உங்கள் ராசி எதுவோ ! உங்கள் செல்ஃபியும் அதையே பிரதிபலிக்கும்!

உங்கள் ராசி எதுவோ ! உங்கள் செல்ஃபியும் அதையே பிரதிபலிக்கும்!

ஒவ்வொரு செல் ஃபி ஸ்டைல் வைத்து அவரவர் குணாதிசியங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் !


நீங்கள் கவனித்ததுண்டா ஒவ்வொருவரின் செல்ஃபி எடுக்கும் பாணியும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். அவரவருக்கே உரித்தான ஒரு தனிப்பாணியை அந்த செல்ஃபிக்கள் கொண்டிருக்கும். ஒவ்வொருவர் எடுக்கிற கோணங்கள், அவர்கள் புன்னகைக்கும் விதம், அவர்கள் யாருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது போன்ற பல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் வித்யாசப்படும். இதற்கெல்லாம் அவர்களது தனிப்பட்ட குணாதிசியங்கள்தான் காரணம் என்கிறது ஜோதிடம். நமது செயல்கள் அனைத்தும் நமது பிறப்பின் விதிப்படிதான் அமைகிறது. ஆகவே ஜோதிடத்தின் இந்த கூற்றுப்படி பார்த்தால் நவீன செல்ஃபிக்கள் காலத்திலும் அதை எடுக்கும் விதம் கொண்டு ராசிப்படி பிரிக்க முடியும் என்பதுதான் உண்மை.


நீங்கள் எடுக்கும் செல்ஃபிபடி உங்கள் குணாதிசியங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.மேஷ ராசிக்காரர்கள்


அக்னியின் அடிப்படை குணம் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் ஆளுமைத்தன்மை வாய்ந்தவர்கள். எப்போதும் தான் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும் இவர்கள் இவர்கள் விருப்பப்படியே எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுடன் நீங்கள் நண்பர்களாக இருப்பின் ஒரு செல்ஃபி
எடுப்பதற்குள் என்னென்ன பாடுபடவேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்! ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்தபடி புகைப்படம் வரவில்லை என்றால் உங்களை டெலிட் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்!
ரிஷப ராசிக்காரர்கள்


இந்த ராசியில் பிறந்த பெண்கள் மிக வலிமையானவர்கள். ஆனால் அதே சமயம் இவர்கள் மற்றவர்களை சார்ந்து இருக்க விரும்புவார்கள் மேலும் நடுநிலமைவாதிகளும் கூட. பொருள் சார்ந்த தன்மையுடைவர்கள் ஆகவே தங்களுக்கு உரிமையான பொருள்களை மிக நேசிப்பார்கள். ஆகவே பெரும்பாலும் இவர்களது செல்ஃபிக்கள் அவர்களது விலையுயர்ந்த உடைமைகளோடுதான் எடுக்கப்பட்டிருக்கும். இதில் தவறென்ன இருக்கிறது! உங்களிடம் இருக்கும் பெருமைப்பட வேண்டிய விஷயங்களை நீங்கள் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாட முடியும்!மிதுன ராசிக்காரார்கள்


இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஜாலியானவர்கள் நகைச்சுவையாளர்கள்! வெளிப்படையான இவர்களின் செல்ஃபிக்கள் நிச்சயம் நமக்கொரு கதை சொல்லும். விளையாட்டுத்தனமான செல்ஃபிக்கள் எடுக்க விரும்பும் இவர்கள் அதில் எப்போதும் கோணல் மாணலான குறும்பு புன்னகைகளைக் கொடுக்காத தவற மாட்டார்கள். ஒரு பார்ட்டியின் இரவை நீங்கள் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருந்தால் உங்கள் மிதுன ராசி (zodiac) நண்பியின் புகைப்படங்களை சரி பாருங்கள்! பார்ட்டியின் அத்தனை சந்தோஷங்களையும் அவர் தனது புகைப்படத்தில் பதிவேற்றியிருப்பார் !கடக ராசிக்காரர்கள்


