சாரா அலிகானிற்குப் பிடித்த ஆடை வடிவமைப்பாளர்தான் நமக்கும் பிடித்த ஆடைவடிவமைப்பாளர்!

சாரா அலிகானிற்குப் பிடித்த ஆடை வடிவமைப்பாளர்தான் நமக்கும் பிடித்த ஆடைவடிவமைப்பாளர்!

சாரா அலிகானிற்குப் பிடித்த ஆடை வடிவமைப்பாளர்தான் நமக்கும் பிடித்த ஆடைவடிவமைப்பாளர்


 


புதிய அறிமுக நாயகியான சாரா அலிகான்தான் பாலிவுட்டின் தற்போதைய கனவுக் கன்னி.


 அவரது புதிய படமும் மற்றும் அதில் அவரது உடைகளும் அனைவரையும் கவர்ந்தன. கேதர்நாத் நாயகியான சாரா அலிகான் மற்றும் அவரது ஆடை வடிவமைப்பு பற்றி அறிந்துகொள்வோம்


சாரா (Sara) அலிகான் அணிந்திருக்கும் இந்த உடை பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை. அபு ஜானி சந்தீப் கோஸ்லா மற்றும் ரா மாங்கோ வகைகளைப் போன்றதுதான்.


ஆனால் நமக்கு பிடித்தமான பிரபல ஆடை வடிவமைப்பாளர் தன்யா கெளரி இதற்கென பிரத்யேகமான நிறத்தையும் டிசைனையும் தேடித் தேடி இந்த டிசைனர் உடையைக் கண்டடைந்து .இருப்பது போலத்  தோன்றுகிறது.


ஒரு முறை பார்த்து விட்டு அப்படியே போக முடியவில்லை. வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கிறது இந்த ஆடையில் சாராவின் அழகு.


 


 


இந்தியப் பாரம்பரியமும் நவீனமும் இணைந்த இந்த அடர் நீல ஆடையில் சாரா எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் அமைந்த கிராப் டாப் ஒன்றை அணிதிருக்கிறார். அதற்குப் பொருத்தமாக அதே நிறத்தில் இடுப்பு பகுதியை அதிகமாக மறைக்கும்படி நீல நிற கால்சட்டையை அணிந்திருக்கிறார்.


 


இந்த உடையின் டாப் ராஜஸ்தானி வகை எம்ப்ராய்டரி பூ  வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாராவின் கால்சட்டைகள் நாடிகல்  பாந்தினி பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை இன்னும் ஆழமாகப்  பார்த்தால் ஆடையின் டாப்பின் முடிவில்  மற்றும் கால்சட்டைகளின் ஆரம்பத்திலும்  செய்யப்பட்டுள்ள நேர்த்தியான எம்மிங் வேலைகள் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.


 


 பார்த்த உடன் இந்த உடை நம்மைக் கவர்ந்து விட்டது. யார் இதன் வடிவமைப்பாளர் என்று பார்க்க நீண்ட நேரம் காத்திருக்க முடியவில்லை.


ஒரு சிறிய தேடலுக்குப் பின் அவர் பெயர் நுபுர் கனோய்  என்பதும் இவர் கொல்கத்தாவை சேர்ந்த ஒரு ஆடை வடிவமைப்பாளர் என்பதும் தெரியவந்தது. இவர் 2006 ஆம் ஆண்டில் இருந்தே ஆடை வடிவமைப்பை செய்து வருகிறார். இவரது சிறப்பம்சமே பாரம்பரியத்தையும் நவீனத்தையும் கலந்து அதில் நுணுக்கமான ராஜஸ்தானிஎம்ப்ரோய்டரிக் கலைகளைப்  புகுத்துவதன் மூலம் இவர் வடிவமைக்கும் உடைகள் எல்லாம் அதிக அழகோடும் கண்கவரும் வகையில் இருக்கின்றன.


அதனால்தான் இவரது வடிவமைப்புகள் பல பிரபலங்களால்  பின் தொடரப்படுகின்றன.


அப்படி இவரைப் பின் தொடரும் பிரபலங்கள் யார் யார் என்றால்


 


பரினீதி சோப்ரா


நீல நிற பின்னணியில் பூ வேலைப்பாடுகள் கொண்ட இந்த உடை நுபுரின் வடிவமைப்பிற்கு ஒரு பெரும் உதாரணம். இதன் டிசைனில் மயங்கிய பரினீதி இதனை அணிந்திருக்கும் பாணியில் அவரது தன்னம்பிக்கை வெளிப்படுகிறது 


 ஷில்பா ஷெட்டி


பரினீதி அணிந்திருக்கும் அதே வகை ஆடையில் நீலத்திற்குப் பதிலாக மஞ்சளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி. அதில் இவர் எவ்வளவு கவர்ச்சியாக தெரிகிறார் என்று பாருங்கள்!


 


 


கஜோல்


எல்லாவற்றிலும் கஜோல் சற்று வித்யாசமானவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த உடை அமைந்துள்ளது. அடர் நீலத்தில் சில்வர் நிறக் கோடுகள் அமைந்திருப்பது இந்த உடையை அணிபவரை மேலும் ஸ்டைலிஷாகக் காட்டுகிறதுதானே!மற்றும் நேஹா துப்யா


நேஹா துப்யாவும் ஷில்பா ஷெட்டி தேர்ந்தெடுத்த அதே நிறத்தை தேர்ந்தேடுத்திருக்கிறார். உடன் அணியும் ஆடைகள் படியே அவரவர் தோற்றம் வித்தியாசப்படுகிறது.


  


அவரது தனித்துவம் வாய்ந்த இந்தியப் பாரம்பர்ய காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானி பூ வேலைப்பாடுகள் கொண்ட உடைகள் பூ வேலைப்பாடுகள் பதித்த ஆடைகள் அணிபவரை அதிக அழகாக்குகிறது என்றால் மிகை இல்லை. ஆகவே சாரா அலிகானின் மனத்தைக் கவர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஆன நுபுர் கனோய் நம் உள்ளத்தையும் கொள்ளை கொண்டார் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.