அவர் உங்களை உண்மையாகவே நேசிக்கிறார் ஆனால் அதை சொல்வதில்லை என்பதிற்கான அறிகுறிகள்

அவர் உங்களை உண்மையாகவே நேசிக்கிறார் ஆனால் அதை சொல்வதில்லை என்பதிற்கான  அறிகுறிகள்


நீங்கள் ஒருத்தரை உண்மையில் மிக ஆழமாக நேசிக்கிறீர்களா? ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லையா? அதிலும் மற்ற ஜோடிகள் ஒரு எளிமையான மற்றும் பாசமுள்ள  பந்தத்திற்கு எப்படி அவர்களுடைய பிரியமானவர்களை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று ஒரே குழப்பமாக இருக்கிறதா ?


signs he loves u -3
உண்மையில், சிலர் தன்  மனதில் இருக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள் மற்றும் சிலர் இடியே  விழுந்தாலும் தன் மனதில் இருக்கும் அன்பை வாயால் சொல்வதில்லை !இந்நிலையில், அவர்களை எப்படி புரிந்துகொள்வது? கவலை வேண்டாம், குழப்பும் வேண்டாம்.இங்கு  நாங்கள் உங்களுக்கு சில விஷயங்களை தெளிவு படுத்துகிறோம் .சில மறைமுக அணுகுமுழத்தை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் . அதில்தான் உங்களுக்கு தேவையான பதில்கள் அடங்கி உள்ளது!நீங்கள் உங்களின் நேசத்தை கீழ் கூறி இருக்கும் அறிகுறிகளை (signs) வைத்து சந்தோஷமாக , நேரடியாக சொல்லலாம்!!!


அவர் உங்கள் அணைத்து சிந்தனைகளையும் காது கொடுத்து கேட்கிறார் -


இதல்லவா முக்கியமான பாயிண்ட்! ஒரு பெண் தன்னுடைய அணைத்து விஷயங்களையும் ஒரு ஆண்மகனிடம் பகிர்ந்து கொள்ள முன்வரும்போது அவர் அதை கேட்கிறார், அதற்கு பதில் அளிக்கிறார் என்றால் அவர் உண்மையில் உங்கள் மீது விருப்பம் காட்டுகிறார் என்று தான் அர்த்தம் !நீங்கள் சொல்லும் எல்லா பேச்சுகளையும் ஞாபகம் வைத்திருக்கிறார் -


சின்னதோ பெரியதோ! நீங்கள் கூறும் அணைத்து முக்கியமான மற்றும் அவசியமற்ற விஷயங்களும் அவர் கேட்பது மட்டுமில்லாமல்  நினைவில் கொள்வார். காரணம்? அவர் உங்களை உண்மையில் நேசிக்கிறார்!


signs he loves u -1சிரிப்பார் -


எவ்வளவு வேலை இருந்தாலும் சேரி, அதில் வரும் அசதி அல்லது ஸ்ட்ரெஸ் இருந்தாலும் சேரி, நீங்கள் பேசும்போது அல்லது உங்களை  பார்க்கும்போது அவர் நிம்மதி அடைவார். சிரிப்பார்!அதை நீங்கள் கண்டுகொள்ளலாம்! கவனித்து பாருங்களேன்!அவர் தன்னுடைய வாழ்க்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதுடன்  உங்களை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவார் -


எவர் ஒருத்தர் உங்களின் வழக்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறாரோ  மேலும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான தருணங்களை பகிர்ந்துகொள்கிறாரோ அவர் தான் உங்களுடையவர்! பாசம் இருக்கும் இடத்தில மட்டுமே இது வெளிவரும். இதுதான் மறைமுக செயல்கள் என்கிறோம்! 


தன்னுடைய பிஸி ஸ்செடுளிலும் (schedule) உங்களுக்கு அவர் நேரம் ஒதுக்குவார் -


நேரம்! நேரம்! நேரம்! மிக முக்கியமான ஒன்று! நாம் நம் பிரியாமானவர்களுக்காக தன வாழைக்காயில் இருந்து தரும் ஒரு விலை மதிப்பில்லா விஷயம். உங்களுக்கு கொடுக்கிறார்? நிம்மதியாக இருங்கள். அவரே சிறந்தவர்!


 signs he loves u -4


'நான்' என்பதை விட 'நாம்' என்பார் -


ஒற்றுமைதான் இங்கே முக்கிய அம்சம்! எல்லா  உரையாடல்களிலும் அவர் நாம் என்று கூறுகிறார் என்றால் அது உங்கள் மீது உள்ள அன்பினால் தான். மேலும் அவர் தன்  வாழ்க்கையில் ஒரு சிறப்பு அங்கமாக உங்களை பார்க்கிறார் என்று குறிப்பு. 


அவர் உங்களை ஸ்பெஷல் ஆக கவனிக்கிறார் -


அவர் மற்ற பெண்களிடம் மற்றும் உங்களிடமும் எப்படி நடந்து கொள்கிறார் என்று நீங்கல் கவனித்ததுண்டோ? இல்லையென்றால் இனி குறுப்பெடுங்கள் ! ஆம்! அவர் உங்களை மிக சிறப்பாக அணுகுகிறார் என்றால் அதுவே அன்பின் அடையாளம். 


மேலும் வாசிக்க - 11 ஆச்சரியமான விஷயங்கள் - ஆண்கள் பெண்களிடம் இருந்து முத்தமிடும்போது எதிர் பார்ப்பவை!


அவர் உங்களின் ஆலோசனைகளை மதிக்கிறார் -


அவர் தன்னோடைய மிக முக்கியமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு அதற்கான தீர்வும் உங்களிடம் கேட்கிறார் என்றால், அது உங்கள் மீது வைத்திருக்கும் அன்பே! உங்களது பதில் பொருத்தமாக இல்லாவிட்டாலும் அவர் உங்களின் கருத்தை கேட்கிறார்  என்றால் அவர் உங்களை நேசிக்கிறார் (loves) என்றுதான் அர்த்தம்!மேலும் அவர்  உங்களது கருத்தின் படி நடந்து அதற்கான முடிவு சாதகமாக அமையும்போது உங்களிடம் அதை மீண்டும் பகிர்ந்து உற்சாகம் அடைவார்.


signs he loves u -2
உங்களின் சந்தோஷமும் துக்கமும் அவரோடையுது போல் நினைப்பார் -


நீங்கள் உற்சாகமாய் இருக்கும்போது அவர் அதை ரசிப்பார் அதே சமயம் நீங்கள் ஏதேனும் ஓர் உவிஷயத்ரிக்கு வர்த்தப்பட்டால் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அதை சேரி செய்ய பார்ப்பார் உங்களின் சந்தோஷத்திற்காக!அவர் உங்களை முதலில் தொடர்பு கொள்வார் -


ஏதேனும் ஒரு விஷயம் அவரை தவிக்க வைக்கும் போது  அவர் முதலில் உங்களை அணுகுவார் அல்லது பகிர்ந்து கொள்வார். தனக்கு எவ்வளவோ தோழர்கள் இருந்தும் உங்களிடம் முதலில் வருவது உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டுகிறது.நீங்கள் நேசிப்பவர் மேல் சொல்லிருக்கும் விஷயங்களை  செயகிறார் என்றால் அவர் உங்கள் மீது உண்மையான அன்பை வைத்திருக்கிறார்! அவரை விட்டு விலகாதீர்.
இதற்க்கு மேல் என்ன எதிர்பார்கிறாய் பெண்ணே?!


படங்களின் ஆதாரங்கள் - pexels, you tube


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.