உங்கள் வார்டரோபில் (wardrobe) இருக்க வேண்டிய ​ அற்புதமான ட்ரெண்டிங் (trending) குர்தாக்கள்

உங்கள் வார்டரோபில் (wardrobe) இருக்க வேண்டிய ​ அற்புதமான ட்ரெண்டிங் (trending) குர்தாக்கள்

தமிழகம்  என்பது மிகப் பெரிய மாநிலம்  மட்டுமல்லாமல், கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பொக்கிஷமாக போற்றும் மாநிலம் . இதனை உலக மக்கள் தமிழர்களின் ஆடை முறையிலே எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும். அதிலிலும் பெண்களின் புடவை நாகரீக உடையாக இருந்தது. கல்லூரியில் பயிலும் பெண்கள்,  வேலைக்கு செல்லும் பெண்கள் புடவை பிரத்யோக உடையாக உடுத்தினார்கள் ஒரு காலத்தில்.


காலங்கள் மாறின . .  புதுமைகள் புகுந்தன.. ஆனால்,  பாரம்பர்யம் கலாச்சாரத்தை இந்தியர்கள் மறக்கவில்லை. அதுவே, பெண்களுக்கு மத்தியில் இன்று புடவைக்கு மாற்றமாக பெண்களின்  மனதில் இடம் பிடித்தது குர்தி (kurthi).


புடவைகும் குர்திக்கும் இடைப் பட்ட காலத்தில் சல்வார் கமீஸ் என்று சொல்லப்படும் சுடிதார் இருந்தது.  ஆனால், ஆணும் பெண்ணும் சரி சமம் என்றனர். " ஆண் மகனுக்கு ஒரு சட்டையும் பேண்ட்டும் இருந்தா போதும். பொம்பள புள்ளைக்கு செட் செட் வாங்கணும் " என்ற பேச்சை பரவலாக கேட்டிருப்போம்.  அதனோடு துணிக்கு ஒரு விலை, தையலுக்கு ஒரு தொகை என்று பட்ஜெட்யும் ஏகுரியது.


இந்த நேரத்தில் வந்தது தான் குர்தி.  சுடிதாரில் வரும் மேலாடை தான், இருந்தும் இதற்க்கு என்று ஒரு பிரத்தியோக வடிவம் உள்ளது.


பெண்களின் மனதில்  இடம் பிடித்த குர்தி, அவர்களின் வார்டரோபில்(wardrobe) எப்படி இடம் பிடிக்கனும் பார்ப்போம்.


குர்தி வகைகள் :


ஒன்பது வகையான குர்தி என்றும் கைவசம் இருந்தால் போதும். அனைத்து வகையான பண்டிகை விழாக்களை சமாளிக்கலாம்.


பிளைன் (plain) குர்தி :


20181224 084529


வெறும் கருப்பு/ வெள்ளை குர்தி  இருந்தால் போதும். வேலைக்கு செல்லும் பெண்கள்,  இல்லத்தரசிகளுக்கு, இது முக்கியமான ஓன்று. ஷாப்பிங், பயணம்,  சுற்றுலா, ஹாஸ்பிடல் போன்ற சின்ன சின்ன இடங்களுக்கு இதுவே பெஸ்ட். இதற்க்கு கீழாடையாக ஜீன்ஸ் அல்லது ஊதா நிற ஜெஃகிங்ஸ் நல்லா பொருந்தும். கருப்பு/வெள்ளை மட்டும் இல்லாமல் காட்டனில் வரும் அணைத்து வகை வெறும் (plain) குர்தி எளிமையான அழகிய தோற்றம் தரும்.


பார்ட்டி வெற் - டிசைனர்  (party wear / designer) குர்தி :


20181224 083822


வேலைப்பாடுகள் நிறைந்த குர்தி இருந்தால் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு போதும்,  ஜொலிக்கலாம். அதோடு பட்டுத் துணியில் ஜரிகை வேலைப்பாடு உள்ள குர்தி கோயில் தளம் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். கீழாடையாக பல்லாசோ பேண்ட்ஸ் (palazzo pants) இதற்க்கு எடுப்பாக அமையும்.


மேலும் படிக்க - சாரா அலிகானிற்குப் பிடித்த ஆடை வடிவமைப்பாளர்தான் நமக்கும் பிடித்த ஆடைவடிவமைப்பாளர்!


