ஒருவனுக்கு சம்பாத்தியம் என்பது செய்யும் வேலையில் இருந்து கிடைப்பது.ஆனால் வேலை என்பது சம்பளத்திற்க்கு மட்டும் அல்ல.நம் மனதிற்கு பிடித்த வேலையாக இருக்க வேண்டும்.அப்போது தான் அது உங்கள் வாழ்வில் வெற்றியை தேடி தரும்.இப்போது நீங்கள் பார்க்கும் வேலை பிடிக்குதா…? பிடிக்கலையா…? என்பதை வைத்து வேலை தொடர்ந்து இருப்பதா!!, இல்லை விட்டு விலகிவிடுவதா!! என்பதை தீர்மானம் செய்வோம்.
ஆனால், சில மன நிலைகள் (அறிகுறிகள்) கூட நம் வேலை (work) விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வர உதவும்.
தேவையற்ற வெறுப்பு:
நமக்கு என்று கொடுக்கப்படும் வேலைகளை பார்க்கும் போதே நம்மை அறியாமல் வெறுப்பாடைவோம்.அந்த வேளைகளில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் மனம் சலிப்படைந்தால், தெரிந்து கொள்ளுங்கள், இது உங்களுக்கான இடம் இல்லை.
பிரேக் தேவை படுகிறது :
வேலையில் நாம் முழுமையாக ஈடுபாடு கொண்டால்,அங்கேயே கவனத்தை வைத்து விடுவோம். நீங்கள் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, காபி, டீ குடிக்க வெளியே செல்லும் போதும் அல்லது மதிய உணவிற்குகாக வெளியே செல்லும் போது, உங்கள் மனம் இதமாக உணர்த்தால், உங்கள் மனம் வேலையில் நிர்பந்தம் காரணமாக இருக்கிறது என்ற அறிந்து கொள்ளுங்கள்.இப்போ வேலையை விட்டு விலகும் (quit job) முடிவு நல்லது.
கோவம்/ எரிச்சல் :
காலை நேரம் நம் மனது மிகவும் அமைதியாக இருக்கும். அப்படி இருக்கும் போது அலுவலகம் செல்லும் நேரம் வந்தால், அல்லது போகணுமே !! என்ற எண்ணமே நம்மை அறியாமல் கோவம் எரிச்சல் போன்ற குணம் வந்தால்.அந்த பனிச்சூழலை உங்கள் மனம் வெறுக்கிறது என்று அர்த்தம்.தேவையற்ற கோபமும் எரிச்சலும் போன்றவை நீங்கள் பார்க்கும் வேலையை விட்டுட்டு வேறு மனதிற்கு பிடித்ததை பார்க்க சொல்லுதுனு புரிஞ்சிக்கனும்.
தேவையற்ற செலவு :
பிடிக்காத வேலையின் பளுவால், மனம் மிகவும் அழுத்திற்கு ஆளாகி, நாம் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல்,பல இன்னல்களுக்கு ஆளுகுவோம்… அந்த நேரத்தில் மன அழுத்தத்தை குறைக்க பொருட்களை வாங்கி கொண்டே இருந்து நிம்மதி இல்லாமல் இருப்போம்.இது மிக முக்கிய அறிகுறி (signs) நாம் பார்க்கும் வேலையை உதறிவிட்டு செல்ல…
காரணமற்ற கோவம் :
அலுவலகத்தில் வேலையில் இருக்கும் போது தேவையற்ற கோவம் கொள்வோம்.பல நேரங்களில் அர்த்தமில்லாத கோவத்தை நமக்கு கீழ் இருப்பவர்கள் மீது காட்டுவோம். வேலை நேரத்தில் வரும் போன் மெசேஜ் கூட வெறுப்பை கொடுத்து, பேசுபவர்களின் மீதும் நம்முடைய கோவத்தை காட்டுவோம். இந்த அறிகுறி உங்களுக்கும் இருந்தால், நிச்சயம் நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை.அதனால் வேலையை விட்டுவிட சரியான நேரம் இது.
கவனமின்மை :
அலுவலகத்தில் இருப்போம், வேலைகளை செய்வோம்.ஆனால் எதற்காக செய்கிறோம்,ஏன் செய்கிறோம் என்ற எந்த வித ஆர்வமும் அக்கறையும் இருக்காது.
ஒரு பதற்ற நிலையில செய்யும் செயலில் கவனம் இல்லாமல் விரக்தியான மன நிலையில் இருந்தால்,கண்டிப்பாக இந்த வேலை உங்களுக்கான தளம் இல்லை.விலகிவிட்டு உங்கள் தடத்தை தேடி செல்லுங்கள்.
நண்பர்கள் :
உன் நண்பனை சொல்,
உன் குணத்தை சொல்கிறேன் என்பார்கள்…
அது போல உங்களின் சில சிக்கலான சூழ்நிலையில் உங்களை அறியாமல் நீங்கள் இருப்பதை உங்கள் நண்பர்கள் நன்கு அறிவார்கள். ஆகையால் உங்கள் பெஸ்ட் பிரின்ட் கிட்ட பேசும் போது நிச்சயம் அவன் சொல்லுவான்.
உங்கள் தன்மையை அவன் கணித்து சொன்னால் நிச்சயம் அதில் உண்மை இருக்கும்.ஆகையால் அந்த வேலையை விட்டுட்டு வெளியேற தயங்காமல் இருக்கவேண்டும்.
ஆர்வமின்மை :
நாம் பணி செய்யும் அலுவலகத்தில் என்ன தான் நமக்கு விருப்பம் இல்லாவிடில், ஏதோ என்று வேலை செய்து கொண்டு இருப்போம்.ஆனால், அந்த ஆர்வமின்மை பல வேறு மன சங்கடம் வரும் நிலைமைக்கு நம்மை ஆளாக்கும்.
அதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது வெறுப்பு. அதுவும் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களை பார்க்கும் போது பிடிக்காமல், அவர்களிடம் இருந்து வெறுப்புனர் வோடு இருந்து முற்றிலும் வெறுத்தால், 100% அது உங்களுக்கு மிகவும் வெறுக்கும் வேலை.இந்த சூழ்நிலையில் வேலையை விடாமல் இருக்கும் போது வேற பல இன்னல் வந்து நம்மை வாட வைக்கும்.
எதிர்காலம் :
எல்லோருக்கும் ஒரு பர்சனல் மைண்ட் வாய்ஸ் இருக்கும்.அதாவது நம்ப நிலைமை என்னனு அனலைஸ் பண்ண முடியும். நீங்க பாக்குற வேலைய இது இனிமே நமக்கு எந்த வித பிரயோஜனம் இல்லாத வேலைநோ,அல்ல இந்த வேலை நம் எதிர்காலம்துக்கு தேவை இல்லனு தோணுச்சுன கண்டிப்பா உங்க மனக்குரலுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய நேரம் இது.
போதிய பாராட்டு :
நீங்கள் உங்கள் உழைப்பு போட்டு செய்யும் போதும், எந்த ஒரு பாராட்டுகளும் பெறாமல், போதிய அங்கீகாரம் இல்லாமல் இருந்தால், சற்று விழித்து கொள்ளுங்கள்.அதே போல உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது நீதி. குறிப்பிட்ட வேலை என்று சொல்லியும், எல்லை கோட்டை தாண்டி உங்களை வேலை வாங்கும் போது, அதற்கேற்ற ஊதிய உயர்வு தராமல். உங்கள் வேலை குறை சொல்லி சம்பளத்தை பேரம் பேசி குறைக்க நினைத்தால், உங்களுக்கான சரியான அங்கீகாரம் தரபடவில்லை. விழித்து கொள்ளுங்கள்..
வேலையில் என்றோ ஒருநாள் படும் இன்னல்களை மனதில் வைத்து முட்டாள் தனம் செய்ய வேண்டும்.
கஷ்டம் இல்லாமல் வெற்றி இல்லை…
அடிமை பட்டு மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்ளுங்கள்….
படங்களின் ஆதாரங்கள் – பேக்செல்ஸ்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.