைக்க உதவ வேண்டும். இசையை ரசிக்கும் குணம் இருந்தால் ஹோம் தியேட்டர் போன்ற சின்ன சின்ன சௌகரியம் செய்து கொள்ள இருவரும் பேசி முடிவெடுங்கள்.
குழந்தை திட்டமிடல் :
பல இலட்சியத்தை கொண்டுள்ள இந்த காலகட்டத்தில், கல்யாணம் உடனே குழந்தை என்று ஓடாமல், இருவரும் கலந்து பேசி திட்டமிடில் வேண்டும். நம்முடைய வயது, உடல் ஆரோக்கியம், மனப்பக்குவம், தைரியம், பொருளாதார சூழல், போன்ற முக்கிய அம்சத்தை கருத்தில் கொண்டு இருவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.
அன்பளிப்பு :
அன்பளிப்பு தம்பதிக்குள் அன்பை பெறுக செய்யும் கருவி. அது மனதிற்கு பிடித்தது போல அமைத்தல் கூடுதல் ப்ளீஸ்.ஆகையால் பேசும் போது,பிடித்தது, பிடிக்காதது என்பதை இருவரும் பேச்சின் மூலம் அறிந்து கொள்ளுங்கள். இதுவே ஊடலின் போது கூடல் வர மிக உதவும்…
சுகமின்மை :
இன்பம் துன்பம் கலந்த வாழ்வில் உடல் சுகமின்மை அடைந்தால், எப்படி அக்கறையோடு பார்த்து கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படையா பேசுங்கள். சின்ன தலைவலி போது, மாத்திரையை விட அன்பானவர் அக்கறையோடு விரல்களால் தலையை அமிக்கிவிட்டால், மனசு இதமாக இருக்கும். அந்த நேரத்தில் நம் மன எதிர்பார்ப்பை வெளிப்படையாக எடுத்து கூற வேண்டும்.
மாமியார் மாமனார் :
குடும்பத்தில் அனைவரும் ஒரே போல இருப்பதல்ல. ஆக பெற்றோரின் குணத்தை எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.அதன் மூலம் அவர்களின் குணம் பொறுத்து நடந்து அவர்களின் நன்மதிப்பை பெற முடியும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவதால், குடும்பத்தில் சீக்கிரம் நல்ல முறையில் இணக்கம் ஆகி விடலாம்.
கடன் :
லோன்..
இன்னைக்கு இளைய தலைமுறையின் அடிப்படை டென்ஷன் ரீசன். ஒருவர்க்கு ஒருவர், வாங்கி இருக்கும் கடன், அதனால் கட்ட படும் வட்டி பணம், மாதாந்திர கடன் தொகை இவையெல்லாம் தெளிவாக பேசி புரிந்துகொள்ள வேண்டும் அப்போது தான் பொருளாதார சூழ்நிலையை திட்டமிட்டு தெளிவாக கொண்டு செல்ல முடியும்.ஆயுள் முழுதும் வாழ்க்கையை பகிர போகும் துணைக்கு, உங்கள் கடன் நெருக்கடியை தெளிவாக எடுத்து கூறி புரிந்து கொள்ளுங்கள்..
இடமாற்றம் :
மாற்றம் மாறாதவை என்பது போல்… காலப்போக்கில் வரும் மாற்றத்தை எதிர் கொள்ள திட்டமிடல் விஷயங்களை அவசியம் பேசவேண்டும் .வேலையின் காரணமாக ஏற்படும் இடமாற்றத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லை கொடு :
நம் வாழ்க்கை துணை என்றால் நமக்கு அடிமை இல்லை. அது போல எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடியாது. ஆக எதிர் பாலினத்தோட எவ்வாறு பழக வேண்டும் என்பதை வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். மனதிற்குள் வைத்து, தேவையில்லாத பிரச்சனை வரும் சூழ்நிலை வராமல் உங்கள் உறவு பாதுகாக்க படும்.
சுற்றுலா :
விடுமுறை, நாட்களில் எப்படி, அழகான முறையில் செலவிட திட்டம் வேண்டும். இருவரின் விருப்பம், ஆசையை ஒரே புள்ளியில் கொண்டு செல்ல வேண்டியது மிக முக்கியம்.அதனை பேச்சினால் அறிந்து கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
பூப்பிப் (pooping) :
இதெல்லாம் பேசுற விசயமானு யோசிக்கிறீங்களா??
ஆமா.. வியர்டு (weird) ஆகதான் இருக்கும். பேசணும்!! எங்கோ இருந்த ஒரு பெண்ணும் ஆணும் ஒரு அறையில் ஒன்றாக பகிர்ந்து வாழும் போது, அவர்களின் சின்ன சின்ன விஷயங்களில் புரிதல் மிக அவசியம். சுத்தமாக வைப்பது, சுத்தம் செய்வது, அதை எல்லாம் கண்ணியமான முறையில் உரையாடி கொள்ள வேண்டும்.
உணவு முறை :
அறுசுவைகளில் நம்மவரின் பிடித்த சுவையை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள். ஒருத்தருக்கு நான் வெஜ் (NV) புடிக்கும் ஒருத்தருக்கு வெஜ் பிடிக்கும். சுவாரஸ்யமான பேச்சில் இதை தெரிந்து கொள்ள வேண்டும். நான் வெஜ் பிடிக்காதவங்களுக்கு அதனை சுத்தம் செய்து சமைக்க முழு உதவியை கொடுக்க வேண்டும்அப்பொழுது யாருடைய ஆசைகளையும் தவிர்க்காத முறையில் அனுசரிச்சு போக முடியும். இவற்றை திருமணத்திற்கு முன்பே வெளிப்படையாக பேசி கொள்ளல் வேண்டும்.
ரொமான்ஸ் டைம் :
வள்ளுவனின் முப்பாலில் மூன்றாம் பாலான காமத்து பாலை எவ்வாறு கையாள்வது என பரஸ்பர சம்மதத்தோடு பேசி கொள்ளுங்கள். செக்ஸ்சுவல் ஏசுகேசண் நிச்சயம் தேவை என்ற நிலையில் இருக்கும் இக்காலகட்டத்தில், வெளிப்படையாக பேசி புரிந்துகொள்ள வேண்டும்.
சமாதான தந்திரங்கள் :
சிறு ஊடல்கள்
இல்லாத கூடல் இல்லை…..
என்ற பாடல் வரி போல அன்றாட வாழ்வில் பிரச்சனை வராமல் இருக்காது. அப்படி வரும் போது நீ பஸ்டு பேசிட்டு, என்னால உடனே சமாதானம் ஆக முடியாது. அதனால் என்னை நீ பேசவைக்கணும் அப்டின்னு செல்லமா சொல்லுங்கள் பிரச்சனையின் தீர்வுக்கான ஐடியாவை இப்பவே சொல்லி வச்சுறலாம். இவையெல்லாம் பேச சுகமாக இருப்பதும் அல்லமால், பின்னாடி வர பிரச்னையை தீர்க்க உதவும்.
பக்தி :
ஆன்மிகம் என்பது அனைத்து வயதினரையும் நெறி படுத்த உதவும்.ஆகையால், ஆன்மிகத்தில் நம்முடைய விருப்பு வெறுப்பை தெளிவாக பேசி கொள்ளுங்கள்.திருமணத்திற்கு பின் நிர்பந்தத்தால் ஒருவரை ஒருவர் திணிக்க வேண்டிய நிலை ஏற்படாது.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்…..!!
என்பது போல அன்பை பரஸ்பர புரிதலோடு எந்த கட்டுப்பாடும் இன்றி வெளிப்படுத்துங்கள்.
படங்களின் ஆதாரங்கள் – பிக்ஸாபெ , ஜிபி, பேக்செல்ஸ்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.