பெண்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முக்கிய காரணிகள்

பெண்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முக்கிய காரணிகள்

பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை(life partner) தேர்ந்தெடுக்கும் விடயத்தில் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தனது துணை பார்க்க(life partner) அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் வைத்து தேர்ந்தெடுத்து வி்ட முடியாது. வெரும் கலரும் அழகும் மட்டும் நம் வாழ்க்கை முழுவதும் நம் கூட வருவது கிடையாது. அதையும் தாண்டி அநேக விடயங்கள் உள்ளன. பார்த்ததும் வரும் காதல் நிறைய பேருக்கு கைகொடுத்திருப்பது உண்மை தான். ஆனால் அதில் அநேக தோல்விகளும் உண்டு.


பார்ப்பதற்கு அழகாக இருந்தால் மட்டும் போதாது. என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என்பதை கீழே தெரிவித்துள்ளோம். கவனமாக தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் நீங்களாகவே இருப்பது
நீங்கள் நீங்களாக இருக்கும் போதே, உங்களை விரும்பினால், அது வாழ்க்கை துணையின்(life partner) நல்ல பண்பாகும். ஏன் இதை கூறுகிறோம் என்றால், சில பேர் தன் வாழ்க்கை துணை நல்லதை செய்தால் மட்டுமே விரும்புவார்கள். தங்கள் வாழ்க்கை துணையின் மற்றொரு முகத்தை காண அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இதுவே நல்ல பண்புள்ள வாழ்க்கை துணையாக இருந்தால், நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலும் உங்களை விரும்புவதோடு, கஷ்ட காலங்களில் உங்களுக்கு தோள் கொடுப்பார்.

வார்த்தையை காப்பாற்றுவார்கள்
நல்ல வாழ்க்கை துணை(life partner) கஷ்ட காலங்களின் போது நழுவாமல் இருப்பதோடு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள், அது தொலைபேசியில் அழைப்பதாகட்டும் அல்லது வெளியில் அழைத்து செல்வதாகட்டும். ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்கான பொறுப்பான காரணத்தை தெரிவிப்பாரே தவிர, சிறு பிள்ளைத்தனமான காரணத்தைக் கூறமாட்டார்கள்

பக்கபலமாக இருத்தல்
ஒரு நல்ல வாழ்க்கை துணை, உங்களின் வளர்ச்சியை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். அந்த புரிதல் குடும்ப உறவை மீறி, உங்களின் அலுவலக முன்னேற்றத்திலும் கூட. மேலும் உங்களின் வெற்றியை அவருடைய சாதனையாக கருதுவார். அதுமட்டுமல்லாமல், உங்களின் வெற்றிக்கு உங்களை ஊக்கப்படுத்த முற்படுவார்.


காதலை காலநேரம் பார்க்காமல் காதலை வெளிகாட்டுவார்கள்
ஒரு நல்ல துணை என்பவர், கால நேரம் எதுவும் பார்க்காமல், தன் காதலை வெளிப்படுத்துவார்கள். மேலும் தன் காதலை உடனுக்குடன் வெளிப்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, இந்த உலகத்திலேயே மிகவும் அழகானவராக, வசீகரமுள்ளவராக, தனித்தன்மை உள்ளவராக உங்களை கருதுவார்கள். மற்ற அழகான நபரை கண்ட போதிலும், அவர் மனதில் நீங்கள் மட்டும் தான் குடி கொண்டிருப்பீர்கள்.

பொறுமையுள்ளவர்
ஒரு உண்மையுள்ள வாழ்க்கைத் துணை, எப்போதும் அவருடன் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யமாட்டார்கள். அப்படிப்பட்ட காரியங்களிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். மேலும் எப்போதும் வலுக்கட்டாயப்படுத்தாமல், உங்கள் மனதை கவர, அவர்களின் காதலை நீங்கள் புரிந்து கொள்ளுமாறு நடந்து கொள்வார்கள்.


தவறுகளை ஒப்புக் கொள்வார்கள்
ஒரு நல்ல வாழ்க்கைத் துணை என்பவர், தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டு அதற்காக உடனடியாக மன்னிப்பும் கோருவார்கள். இதுவே தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல், உங்கள் மீது பழியை போட நினைப்பவர் வாழ்க்கை துணையாக வந்தால், கண்டிப்பாக அவர் உங்களுக்கு ஏற்றவராக இருக்க முடியாது.

நேரம் ஒதுக்குபவர்
எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தாலும் சரி, ஒரு நல்ல வாழ்க்கை துணை உங்களுக்காக தன் நேரத்தை ஒதுக்க தவறமாட்டார்கள். "சாரி, வேலையில் பிசியாக இருந்து விட்டேன்" என்ற வாக்கியத்தை நல்ல வாழ்க்கை துணையிடம் இருந்து எப்போதும் கேட்கவே முடியாது. ஏனென்றால் அவர் உங்களுடன் இருந்தால், மலையை அசைக்கலாம், கண்டம் விட்டு கண்டம் தாண்டலாம், நாடு விட்டு நாடு பறக்கலாம் என்ற எண்ணங்கள் அவருக்கு ஏற்படும் என்பதால் தான்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo