தமிழ் சினிமாவில் முதல் 20 இடத்தை பிடித்த திரைப்படங்கள்(Movies)

தமிழ் சினிமாவில் முதல் 20 இடத்தை பிடித்த திரைப்படங்கள்(Movies)

2018 ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு  திரைப்படங்கள்(Movies) வந்து வசூலில் பட்டை கிளப்பி சென்ற போதிலும் சில படங்கள் மட்டும் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்தன. அந்த வகையில் 2018 ம் ஆண்டு வந்த திரைப்படங்கள்(Movies) சில சாதாரண நடிகர்கள் நடித்திருந்தாலும் கதைப்படி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 


1. பரியேறும் பெருமாள்
கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்தின் அடுக்குகள் ஏறி மிதிக்க நினைக்கும். `உனக்கெல்லாம் இது ஒரு கேடா?' என ஆயிரமாயிரம் கண்கள் கேள்விகளோடு துளைக்கும். தலைமுறைகளாகத் தொடரும் வறட்டு ஆணவம் தாமிரபரணியின் தண்ணீரில் துரத்தி மூழ்கடிக்கத் துடிக்கும். இவை அனைத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்டு நிமிர்ந்து நின்றால்... அவன்தான் `பரியேறும் பெருமாள்.'


2. நடிகையர் திலகம்
`நடிகையர் திலகம்' சாவித்திரி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அசத்தலாக தெலுங்கில் மகாநடி'யாகவும், தமிழில் நடிகையர் திலகம் எனவும் பதிவு செய்திருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் தென்னிந்திய சினிமாவின் ஆளுமையாகக் கருதப்படும் சாவித்திரியாக, அச்சு அசலாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.


3. கே.ஜி.எப் KGF – Kolar Gold Fields
கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள பீரியட் கேங்ஸ்டார் படம் இந்த ‘கே.ஜி.எப்’ (KGF – Kolar Gold Fields)


4. கானா
கானா திரைப்படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ஏறக்குறைய 20 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது.


5. சீதக்காதி
'அய்யா ஆதிமூலம்' என்ற பழம்பெரும் மேடை நாடகக் கலைஞர் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 50 வருடங்களுக்கும் மேலாக மேடை நாடகங்களில் நடித்து வரும் அய்யா, ஒருநாள் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இறந்துவிடுகிறார். இவரை பற்றிய கதைதான் இத்திரைப்படம்.


6. காற்றின் மொழி
`எதற்கும் சரிப்பட்டு வரமாட்ட’ என்று அப்பா, அக்காக்களால் ஏளனமாகப் பேசப்படும், ‘ப்ளஸ் டூ ஃபெயில்’ ஜோதிகாவுக்கு, யதார்த்தமாகக் கிடைக்கும் ஆர்.ஜே வேலை உற்சாகம் அளிக்கிறது. அவர் காற்றில் பேசும் மொழியே அவருக்குச் சில பிரச்னைகளைக் கொடுக்க அவற்றின் விளைவுகளை அழுத்தமாக, அழகாகப் பேசியிருக்கும் படம் ‘காற்றின் மொழி.’


7. வட சென்னை
தன்னை கை தூக்கி விட்டதோடு ஊருக்கும் நல்லது செய்யும் நல்ல தாதாவை கொன்ற அவரது நம்பிக்கைத் துரோகி கையாட்களை கொல்லும் இளம் தாதாவே இப்படக்கரு


8. ராட்சசன்
பள்ளி மாணவிகளை குறிவைத்து கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடிப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதையே ராட்சசன் திரைப்படம்.


9. 96
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனித காதல் அல்ல ... கமலின் "குணா " பட டயலாக்கே இப்படக்கரு எனலாம்.


10. செக்கச் சிவந்த வானம்
தந்தையின் இடத்தை பிடிக்க மகன்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை இரத்தமும் சதையுமாக சொல்கிறது செக்கச் சிவந்த வானம்.


11. அண்ணனுக்கு ஜே
அரசியலில் இருந்தால்தான் நமக்குக் கெத்து என முடிவு எடுக்கும் ஹீரோ, அதற்கேற்ப காய் நகர்த்துகிறார். அந்த ஆட்டத்தில் எதிரிகளை வெட்டினாரா இல்லை வெட்டுப்பட்டுச் சாகிறாரா என்பதை `அண்ணனுக்கு ஜே’வில் ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்கள்.


12. இமைக்கா நொடிகள்
சிபிஐ அதிகாரிக்கும் சைகோ கொலைக்காரனுக்கும் இடையே நடக்கும் மோதலே 'இமைக்கா நொடிகள்'.


13. மேற்கு தொடர்ச்சி மலை
மலைவாழ் மக்களின் வாழ்வியலை சினிமாதனம் இன்றி நேர்மையாக பதிவு செய்திருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம்.


14.கோலமாவு கோகிலா
அம்மாவை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற., தன் உடம்பை விற்க, பிறருக்கு விருந்தாக்க பிடிக்காது., பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கடத்தும் அழகிய இளம் பெண்ணே இப்படக்கரு.


15. ஜுங்கா
பூர்வீகச் சொத்தை மீட்க பொள்ளாச்சி டு பாரிஸ் போகும் ஒரு ‘கஞ்ச’ டானின் அஞ்சாப் பயணமே ஜுங்கா.


16. காலா
மும்பை-தாராவியில் நல்மாற்றத்தை கொண்டு வர நினைக்கும் தாதாவே "காலா " படக்கரு.


17. இரவுக்கு ஆயிரம் கண்கள்
சிட்டியில் உள்ள ஒரு பங்களாவில் ஒர் மழை இரவில் மர்மமான முறையில் நடக்கும் கொலை பற்றி விவரிக்கிறது இப்படம்.


18. சவரக்கத்தி
கொலைக்கத்திக்கும் சவரக்கத்திக்கும் இடையிலான வாழ்வா சாவா துரத்தலே ‘சவரக்கத்தி’!


19. தானா சேர்ந்த கூட்டம்
எவ்வளவு உயரம்ங்கிறது முக்கியமில்லை எவ்வளவு உயர்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்! தானா சேர்ந்த கூட்டம்.


20. அடங்கமறு
டெக்னாலஜியை கொண்டு எதிரகளை கதறவிடுவது, திமிறி எழுந்து சாவல்விட்டு திருப்பி அடிப்பது, காதலியுடன் கில்மா செய்வது, குடும்பத்துடன் பாசம் காட்டுவது என தனிஒருவனாக படத்தை சுமக்கிறார் ஜெயம் ரவி.


இவையே 2018 ம் ஆண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo