1௦ அறிகுறிகள் அவர் உங்களை நேசிக்கிறார் என்பதற்கு?

1௦ அறிகுறிகள் அவர் உங்களை நேசிக்கிறார் என்பதற்கு?

ஆண்கள் உங்களை நேசிக்கிறாரா இல்லையா என்பது போன்ற சந்தேகம் நம்மில் அநேகருக்கு இருக்கும். எதற்காக இந்த சந்தேகத்துடன் வாழவேண்டும் வாருங்கள் அறிந்து கொள்வோம் 1௦ அறிகுறிகள். உங்கள் சந்தேகத்திற்கு நாங்கள் உதவி செய்கிறோம்.


ஆண்கள் பெரும்பாலும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை. எனினும் அதற்காக அவர்களுக்கு எந்த உணர்வும் இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு தருணத்தில் பெண்கள், நாம் நேசிப்பதை(loves) போல அவரும் நம்மை நேசிக்கின்றாரா? என்று அச்சப்படுவீர்கள். இல்லை என்றால் அவர் எதார்த்தமானவரா இல்லை வேறு குணம் கொண்டவரா? என்பது போன்று  உங்கள் சந்தேகங்களை நாங்கள் தீர்த்துவைக்கின்றோம்.


இங்கு நீங்கள் நேசிப்பதை(loves) விட உங்களுடையவர் உங்களை அதிகம் நேசிக்கின்றார் என்பதற்க்கான 1௦ அறிகுறிகள்

உங்களை மரியாதையோடு நடத்துவார்
மரியாதை இல்லாத காதல் நீடிப்பதில்லை. அவர் உங்களை நேசிக்கின்றார், ஆனால் அதை விட அதிகமாக உங்களை மதிக்கின்றார்(காதல்). உங்கள் விருப்பங்களை ஒரு நல்ல மனிதராக உங்களை அவர் மதிக்கின்றார். அவர் உங்களை அவமானப்படுத்தவோ அல்லது தாழ்த்தி பேசவோ எந்த விதத்திலும் முயறசிப்பதில்லை. சொல்லப் போனால் நீங்கள் அவரை எப்படி பார்க்கின்றீர்களோ அவ்வாறே அவரும் உங்களை பார்க்கின்றார்.


உங்களுக்கான இடத்தை கொடுக்கிறார்
அவர் உங்களுடைய முக நூல் பக்கத்தையோ அல்லது வாட்ஸ்அப் அல்லது வேறு எதையோ கண்காணிப்பது இல்லை. உங்களுக்கான இடத்தை அவர் கொடுக்கிறார். அவர் துணை இன்றி நீங்கள் வெளியே செல்வதோ அல்லது உங்கள் அலுவலகத்திற்கு செல்வதோ என்று எதை பற்றியும் உங்களிடம் வாக்குவாதம் செய்வதில்லை.


சில தருணங்களில் உங்கள் மீது பொறாமை கொள்வது. அது சற்று சுவாரசியமானது!
வேறு யாராவது ஆண் உங்களை பார்ப்பதையோ அல்லது உங்களை இயல்பாக இடித்து விட்டு செல்வதையோ அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. சற்று பொறாமையாக உணருவார். அதை மறைக்க எண்ணினாலும் அவரால் அநேக நேரங்களில் முடியாது. உங்களுக்குத் தெரியும் அவர் உங்களை நம்புகிறார் என்று. இது ஒரு இயற்கையான உணர்வுதான். அது இனிமையாகவும் இருக்கும், அல்லவா?


உங்களுக்கு மிகவும் பிடித்தவரின் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக் கொள்வது! அவருக்குத் தெரியும் நீங்கள் அதிகம் நட்போடோ அல்லது அதிகம் நேசிக்கும் ஒரு ஆண் அல்லது பெண்ணை அவரும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று. குறிப்பாக அத்தகையவரின் பிறந்த நாளை ஞாபகம் வைத்துக் கொண்டு உங்களுடன் சேர்ந்து ஒரு நல்ல பரிசை தேர்ந்தெடுத்து உங்களுடன் சேர்ந்து அதை அவருக்கு தருவது. இதனால் நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.


உங்களது மாத விடாய் காலத்தில் உங்களுடன் சேர்ந்து தூங்குவதில் தயக்கம் காட்டுவதில்லை
அவருக்குத் தெரியும், அத்தகைய நேரங்களில் நீங்கள் அதிக மன அழுத்தம் மற்றும் சௌகரியமற்ற உடல் நிலையில் இருப்பீர்கள் என்று. அதனால் நீங்கள் சௌகரியமாக உணர அவர் அனைத்தையும் செய்வார். அவரிடம் எப்போதும் இனிமையான வார்த்தைகள் இருக்கும்.உங்களது விருப்பங்களையும் குறிக்கோளையும் ஆதரிப்பார்... அது சற்று விருப்பமற்றதாக இருந்தாலும்!
அவருக்கு உங்களுக்கு பிடித்ததை பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும், உங்களுக்காக அவர் எதையும் செய்வார். உங்கள் உத்தியோக தேர்வை குறைத்து மதிப்பிட மாட்டார், மாறாக உங்களை ஊக்குவிப்பார். இது அவர் உங்களை அதிகம் நேசிப்பதை காட்டும்.


நீங்கள் பேசுவதை கவனிப்பார்
நீங்கள் பேசுவதை உண்மையிலேயே கவனிப்பார். நீங்கள் பேசும் போது வலைதளத்தையோ அல்லது வாட்ஸ்அப்பையோ பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். உங்களுக்கு நேர்மையான பதிலை தருவார். மேலும் நேர்மையான கருத்துகளையும் உங்களுக்கு தேவைப்படும் போது தருவார். உங்களுக்காக வாழ்வது அவருக்கு மகிழ்ச்சி தரும்.


அவருடைய எதிர் காலத்தை பற்றி உங்களிடம் பேசுவார்... அதில் நீங்கள் ஒரு முக்கிய பங்கு வகிப்பீர்கள்.
அவர், ‘நாம்’ மற்றும் ‘நம்முடைய’ போன்ற வார்த்தைகளை அதிகம் பயன் படுத்துவார். ‘நான்’ மற்றும் ‘என்னுடைய’ போன்ற வார்த்தைகளை தவிர்ப்பார். இந்த சிறியலானாலும் பெரிய  அர்த்தங்களை கூறும்.


உங்களுக்கிடையே சண்டை ஏற்படும் போது பிரிவதை பற்றி பேச மாட்டார்
எந்த சூழ்நிலையிலும் பிரிவை பற்றி பேச மாட்டார். நீங்கள் சற்று கடுமையாக சண்டை போட்டாலும் கூட அவர் அதை சமாதானம் படுத்த என்னுவாறே தவிர உங்களை விட்டு பிரிந்து விட நினைக்க மாட்டார்.


அவ்வப் போது சொல்லவில்லை என்றாலும், அவர் உண்மையில் நான் உன்னை காதல்(loves) செய்கிறேன் என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்களை வெளிப்படுத்துகிறார்.


அவரை கட்டி அனைத்துக் கொள்ளுங்கள்! அவர் நிதர்சனமாக, உண்மையாக உங்களை அதிகம் நேசிக்கிறார்.