எப்போதும் உணர்ச்சிவசமிக்கவரும் பாசமிக்கவருமான கடக ராசிக்காரர்களின் செல்ஃபிக்கள் வைத்து அவர்களது மூட்களை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். சந்தோஷமா, துக்கமா , எரிச்சலா எல்லாவற்றையும் இவர்களது செல்ஃபிக்களில் பார்க்கலாம். மேலும் நட்பை விரும்பும் இவர்கள் எப்போதும் தங்கள் நண்பிகளுடன் புகைப்படங்கள் எடுப்பதில் வல்லவர். எப்போதும் இவரது முகநூல் பக்கத்தில் குடும்பம் சார்ந்த விஷயங்களைத்தான் இவர் பதிவேற்றுவார். உங்கள் மிகப்பெரிய குடும்பத்தோடு ஒரே கிளிக்கில் செல்ஃபி எடுக்க வேண்டுமா ஒப்போ F1ன் பனோரமா ஆப்ஷனைக் கிளிக் செய்யுங்கள் !
சிம்ம ராசிக்காரர்கள்


எப்போதும் புகழின் வெளிச்சத்தில் இருக்க விரும்புவார்கள் இந்த சிம்ம ராசிக்காரர்கள். எப்போதும் ராஜபோக வாழ்க்கையை விரும்பும் இவர்கள் தங்களுக்கு வேண்டிய விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளவே மாட்டார்கள். உங்களை நேசிப்பதில் ஒரு குறையும் வைக்காத இவர்கள் முடிவுகளை மட்டும் இவர்களே எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு குழுவாக இருக்கும்போது பெரும்பாலும் இவர்கள்தான் முதலில் செல்ஃபி எடுக்க விரும்புவார்கள். கிராப்பிங் முதல் எடிட்டிங் வரை அத்தனை வேலையையும் செய்து முடித்த பிறகுதான் சோசியல் மீடியாவில் புகைப்படங்களை இவர்கள் பதிவேற்றுவார்கள்!கன்னி ராசிக்காரர்கள்


இவர்கள் மிகவும் நேர்த்தியானவர்கள். தலைமுடியில் இருந்து பாதம் வரை அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்து நல்ல ஒரு பின்னணியில்தான் செல்ஃபி எடுப்பார்கள். கொஞ்சம் சிக்கலான இவர்கள் 100 புகைப்படங்களைக் கிளிக் செய்து அதில் மிகசரியான ஒரு புகைப்படத்தை தேர்ந்தெடுப்பார்கள்! இறுதியில் இத்தனைக்கு காத்திருப்புகளுக்கும் ஏற்ற அழகான ஒரு புகைப்படம் வெளிப்படும். உங்கள் செல்ஃபி மிகத்துல்லியமாக இருக்க வேண்டுமா நீங்கள் ஒப்போ F 1 போனைத் தேர்ந்தெடுங்கள்துலாம் ராசிக்காரர்கள்


காதலின் ஆதிக்க ராசிக்காரர்கள் இவர்கள். எப்போதும் காதலோடு இருக்க விரும்பும் இவர்கள் அவர்களோடு எடுக்கும் செல்ஃபியைத்தான் அதிகம் பதிவிட விரும்புவார்கள். தங்கள் மனதில் பொங்கும் காதலை வார்த்தைகளில் வெளிப்படுத்த இவர்கள் தயங்க மாட்டார்கள்.அழகு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை விரும்பும் இவர்களின் புகைப்படங்களில் அழகுணர்ச்சியும் கலைநயமும் மிளிர்ந்து இருக்கும்.விருச்சிக ராசிக்காரர்கள்


