கூந்தலை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்றும் 10 இந்திய ஷாம்பூ வகைகள்

கூந்தலை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்றும் 10 இந்திய ஷாம்பூ வகைகள்

அழகான பளபளக்கும் கூந்தல் என்பது வெறும் மரபணுக்களால் வருவதில்லை. அதனை பராமரிக்கும் விதத்தில்தான் அது மேலும் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். வழக்கமாக தலைக்கு குளிப்பது எண்ணெய் வைப்பது போன்ற அடிப்படை பராமரிப்புகள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.


நம் ஒருவருக்கும் ஒவ்வொருவிதமான பண்புகள் இருக்கும், விருப்பு வெறுப்பு இருக்கும், வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்கள் இருக்கும். அப்படி இருக்கையில் அத்தனை பேருக்கும் ஒரே ஷாம்பூ எப்படி பொருந்தி போகும்? உங்கள் சருமத்தை போலவே உங்கள் கூந்தலுக்கும் தனிப்பட்ட அக்கறையும் கவனிப்பும் தேவையாக இருக்கிறது. வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்து தேவை, கடினமான கூந்தலுக்கு சற்று வழவழப்பு தன்மை தேவை. இருக்கும் கூந்தலை பராமரிக்க மட்டுமே என்றாலும் கூட அதற்கும் அக்கறையும் கவனிப்பும் தேவை.


மார்க்கெட்டில் இத்தனை விதமான ஷாம்பூக்கள் விற்கையில் எனக்கான ஷாம்பூவை நான் எப்படி கண்டுபிடிப்பது என்ற உங்கள் கவலை எங்களுக்கு புரிகிறது. உங்களுக்கு அவசியமான முக்கிய 10 வகை ஷாம்பூக்களை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். படித்து பயன் பெறுங்கள்.சுருட்டை முடிக்கான ஷாம்பூக்கள்சுருட்டை முடி உள்ளவர்களின் அனைத்து பிரச்னைகளும் நாங்கள் அறிவோம். பனி காலத்தில் சுருட்டை முடிகள் அனைத்தும் கரடுமுரடாக தடிமனாக மாறி உங்களை பாடாய்படுத்தும். அதனை மீண்டும் பழையபடி கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அவர்களுக்காக


OGX மொரோக்கான் ஆர்கன் ஆயில் ஷாம்பு


இந்த ஷாம்பூ மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கிறது. இதில் பேரபின் மற்றும் சல்பேட் ஆகியவை இல்லை. ஆகவே உங்கள் முடி இயற்கையான பளபளப்பை பெறும். அடிக்கடி கூந்தலின் நிறத்தை மாற்றுபவர்கள் மற்றும் அதன் ஸ்டைலை மாற்றுபர்களும் இந்த ஷாம்பூவை பயன் படுத்தலாம். காரணம் இது முடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. உங்கள் கூந்தல் சில்கியாகவும் பளபளப்பாகவும் காணப்படும். நல்ல பலன்களை பெற இதனுடன் OGX மொரோக்கான் ஆர்கன் ஆயில் கண்டிஷனரையும் பயன்படுத்துங்கள்.


இதன் விலை 723


இதனை இங்கே வாங்கவும்


மகடாமியா நேச்சுரல் ஆயில் ரெஜுவனேட்டிங் ஷாம்பூ


இந்த வகை ஷாம்பூவில் உங்கள் சுருட்டை முடியை பாதுகாக்க இரண்டு அற்புத பொருட்கள் ஒன்றிணைந்திருக்கும். (மகாடமியா ஆயில் மற்றும் ஆர்கன் ஆயில்). இது உங்கள் முடியை அடர்த்தியாக காட்டும். அதிக ஈரபதத்துடன் உங்கள் கூந்தல் பவுன்ஸியாக காட்டும்.


இதன் விலை 1400


இதனை இங்கே வாங்கவும்
நீளமான கூந்தலுக்கு பொருத்தமான ஷாம்பூக்கள்.


நீளமான கூந்தலை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். அதன் பளபளப்பையும் நேரான தன்மையையும் அப்படியே பராமரிக்க வேண்டும். முக்கியமாக மாசு நிறைந்த வெளி உலகில் உங்கள் முடி கெட்டு போகாமல் இருக்கவும் வறண்டு செதில் செதிலாக உடையாமல் இருக்கவும் அதற்கேற்ற ஷாம்பூவை பயன்படுத்துவது அவசியம்.


லோரியல் ப்ரொபெஷனல் அப்சல்யுட் ரிப்பேர் லிபிடியம் ஷாம்பூ


மிக மோசமாக சிதிலமடைந்த கூந்தலுக்காகவே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டது இந்த ஷாம்பூ. இதனை உபயோகித்தால் பளபளப்பான சில்க்கியான மென்மையான அற்புதமான கூந்தலை நீங்கள் பெறமுடியும். இந்த ஷாம்பூவில் உள்ள லிப்பிட் எனும் பொருள் உங்கள் கூந்தலில் இயற்கையாக உள்ள சத்துக்களை காப்பாற்றி உங்கள் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. நீண்ட நாள் கூந்தலின் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கிறது.


இதன் விலை 635


இதனை இங்கே வாங்கவும்.


சன்சில்க் பர்பெக்ட் ஸ்ட்ரெயிட் லாக் ஷாம்பூ


அனைத்து பெண்களும் வாங்க கூடிய விலையில் இந்த ஷாம்பூ விற்கப்படுகிறது. இது உங்கள் முடியின் ஸ்ட்ரெய்ட்நெஸ்சை லாக் செய்து உங்கள் கூந்தலை முன்பைவிட பளபளப்பாகவும் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் பாதுகாக்கிறது.


இதன் விலை 206


இதனை இங்கே வாங்கவும்.மெலிதான கூந்தலுக்கான பெஸ்ட் ஷாம்பூக்கள்


அடர்த்தியற்ற கூந்தல் உடையவர்களின் தலைவலியே அதனை எப்படி அடர்த்தியாக்குவது என்பதுதான். நீங்கள் பின்னல் போட்டால்கூட ஆயிரம் ஜடை பின்னலைதான் போடவேண்டி வரும். அப்போதுதான் உங்கள் முடி அடர்த்தியாக தெரியும். இனிமேல் கவலை வேண்டாம். இவ்வகை முடிக்கான ஷாம்பூக்கள் இதோ.


பிப்ளண்ட் புல் ஆன் வால்யூம் ஷாம்பூ


உங்கள் முடி அடர்த்தியில்லாமல் வெகு சீக்கிரமே ஒல்லியாகியது போல தோற்றம் அளிக்கிறது. அப்படியென்றால் நீங்கள் இந்த வகை ஷாம்பூவை பயன்படுத்துங்கள். உங்கள் முடிக்கு அடர்த்தியான அமைப்பை கொடுத்து அதனை தக்க வைக்கவும் செய்கிறது. இதனோடு ஒரு கண்டிஷனர் ,ஆற்றும் லீவ் இந்த ஸ்பிரே வும் கூட வருவது இதன் சிறப்பம்சமாகும்.


இதன் விலை 675


இதனை இங்கே வாங்கவும்.


ட்ரெஸ்மி பியூட்டி புல் வால்யூம் ஷாம்பூ


இந்தியாவில் அனைவரும் விரும்பி பயன்படுத்தும் ஷாம்பூவாக இது இருக்கிறது. இது முதலை உங்கள் கூந்தலை கண்டிஷன் செய்கிறது அதன் பின் சுத்தம் செய்வதால் உங்கள் கூந்தலின் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு அதன் அடர்த்தி அதிகமாக காட்டுகிறது.இது கூந்தலை பவுன்ஸியாக காட்டுவதோடு வறண்ட முடியை ஈரப்பதத்தோடு பாதுகாக்கிறது.


இதன் விலை 460


இங்கே வாங்கவும்


 
முடி கொட்டும் பிரச்னைக்கு தீர்வு தரும் ஷாம்பூக்கள்


முடி கொட்டுவது என்பது இன்று அனைத்து பெண்களும் சந்திக்கும் ஒரு பிரச்னை. அது உங்கள் பகுதியில் உள்ள வானிலையை பொறுத்தோ உங்கள் பகுதியில் உபயோகிக்கும் தண்ணீரின் தரத்தையோ மட்டும் பொருத்தது. இதனால் உங்கள் உடைந்த முடிகளை சீப்பில் வைத்துக் கொண்டு நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது. மிக சரியான ஷாம்பூ நிச்சயம் இதற்கொரு நல்ல தீர்வை கொடுக்கும்ஹிமாலயாஸ் ஹெர்பல்ஸ் டெய்லி ப்ரோட்டீன் ஷாம்பூ ஜென்டலி டெய்லி கேர்


