மார்க்கெட்டை தக்க வைக்க எடையைக் குறைத்த பிரபலங்கள் !

மார்க்கெட்டை தக்க வைக்க எடையைக் குறைத்த பிரபலங்கள் !

 30 வயதை தாண்டி உடல் பருமன் அதிகமானால் அவர் சிறப்பான நடிகை என்று கூறப்பட்டு வந்தது அந்தக் காலம்.காரணம் நடிக்க வந்த சில வருடங்களில் இரண்டு மூன்று படங்கள் வெற்றியடைந்தாலே தங்கள் உடல் நலம் பற்றிய கவலையின்றி சட்டென நடிகைகள் வெயிட் போட்டு விடுவார்கள்.


அப்போது நடிப்பதற்கு யாரும் போட்டிகள் இல்லாத காரணத்தால் நடிகரோ நடிகையோ எப்படி இருந்தாலும் சரி நல்ல கதைக்கு நடித்து கொடுத்தால் போதுமானது என்று திரையுலகம் இருந்தது.


ஆனால் இப்போதோ பல்வேறு போட்டிகளும் குறுக்கு வழிகளும் உள்ள இடத்தில்சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரண விஷயம் இல்லை.


அதனால் இப்போதைய ஹீரோயின்கள் தங்கள் இளமையைத் தக்க வைத்துக் கொள்ள பல ரிஸ்க்குகள் எடுக்கிறார்கள். குறைந்த பட்சம் ஒரு தசாப்தமாவது தன்னை ஒரே மாதிரி வைத்துக் கொள்ள நடிகைகள் முயல்கின்றனர்.


உடல் எடையை குறைத்து (slim) அதனைக் கட்டுக்குள் வைப்பது சாதாரண விஷயம் இல்லை. அதில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர். அந்த ஒரு சிலரின் பட்டியல் உங்களுக்காக.


கரீனா கபூர்


நடிகைகளின் உடல் எடை குறைப்பிற்கு ஆரம்ப சுழி போட்ட நடிகை யார் என்றால் கரீனா கபூர்தான். இவரது ஸிரோ டயட் அனைவரையும் கவர்ந்தது. அத்தனை ஒல்லியாக அவர் மாறியிருந்தார். இவரது உடல் எடைக்கு குறைப்பிற்கு பின்தான் பல்வேறு நடிகைகள் தங்கள் உடல் எடை பற்றி கவனிக்க ஆரம்பித்தனர். 


  


ஐஸ்வர்யா ராய்


தன் அழகினாலும் அன்பினாலும் அனைவரின் உள்ளங்களை கவர்ந்த உலக அழகி ஐஸ்வர்யா ராய் திருமணம் முடிந்த பின் பிரசவத்திற்கு பின்பு உடல் எடை கூடினார். அதனை அனைவரும் கிண்டல் செய்தனர். அதன் பின்னர் தனது ரி என்ட்ரி படத்தின் மூலம் ஸ்லிம் ஆகி தன்னை கேலி செய்தவர்களின் வாயை அடைத்தார். 


   


நயன்தாரா


நயன்தாராவின் ஆரம்ப கால படங்களில் சற்று பூசின உடல்வாகுடன் தான் காணப்பட்டார். அதனாலேயே அவருக்கு ரசிகர்கள் அதிகமானது ஒரு காலம். அதன் பின் பில்லா போன்ற படங்களில் தைரியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த பின் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிமான அழகிற்கு வந்ததும் அதற்கென மேலும் ரசிகர் கூட்டம் சேர்ந்தது எதிர்பார்த்த ஆச்சர்யம்தான்.        ஆலியா பட்


நடிகை ஆலியா பட் மொழிகள் தாண்டி பல்வேறு இதயங்களை தனது அழகினாலும் நடிப்பினாலும் கொள்ளை கொண்டவர். இவர் ஆரம்பத்தில் சற்று உடல் எடை அதிகமாக இருப்பது போலத்தான் காணப்பட்டார். ஆனாலும் தனது வயதிற்கும் எடைக்கும் வித்யாசம் இருப்பதை உணர்ந்த ஆலியா சட்டென உடல் எடையைக் குறைத்து தனது கதாநாயகி வாழ்க்கையை தக்க வைத்துக் கொண்டார்.     ராகுல் ப்ரீத்தி சிங்


பெரிய அளவு பார்க்கும்படியாக அதிக எடை கொண்டவரல்ல ராகுல் ப்ரீத்தி சிங். ஆனாலும் சில திரைப்படங்களுக்கு பின்னர் இவரும் உடற்பயிற்சிகள் செய்து முன்னை விடவும் ஒல்லி உடம்பிற்கு சொந்தமானார்.             ஹன்ஷிகா


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை ஹன்ஷிகா தனது கொழு கொழு உடல்வாகினாலும் குழந்தைத்தனமான முகபாவங்களாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். சின்ன குஷ்பூ என்று பெயரும் எடுத்தார். ஆனால் ஆரோக்கியத்தை மனதில் கொண்டோ என்னவோ ஹன்ஷிகா சில படங்கள் நடித்த பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம் அழகியானார்.               


weit %281%29  


காஜல் அகர்வால்


இவரின் ஆரம்பகால படங்களில் சற்று பூசிய உடைவாகு இவருக்கு இருந்தது. இருப்பினும் கதாநாயகி வாழ்விற்கு தனது உடல் எடையை அதிகரிக்காவண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று இவர் ஸ்லிம்மாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்.சோனாக்ஷி சின்ஹா


இவருக்கு கொஞ்சம் அதிகமான உடல் எடை இருந்தது. அதன்பின் பாலிவுட்டில் தாக்குப்பிடிக்க நிச்சயம் தனது எடை இப்படி இருக்க கூடாது என்று முடிவு செய்த சோனாக்ஷி வேகமாக உடல் எடை குறைப்பு பயிற்சிகளில் இறங்கி ஹாட் பியூட்டியாக மாறி விட்டார்.     


            


பரினீத்தி சோப்ரா


பாலிவுட்டில் முன்னேறி வரும் இளம் நடிகைகளில் ஐவரும் ஒருவர். தனது அதிக உடல் எடையோடு அழகான பொம்மை போல நடித்து வந்த இவர் பாலிவுட்டில் அனைவரும் எடையை குறைப்பதை கண்டு தானும் கொஞ்சம் உடல் எடையை தியாகம் செய்தார். இப்போதோ தனது செக்சி லுக் மூலம் ரசிகர்களை கிறங்கடிக்கும் அழகை பெறும் வகையில் உடல்வடிவத்தில் மாற்றம் கொண்டுவந்து விட்டார்.                       


  


உடல் எடை குறைப்பு என்பது நடிகைகளுக்கு மட்டும்தானா.. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க நிச்சயம் நமது பிஎம்ஐ சரியான விகிதத்தில் இருக்குமாறு கவனித்துக் கொள்வது நல்லது.


 


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


 ---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.