பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த்!

தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவிலும் பிரபலமானவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந். இவரது திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் உலக அளவில் ரசிகர்கள் அதனை ஒரு விழாவாகவே கொண்டாடுவார்கள்.


இன்று 12.12.2018 அவருக்குப் பிறந்த நாள். அவரது ரசிகர்கள் மட்டுமல்ல பல்வேறு அரசியல் தலைவர்களும் நடிகர்களும் நடிகர் ரஜினிகாந்திற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.வாழ்வில் பல சோதனையான கட்டங்களைத் தாண்டி இன்று உலகமே ரசிக்கும் அளவிற்கு மிகப் பெரிய பிரபலமான ரஜினி இறை நம்பிக்கைக்கு உதாரணம் ஆனவர்.


மன நிம்மதிக்காக அடிக்கடி இமயமலை செல்வது இவரது முக்கிய குணமாகவே மாறிவிட்டது.


தனது 69வது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் உங்களுக்காக.


2018 ஆம் வருடம் ரஜினிகாந்திற்கு ஒரு சிறப்பான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் வெளியானதும் இந்த 2018ம் வருடத்தில்தான்.


முதலில் காலா திரைப்படம் 27 ஏப்ரல் 2018 ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டு பின்னர் நடிகர் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடையே நடந்த பிரச்னையால் படம் ஜூன் மாதம் 7ம் தேதி வெளியானது. அதற்கிடையே 6ம் தேதியே மலேசியாவில் இவரது படம் வெளியிடப்பட்டது. 159 கோடி வசூல் சாதனையும் புரிந்தது.இந்தப் படத்தின் கதை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் வழக்குகள் போடப்பட்ட போதிலும் தடைகளைத் தகர்த்து ரசிகர்களின் ஆதரவால் வெற்றி வாகை சூடியது.


சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த எந்திரன் 2.0 படம் பல மொழிகளில் பிரம்மாண்ட வெற்றியை தன்வசப்படுத்தியிருப்பது குறிப்பிடத் தக்கது.


சென்னை பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் மிகப்ரெிய சாதனை படைத்தது ரஐினியின் 2.0.  பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் பாகுபலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது 2.0.


திரை உலகில் ஏழைகளுக்காகவும் அப்பாவிகளுக்காகவும் குரல் கொடுக்கும் நாயகனாக பல்வேறு படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் நிஜ வாழ்வில் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு பல நல்மாற்றங்கள் நடக்கும் என்று பொதுமக்கள் நம்புகின்றனர்.
பல கால காத்திருப்பிற்கு பின் தான் அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதற்குப்பின் ரஜினி எது செய்தாலும் அது அனைவராலும் கவனிக்கப்படுகிறது. விமர்சிக்கப்படுகிறது.


இன்று அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அவரது அடுத்த படமான "பேட்ட" திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர் "பேட்ட" படக்குழுவினர்.


ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தையும், விருந்தையும் கொடுத்த 2.0 தற்போது பேட்டையிலும் அதை நிறைவு செய்துள்ளது.


 

Subscribe to POPxoTV

திரை உலகில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தக் காத்திருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் பாப்எக்ஸ்சோ மிகுந்த மகிழ்ச்சியடைகிறது!


 


பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினி சார் !


                                                                                                                                     --


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.