ஹிமாலயாஸ் நிறுவனம் இந்தியர்களின் நம்பகத்தன்மை பெற்ற ஒரு நிறுவனம் இதில் பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்கள் சருமத்தையும் முடியையும் பாதுகாக்கிறது. இதில் உள்ள ஊட்ட சத்துக்கள் முடியின் வேர்க்கால்கள் வரை பரவி முடியை பாதுகாக்கிறது.அதன் ஆரோக்கியத்தையும் வலிமையையும் பராமரிக்கிறது. இதனால்தான் இந்த ஷாம்பூ பயன்படுத்துவதால் முடி உதிர்வு ஏற்படுவதில்லை. மேலும் இது இயற்கையான முறையில் கூந்தலை சுத்தம் செய்கிறது. தினசரி கூந்தலை ஷாம்பூ பண்ண விரும்புவர்களுக்கான முக்கிய சாய்ஸ் இந்த ஹிமாலயா ஷாம்பூவாகத்தான் இருக்க முடியும்.


இதன் விலை 360


இதனை இங்கே வாங்கவும்பான்டீன் ப்ரோ வி ஹேர்பால் கண்ட்ரோல் ஷாம்பூ


ந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஷாம்பூக்களில் இந்த ஷாம்பூவும் ஒன்றாகும். இதில் உள்ள கெரட்டின் தொழில்நுட்பம் காரணமாக முடி உதிர்வு கட்டுப்படுத்தப்பட்டு கூந்தலின் பளபளப்பு மேம்படுகிறது. இது உடனடியாக சில நாட்களிலேயே பலன் தருவதால் இது சிறப்பானதாகும்.


இதன் விலை 395


இதனை இங்கே வாங்கவும்.டவ் ஹேர்பால் ரெஸ்க்யூ ஷாம்பூ


அனைவரும் வாங்கும் வண்ணம் விற்கப்படும் அடுத்த ஷாம்பூ நிறுவனம் டவ் தான். இதன் பலனை உடனுக்குடன் கண்கூடாக பார்க்கமுடியும் என்பது இதன் மற்றொரு சிறப்பு. இது உங்கள் கூந்தலின் பளபளப்பை பாதுகாத்து அதன் வலிமையையும் தக்க வைக்கிறது. இதன் மூலம் நீங்கள் முடி உதிரும் ப்ரச்னைக்கு பை பை சொல்லி விடலாம்.


இதன் விலை 450


இதனை இங்கே வாங்கவும்பல்வேறு விதமான உச்சந்தலைகளுக்கேற்ற சில ஷாம்பூக்கள்


கூந்தலில் மட்டும் பல்வேறு வகை என்றில்லை நமது தலையில் கூட பல்வேறு விதம் உண்டு. வறண்ட தலை முதல் எண்ணெய்ப்பசை தலை வரை பல்வேறு வகைகள் உண்டு. இதனையும் அறிந்து அதற்கேற்ப நீங்கள் ஷாம்பூ பயன்படுத்தினால் பலன் இரட்டிப்பாகும்.லோரியல் டோடல் ரிப்பேர் 5 ஷாம்பூ


உங்கள் முடி எப்போதும் பிரிஸ்ஸ்சியாகவும் அடி முதல் நுனி வரை வறண்டும் காணப்பட்டால் நிச்சயம் உங்கள் உச்சந்தலை வறண்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் முடி உடைவது மட்டுமல்லாமல் மண்டையோட்டில் செதில் செதிலாக பொடுகு ஏற்பட ஆரம்பிக்கிறது. இந்த ஷாம்பூ உங்கள் ஒட்டு மொத்த பிரச்னைகளை சரி செய்து உங்கள் கூந்தலை காப்பாற்றுகிறது. வறண்ட முடி, வலிமையற்ற முடி, பொலிவற்ற முடி, கடினமான முடி , போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த ஷாம்பூ தீர்வளிக்கிறது.


இதன் விலை 55


இதனை இங்கே வாங்கவும்.


ரென் பர்ட்டரர் மெலாலியூக்கா ஆன்டி டாண்ட்ரப் ஷாம்பூ - எண்ணெய்ப்பசை ஸ்கேல்ப்க்கானது.


உங்கள் தலையில் ஏற்படும் எண்ணெய்ப்பசை காரணமாக நீங்கள் ஒருநாள் கூட தலையை ஷாம்பூ செய்யாமல் வெளியில் போக முடியாது என்னும் நிர்பந்தத்தில் இருப்பீர்கள். உங்கள் முடிகள் எல்லாம் எண்ணெய் சட்டிக்குள் தலையை விட்டு வெளியே வந்தது போல ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டு இருக்கும்.
ஏனெனில் உங்கள் தலையில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அளவுக்கதிகமாக சுரப்பதால்தான் இந்த நிலைமை ஏற்படுகிறது. அதற்காக மேற்கண்ட ஷாம்பூவை பயன்படுத்தி பாருங்கள். இதில் உள்ள குர்பிக்கா எனும் சிறப்பு மூலப்பொருள் தலையில் எண்ணெய் சுரப்பிகள் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதுவும் பேரபின் அற்ற ஷாம்பூ என்பது கூடுதல் சிறப்பு.