பேரார்வம் மற்றும் உறுதியான தன்மையுடைய விருச்சிக ராசிக்கறார்கள் தங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்த மாட்டார்கள். எப்போதும் ஒரு ரகசியமாகவே இருக்க விரும்பும் இவர்களது செல்ஃபியும் கொஞ்சம் மர்மமாகவே இருக்கும். மிகவும் ஆழமான இவர்களது புகைப்படங்கள் உங்களை யோசிக்க வைக்கும்!
தனுசு ராசிக்காரர்கள்


சுறுசுறுப்பான துறுதுறுப்பான சாகசங்கள் செய்யத் துடிக்கும் தனுசு ராசிக்காரர்கள் பயணங்களை நேசிப்பவர்கள். முடிந்தால் உலகையே சுற்றி வர ஆசைப்படுவார்கள். அவர்களது செல்ஃபிக்கள் எல்லாம் அவர்கள் பயணிக்கும் இடத்தின் அழகைக் காட்டும் வகையில் அமைந்திருக்கும். நண்பர்களுடன் ஒன்றிணைந்து போவதில் வல்லவர்கள். உற்சாகமான இவர்கள் புதிய புதிய விஷயங்களை செய்து பார்க்க விரும்புவார்கள்!மகர ராசிக்காரர்கள்


எப்போதும் தனித்து இருப்பதில் பிரபலமானவர்கள் இந்த மகர ராசிக்காரர்கள். அவர்கள் எந்த வேலை செய்தாலும் அதை திறம்பட செய்வதில் வல்லவர்கள். ஆகவேதான் இவர்களின் ஒவ்வொரு செல்ஃபியம் நிறைய விருப்பக் குறிகளை பெறுகிறது ! எப்போதும் சோசியல் மீடியாவில் இவர்கள் ராணியாகவே இருப்பார்கள். குறும்புத்தனமும் யதார்த்த குணமும் உள்ள மகர ராசிக்காரர்களின் செல்ஃபியும் இதனையே பிரதிபலிக்கும். தனக்கு வேண்டியதை எப்படியாவது பெற்று விடும் சாமர்த்தியசாலிகள் இவர்கள்.கும்ப ராசிக்காரர்கள்


மனித நேயம் மிகுந்த கும்ப ராசிக்காரர்களின் அறிவுத்திறன் அற்புதமாக இருக்கும். ஒரே போல இருக்கும் இரண்டு செல்ஃபிக்களை இவரது பக்கத்தில் நீங்கள் பார்க்கவே முடியாது. எதனையும் அதே போல செய்ய விரும்ப மாட்டார்கள். ஒவ்வொன்றிலும் தனித்தன்மை வேண்டும் என நினைப்பார்கள். தனிமையை நேசிக்கும் கும்ப ராசிக்காரர்களின் செல்ஃபியும் அதனைப் போலவே இருக்கும். வாழ்க்கையைத் தங்களுக்குப் பிடித்த விதத்தில் வாழ நினைக்கும் இவர்கள் எப்போதாவதுதான் அதன் விதிகளை மதிப்பார்கள்!


 மீன ராசிக்காரர்கள்


கலைத்திறன் மிக்க மீன ராசிக்காரர்கள் அவர்களது வித்யாசமான சிந்தனையின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைப்பார்கள். அனைவருடனும் சகஜமாகப் பழகத் தயங்கும் இவர்கள் அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் மிக சரியானவர்களை மட்டுமே தங்களது நண்பர்களாகத் தேர்ந்தெடுப்பார்கள். தங்களது உள்ளுணர்வை மிகவும் மதிக்கும் இவர்கள் அறிவு சொல்வதை பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர்களது செல்ஃபிக்கள் பெரும்பாலும் கலைநயம் மிக்கதாகவும் புதுமையான சிந்தனைகள் மேலோங்கியதாகவும் இருக்கும். இவர்கள் நீர் ராசிக்காரர்கள் என்பதால் பெரும்பாலும் இவர்களது புகைப்படங்கள் நீர்நிலைகளை சார்ந்தே இருக்கும்.