பட்டேர்ன் (pattern) குர்தி :


 20181224 091448


நேர்கோடு/சமக்கோடு போன்ற வடிவில் வரும் குர்தி அலுவலகம் மற்றும் கல்லூரி செல்லும் மாணவிக்கு  கண்ணியத் தோற்றம் (looks) தரும். இதற்க்கு லெக்கிங்ஸ்/ஜெஃகிங்ஸ் கலக்கலாக இருக்கும்.


அசிம்மெட்ரிக் (Asymmetric)  குர்தி :


20181224 083640


அசிம்மெட்ரிக் குர்தி என்பது அடிப்பாகம் நேராக அமையாமல், முன்னும் பின்னும் இருக்கும்.  இவை கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றின் காரணமாக ஏற்படும் இறுக்கத்தை குறைக்கும். உடல் பருமனாக  இருப்பவர்கள் ஒல்லியாக காட்ட உதவும். ஜீன்ஸ், ஜெஃகிங்ஸ் இதற்க்கு நாகரீக தோற்றத்தை தரும்.


அனார்கலி  (Anarkali ) குர்தி :


20181224 083554


நேர்த்தையல் அல்லது வடிவத் தையல் குர்தி அல்லாமல் அனார்கலி குர்தி என்பது இளவட்டத்தின் சாய்ஸ். இவை கவுண் போல இருப்பதால் டீன் வயது பெண்களுக்கு பெரிதும் விருப்பம்.


ஹை- லோ  (High - Low) குர்தி:


20181224 083702


ஒரு எ-லைன் (A-line) குர்தியை விட ஹை-லோ குர்தி  இன்னும் மிக ஸ்டைலிஷ் ஆனா தோற்றத்தை தரும். இதற்கு நீங்கள் ஒரு ஜீன்ஸ் அல்லது ஜெஃகிங்ஸ் உடன் மேட்ச் செய்யலாம்.


மல்டிபில் ஸ்லிட்   (multiple front slit ) குர்தி :


20181224 083621


மேலும் ஒரு  குருதி ட்ரெண்டிங்கில் இருக்கு என்றால் அது மல்டிபில் பிரண்ட் ஸ்லிட்(multiple front slit ) குர்திகள் தான். இதை நீங்கள் ஒரு பாலாஸ்ஸோ பேண்ட்(palazzo pant) உடனோ அல்லது ஏதேனும் ஒரு அழகிய பாவாடை உடன் மேட்ச் செய்யலாம்.லாங் குர்தி - மிடில் ஸ்லிட்  (Long kurti with middle slit )


20181224 083800


நீளமான குருதியில் நடுவில் ஸ்லிட் இருப்பது இனொரு விதமான பேஷன். இதில்,போட்டம் வெர்   ஒரு ஜீன் அல்லது ஒரு ஸ்கர்ட் இருந்தால் ஒரு மாடர்ன் டச் இருக்கும்!


எ - லைன் குர்தி (A-line kurti ) -


20181224 083724


இது பழைய டிசைன் ஆக  இருந்தாலும் இதில் இன்னும் ஒரு கம்போர்ட் இருக்கென்றுதான் சொல்லவேண்டும். இதை, நீளமாக முட்டினியின் சிறிது கீழ் வரை அல்லது கொஞ்சம் முட்டியின் மேல் வரும்படி போட்டால் ஒரு சிம்பிள் லுக் தரும்.


குர்திக்கு மேலும் அழகு கூட பித்தான்களை (buttons)  கொண்டு கழுத்து பகுதியில் அலங்காரம் செய்யப்படுகிறது. காலர் கழுத்து,  போட் கழுத்து, போன்ற பல வகை கழுத்து வகை மேலும் கச்சிதமான தோற்றம் தரும்.


சௌகரிகத் தோடு, நாகரிகமாக இருப்பது, எளிமையான அழகிய தோற்றம் தருவது போன்ற அனைத்து பெண்ணிய எதிர்பார்ப்புகளை பூர்த்திச் செய்கிறது குர்தி. அனைத்து விதமான குர்திகளிலும் தல ஓன்று இருந்தால் போதும், எல்லா நாட்களிலும் மின்னலாம் .


கைக்கு அடங்கும் விலையில் தேவதை தயாராகிவிடுவாள்!!!


படங்களின் ஆதாரங்கள் - பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.