இதன் விலை 1600


இதனை இங்கே வாங்கவும்.


 
ரசாயனமுறையில் பராமரிக்கப்படும் கூந்தலுக்கான சிறந்த ஷாம்பூக்கள்


உங்கள் முடி ரசாயன முறைப்படி சிகிச்சை செய்யப்பட்டது என்றால் சிகிச்சைக்கு பின்னும் முடியின் தன்மையை தொடர வேண்டும் என்பது முக்கியம். சாதாரண ஷாம்பூக்கள் இந்த சிகிச்சையின் தன்மையை மக்கி போக செய்து விடும். ஆகவே அதற்கென தனி ஷாம்பூ அவசியம்.


வெல்லா ப்ரொபெஷனல்ஸ் பிரில்லியன்ஸ் ஷாம்பூ பார் கலர்ட் ஹேர்


உங்கள் கூந்தலுக்கு கலர் செய்திருந்தீர்கள் என்றால் அதன் நிறத்தை பாதுகாக்க நீங்கள் மேற்கண்ட ஷாம்பூவை உபயோகிக்கலாம். மைக்ரோ லைட் கிரிஸ்டல் தொழில்நுட்பத்துடன் வந்துள்ள இந்த ஷாம்பு நிறத்தை தக்க வைத்து முடியை காக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் உங்கள் கூந்தலை வறண்டு போக விடாமல் காப்பாற்றி பளபளப்பை தக்க வைக்கிறது.


இதன் விலை 575


இதனை இங்கே வாங்கவும்.லோரியல் ப்ரொபசஷனல் எக்ஸ்டென்சோ கேர் ப்ரோ-கேரட்டின் ஷாம்பூ


ரசாயன முறைப்படி பராமரிக்கப்படும் முடிக்கான சிறப்பு ஷாம்பூவாக இது பார்க்கப்படுகிறது. இதில் உள்ள கெரட்டின் அமினோ அமிலங்களோடு சேர்ந்து முடியை சுத்தமாகவும் பளபளப்போடும் பார்த்துக் கொள்கிறது. உங்கள் கூந்தல் பவுன்ஸியாக இருக்குமாறும் பார்த்துக் கொள்கிறது.


இதன் விலை 530


இதனை இங்கே வாங்கவும்.
சிறந்த ஆர்கானிக் ஷாம்பூக்கள்கூந்தலை இயற்கை முறையில் பராமரிக்க விரும்புவோருக்கான ஒரே சாய்ஸாக இந்த ஆர்கானிக் வகை ஷாம்பூக்கள் இருக்கிறது. இயற்கையான மூலிகைகள் மற்றும் பூக்கள் பழங்கள் மூலம் இவை தயாரிக்கப்படுகின்றன.


வாவ் ஆர்கனிக் ஹேர் ஸ்ட்ரென்த்தனிங் ஷாம்பூ பிரீ பேரபின் சல்பேட்


அனைவரும் வாங்கும் வண்ணம் இதன் விலை இருக்கிறது. இதில் உள்ள ரோஸ்மேரி ஆயில், டீ ட்ரீ ஆயில் பாதாம் ஆயில் சோயா ஆயில் ஆர்கன் ஆயில் போன்றவை முடிக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. இது கூந்தலை வலிமையாக்கி அதன் இயற்கை பளபளப்பை பாதுகாக்கிறது.


இதன் விலை 499


இதனை இங்கே வாங்கவும்.


ஹேர்மேக் சல்பேட் பிரீ ஷாம்பூ


உங்கள் முடியை ரசாயனமுறைப்படி பராமரித்தாலும் சல்பேட் பிரீ ஷாம்போவை உபயோகிக்க நீங்கள் விரும்பினால் நீங்கள் மேற்கண்ட ஷாம்பூவை தேர்ந்தெடுங்கள். இது உங்கள் கூந்தலை மென்மையாகவும் மிருதுவாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது. இது அனைத்துவித கூந்தல் வகைகளுக்கும் ஏற்ற ஒரே ஷாம்பூ. மேலும் இதில் பேரபின் மற்றும் சல்பேட் இல்லை.


இதன் விலை 630


இதனை இங்கே வாங்கவும்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.