ராதிகாவின் வாணி ராணி முடிந்தது என்று வருத்தமா? அவரை மீண்டும் ஒரு புதிய பிரம்மாண்டமான கதாபாத்திரத்தில் பாருங்கள் - சந்திரகுமாரி !

ராதிகாவின் வாணி ராணி முடிந்தது என்று வருத்தமா? அவரை மீண்டும் ஒரு புதிய பிரம்மாண்டமான கதாபாத்திரத்தில் பாருங்கள் - சந்திரகுமாரி !

சின்னத்திரை தொடர்களின் முடி சூடா ராணியாக விளங்கும் ராதிகா சரத்குமாரின் வாணி ராணி சீரியல்  கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த தொடர் கிட்டத்தட்ட 1743 எபிசோடுகளை வெற்றிகரமாக முடித்து இல்லத்தரசிகளின் உள்ளத்தை கவர்ந்து தற்போது முடிவடைந்து விட்டது.ராதிகா சரத்குமாரின் அடுத்த சரித்திர தொலைக்காட்சி தொடரான சந்திரகுமாரி தொடர் தற்போது பட்டி தொட்டியெங்கும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. காரணம் இது முழுக்க முழுக்க தமிழில் எடுக்கப்படும் வரலாற்று தொடர் மற்றும் இதில் ராதிகா 7 வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனை பற்றி பார்ப்பதற்கு முன்பு நாம் ராதிகாவின் சினிமா வாழ்க்கையை இங்கே காணலாம்.


Raadhika - chandrakumari - 1
ராதிகா சரத்குமார் :


சினிமா உலகம் பெரும்பாலும் ஆண் வெற்றியாளர்களையே அதிகம் சந்தித்துள்ளது. பெண்களில் குறிப்பிடத்தகுந்த சிலர் மட்டுமே சிறப்பானதொரு வெற்றியை பெற்றுள்ளனர். அதில் ராதிகா குறிப்பிடத்தகுந்த ஒருவர் என்றால் மிகையல்ல. கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் சினிமாவிலும், 17 ஆண்டுகாலம் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருபவர் ராதிகா.சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் போதே தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து நடிக்க தொடங்கினார். இது வேறு யாரும் நினைத்து கூட பார்க்க இயலாத துணிவான முடிவு. அவர் ராடான் மீடியா என்ற தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினார். தனது முதலாவது தொலைக்காட்சி தொடரில் பெரும் நஷ்டத்தை சந்தித்த அவர் 1999 ஆம் ஆண்டு சன் டிவியில் தனது சித்தி தொடரை ஒளிபரப்பினார். அதுதான் அவரது முதல் வெற்றி. பிராந்திய மொழிகளில் அதிக மக்களால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர் தயாரித்து நடித்த அனைத்து தொடர்களுமே மக்களிடம் பெருவாரியான வரவேற்பை பெற்றது. அண்ணாமலை,செல்வி,அரசி,செல்லமே மற்றும் வாணி ராணி ஆகியவை சிறப்பானதொரு வெற்றியை பெற்றது. வாணி ராணி தொடரில் அவர் இரு வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குடும்பப்பாங்கான தொடர்களை கொடுத்த அவருக்கு ஒரு சரித்திர தொடர் பண்ணவேண்டும் என்ற ஆசையினால் தற்போதைய சந்திர குமாரி தொடரை தயாரித்து நடிக்கிறார். அதனை பற்றியதொரு தொகுப்பு.தொலைக்காட்சி தொடர்களின் பாஹுபலி - சந்திரகுமாரி


suntelly celebraties fc Bn1gEl4novM
சந்திரகுமாரி தொடர் ஒரு சரித்திர மற்றும்  நிகழ்கால  நிகழ்வுகளை கொண்ட ஒரு தொடர் ஆகும். இதில் ராதிகா சரத்குமார் 7 வேடங்களில் நடிக்க இருப்பது பார்வையாளர்கள் இடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. சந்திர குமாரியின் ஏழு ஜென்மங்களை குறிக்கும் வகையில் அவர் ஏழு வேண்டங்களை ஏற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கதை பூர்வ ஜென்மம் மற்றும் நிகழ்கால நிகழ்வு ஆகிய இரு தருணங்களில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளது.ராதிகா அவருடன் அவரது சகோதரி நிரோஷா, உமா ரியாஸ் இவர்களுடன் மற்றும் நடிகை பானு (தாமிரபரணி ஹீரோயின்) ராதிகாவின் மகளாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்ஷா படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சரித்திர காட்சிகளை இயக்குகிறார்.சிஜே பாஸ்கர் நிகழ்கால காட்சிகளை படமாக்குகிறார். சிற்பி இந்த தொடருக்கு இசை அமைக்கிறார்.இது நான்கு மொழிகளில் தயாராகும் ஒரு பிரம்மாண்டமான தொடர் (serial). இது குறித்து ராதிகா கூறுகையில் , எனது சினிமா வாழ்க்கையில் இது ஒரு மைல்கல். என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு சவாலான வேடம் ஏற்றதில்லை. இதன் மூலம் எங்களின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ராடான் மீடியாவுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.தொடர் குறித்த தகவல்கள் :தொடரின் பெயர் : சந்திரகுமாரி


ஒளிபரப்பும் டிவி : சன் டிவி


ஒளிபரப்பும் நேரம் : இரவு 9:30 மணி


ஒளிபரப்பும் நாட்கள் : திங்கள் முதல் சனிக்கிழமை வரைஎன்ன இல்லத்தரசிகளே, உங்கள் மனதை கொள்ளை கொண்ட வாணி ராணி சென்ற பிறகு புதிய வேகத்தில் சந்திர குமாரி உங்களை ஆட்கொள்ள வந்து விட்டாள். பார்த்து மகிழுங்கள் !!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.